Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அஞ்சுவ தோரும் அறனே

குறள் 366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை 
வஞ்சிப்ப தோரும் அவா.
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அஞ்சுவது - அஞ்சுதல் - பயப்படுதல்

ஓரும் - ஓர்அசைச்சொல்

அறனே - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்

ஒருவனை - ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.

வஞ்சம் - கபடம்; பொய்; கொடுமை; வாள்; வஞ்சினம்; பழிக்குப்பழி; மாயம்; சிறுமை; அழிவு; மரபு; பிரபஞ்சம்.

வஞ்சிப்பது - வஞ்சித்தல் - ஏமாற்றுதல்

ஓரும் - ஓர்அசைச்சொல்

அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.


அஞ்சுவ தோரும்  -> அஞ்சுவது ஓரும் –> ஆசையென்பதற்கு அஞ்சி வாழுதல் (ஓரும் என்பது அசைச்சொல்).
அஞ்சுவ -> அஞ்சி வாழ்வது [அச்சம் / பயம்].

அறனே -> அறமாகும்; சிறந்தது. (அறம் என்றால் நேர்மை என்றுப் பொருள்)
ஒருவனை -> ஏனெனில் ஒருவரை.

வஞ்சிப்பது ஓரும் -> வஞ்சித்து பிறந்திருக்கும் பாதையில் செலுத்துவது (ஓரும் என்பது அசைச்சொல்).

ஓரும் [தோரும்] -> ஆசை நிலை.

அவா -> அது ; ஆசை.

முழுப்பொருள்
ஒருவன் தன் மெய்யுணர்தலை (வாய்மை வேண்டலை) நோக்கி செல்கையில் அவனை அறியாமலே அவன் தன்னை மறந்த நேரத்திலோ அல்லது சோர்ந்த நேரத்திலோ (இனிமையான கள் போன்று) அநாதியாய் (அநாதையாக) ஆசை அவனுள்ளே புகுந்து விடும். 

பின்னர் அவனை விழிக்கச்செய்து அவனை கெடுத்து அவனது வாய்மை வேண்டலை நோக்கி செல்லும் பயணத்தை கெடுத்துவிடும். அவனை மறுபடியும் அவன் துவங்கிய இடத்திற்கே (அறியாமை) கொண்டு வந்து விடும். 

ஆக, அத்தகைய வல்லமை படைத்த ஆசையை ”அவா” என்கிறார் திருவள்ளுவர். ஆக, மெய்யுணர்தலை, வாய்மைவேண்டலை இடைவிடாதுப் பயின்று செல்ல அவ்வவாவை (ஆசையை) அஞ்சிக் (பயந்து) காப்பதே துறவறமாவது (அறமாகும் / சிறந்ததாகும்).  ஆதலால் வஞ்சிக்க வல்ல எல்லா ஆசை நிலைகளை அஞ்சி வாழ (இருக்க) வேண்டும்.

உலகியல் வாழ்க்கையில் கூட ஒருவர் ஒரு குறிக்கோளை நோக்கி செல்லும் போது வெற்றி நோக்கிய விளிம்பில் தோல்வி ஏற்படுதல் வேதனையைத் தரும். அதற்கு காரணம் அவாவினால் வந்த கவனச்சிதறலாகவே இருக்கும். அவாவே ஒருவனை அங்கு வஞ்சித்து இருக்கும். Falling from the cliff என்பார்கள். மிகுந்த வலியை தரும். ஆதலால் ஆசைகளை அஞ்சு.

---------------------------------------------------------------------------------------------------------


ஆசையென்பது ஒருவரை வஞ்சித்து, மெய்யுணர்வை நோக்கிச் செல்லும் நோக்கை நீர்த்துப் போகச் செய்யும் வஞ்சகன். ஆதலால் அந்த வஞ்சகனுக்கு அஞ்சி வாழ்வதே அறமென்கிறார் வள்ளுவர்.

இதனால் அவாவைக் குற்றமுள்ளதாகக் காட்டி, அந்த குற்றத்திலிருந்து நீங்கலே அறமென்றும் காட்டுகிறார் வள்ளுவர்.

இந்த குறளிலும், ஒருவரை பிறப்பின் கண்ணே வீழ்த்துவது அவா என்று பரிமேலழகர் உரைசெய்துள்ளார். அதையே அவா செய்யும் வஞ்சகமாகக் காட்டுகிறார். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்று அறிவுடைமை அதிகாரத்திலும் சொல்லப்போகிறார்.  மூவாசைகளை விட்டொழித்து முத்தி நெறி முயல்வோருக்கே, “யாமார்க்கும் குடியல்லோம்” என்னும் அப்பரின் உறுதி இருக்கும்.
இன்றெனது குறள்:
ஆசையாம் வஞ்சகனுக் கஞ்சிவாழ்தல் வாழ்விலறம்,
ஆசையற வாழும் திறம்.

“அஞ்சுகிறாயா?” என்று அவர் கேட்டார். “இப்புவியே அஞ்சுபவர் அஞ்சாதோர் என இருவகைப்பட்ட மானுடருக்கானது. தனித்தனிப்பாதைகள்.” இருளுக்குள் அவருடைய பற்கள் சிரிப்பில் மின்னி அணைந்தன. “அஞ்சுதல் உன்னை குடும்பத்தவன் ஆக்கும். விழைவுகளால் நிறைக்கும். அள்ளி அள்ளி குவிக்கவைக்கும். அடைந்ததை அறியமுடியாது அகவிழிகளை மூடும். அஞ்சாமை உன்னை யோகியாக்கும். அறியுந்தோறும் அடைவதற்கில்லை என்றாகும்.”

பரிமேலழகர் உரை
ஒருவனை வஞ்சிப்பது அவா - மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே விழித்துக் கெடுக்கவல்லது அவா, அஞ்சுவதே அறன் - ஆகலான், அவ்வவாவை அஞ்சிக் காப்பதே துறவறமாவது.  (ஓரும் என்பன அசைநிலை, அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின் , அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது வாய்மைவேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம்என்பதூஉம் கூறப்பட்டன.). 

மு.வ உரை
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: அவா ஒருவனை வஞ்சிப்பது - ஆசை ஒருவனை வஞ்சிப்பது; அவாவே அஞ்சுவது -ஆகலான்) அவாவே அஞ்சத் தக்கது.

அகலம்: ‘ஓரும்’ இரண்டும், ஏகாரமும் அசைகள். தாமத்தர் பாடம் ‘அஞ்சுவ தோரு மவாவே’. நச்சர் பாடம் ‘அஞ்சுவ தோரு மறிவே’. தாமத்தர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: அவாவினை விடுதலே மக்கள் கடமை.


English Meaning - As I taught a kid - Rajesh
One should beware that desires/distractions betray us. Hence, one should be fear desires/distractions when you want to achieve a goal. 
When one is working towards achieving a goal or moksha, one should remember that desires are distractions. These distractions would deter us from attaining the goal or moksha. When we don't attain the goal, Just like falling from somewhere middle of the mountain, we would go through lot of distress/pain. Also, we would have to start from scratch again. 

Questions that I ask to the kid
What should one fear or be conscious of ? What betrays us?

No comments:

Post a Comment