Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

குறள் 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]

பொருள்
பல்லார் - pallār   pron. பல்¹. Many persons; பலர்
முனியப் - முன் + இய
முன் - முன்பு
இய - இயைவு - iyaivu   n. இயை¹-. Union, joining together; சேர்க்கை, இணக்கம்; பொருத்தம் 
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.
இல - இல் - இல்லை
சொல்லுவான் - பேசுவான்
எல்லாரும் - கூட்டத்தில் கூடியுள்ள எல்லோராலும்
எள்ளல் - இகழ்தல்; நிந்தித்தல்; இழிவாகப்பேசல்; தள்ளல்; சிரித்தல்.
எள்ளப்படும் - சிரிப்புக்குள்ளாகி இகழப்படுவான்

முழுப்பொருள்
ஓர் இடத்தில் ஒருவருக்கு-இருவருக்கு மேல் கூடும் பொழுது அது பெரும்பாலாக ஒரு நிகழ்விற்காக இருக்கும். பலர் கூடும் இடங்களில் பலருடைய நேரம் அடங்கி உள்ளது. இருவர் மட்டும் சந்தித்து ஒரு மணி நேரம் (அல்லது ஒரு நாழிகை) பேசினால் அங்கே இரு மனித மணி நேரங்கள் செல்வாகிறது. அதுவே 20 பேர் கூடினால் ஒரு மணி நேரத்தில் 20 மணி நேரங்கள் செல்வாகும். எத்தனை பெருஞ்செல்வம் அந்த மணித்துளிகள்! அத்தகைய கூட்டு நேரத்தை மிகவும் விவேகமாக செலவிட வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

பலர் கூடி இருக்கும் இடத்தில் தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பம் ஆகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களை ஒருவன் சொல்வான் என்றால் அத்தகையவன் கூட்டத்தில் கூடிய எல்லோராலும் நகைப்புக்குள்ளாகி இகழப்படுவான்.

ஒப்புமை
பயனில மொழிவாயோ (கலி.69:11)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பம் ஆகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை. பொய்,குறளை,கடுஞ்சொல்,பயனில் சொல் என வாக்கின்கண் நிகழும் பாவம் நான்கனுள், பொய் துறந்தார்க்கு அல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின், அஃது ஒழித்து இல்வாழ்வாரால் கடியப்படும் ஏனை மூன்றனுள் , கடுஞ்சொல் இனியவை கூறலானும் , குறளை புறங்கூறாமையானும் விலக்கி, நின்ற பயனில் சொல் இதனான் விலக்குகின்றார் ஆகலின், இது புறங்கூறாமையின் பின் வைக்கப்பட்டது.)

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.).

மணக்குடவர் உரை
பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

மு.வரதராசனார் உரை
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

Thirukkural - Management - Communication - Meaningful Speech
The message in Kural 191 provides additional knowledge to the view expressed in Kural 196. A person who speaks unwanted, meaningless, and out of place words will be laughed at, criticized, and looked down by learned people. People who give importance to meaningful words or speeches will despise the person who appreciates meaningless conversations.

To disgust people with empty words 
Is to be despised  by all.

No comments:

Post a Comment