மடியுளாள் மாமுகடி என்ப

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை குறள் 617 மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள்.
குறள் 617
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் 
தாளுளான் தாமரையி னாள்.
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]

பொருள்
ஆள்வினை - முயற்சி; மகிழ்ச்சி
ஆள்வினையுடைமை -  முயற்சி உடைமை
மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.
உளாள் - இருப்பது
மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்
மா - கருமை
முகடி - mukaṭi   n. prob. id. Goddess ofMisfortune; மூதேவி
மூதேவி - mū-tēvi   n. மூ- +. 1. Goddessof Misfortune, as the elder sister of Lakṣmi;[இலக்குமிக்கு மூத்தவள்] துர்ப்பாக்கியத்தின் அதிதேவதை. (பிங்.) சீதேவி யாள்பிறந்த செய்யதிருப்பாற்கடலில் மூதேவி யேன்பிறந்தாள் முன் (தனிப்பா.i, 179, 1). 2. Deformed person; குரூபி. (W.)
என்ப - என்பது ஆகும்
மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.
இலான் - இல்லை என்றால்
தாள் - கால்; மரம்முதலியவற்றின்அடிப்பகுதி; பூமுதலியவற்றின்காம்பு; வைக்கோல்; முயற்சி; தாழ்ப்பாள்; படி; திறவுகோல்; ஒற்றைக்காகிதம்; சட்டையின்கயிறு; விளக்குத்தண்டு; விற்குதை; ஆதி; கடையாணி; வால்மீன்; சிறப்பு; கொய்யாக்கட்டை; தாடை; கண்டம்.
தாள் - முயற்சி
உளாள் - இருப்பது
தாமரையினாள் - லஷ்மி தேவி

முழுப்பொருள்
சோம்பல் இருப்பவர்களிடம் மூதேவி இருப்பாள். அதாவது சோம்பல் இருந்தால் அங்கே தூர்பாக்கியம் இருக்கும். கேடு இருக்கும். அதுப்போல சோம்பல் இல்லாதவனிடத்திலும் முயற்சி உள்ளவன் இடத்திலும் லஷ்மிதேவி இருப்பாள். அதாவது வளம் பெருகும். துன்பம் அகலும்.

உதாரணமாக ஒருவன் வீட்டில் சோம்பலில் மூழ்கி ஒன்றும் செய்யாமல் இருந்தால் அவனை உலகமே ஏசும் - இவன் ஒன்னும் செய்யாம சாப்ட்டு சாப்ட்டு தூங்ரான். தருத்ரம்னு திட்டுவார்கள். அங்கே அவனுடைய புகழ் குன்றுகிறது. அதுவே முன்னேற முயற்சி செய்பவனை பார்த்து போற்றும். அவனை பார் அவன் எப்படி படிபடியாக கடின உழைப்பின் மூலம் முயற்சி செய்து முன்னேறுகிறான் என்று பாராட்டும். அவன் புகழ் ஓங்கும். இப்படி முயற்சி செய்பவர்களை உலக மக்களும் தக்க நேரத்தில் தோள் கொடுத்து ஊக்குவிப்பர்.

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”மடியிலா அரசினான் மார்புளா ளோவளர்
முடியுளா ளோதெரிந் துணர்கிலா முளரியாள்” (கம்ப.எதிர்கோட் 8)

பரிமேலழகர் உரை
மா முகடி மடி உளாள் - கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடிஇலான் தாள் உளாள் என்ப - திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர். (பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர். இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

சாலமன் பாப்பையா உரை
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain