நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்

 

குறள் 917
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்
[பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்]

பொருள்
நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.

நெஞ்சம்நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

இல்லவர் - இல்லாதவர் 

தோய்தல் - முழுகுதல்; நனைதல்; நிலத்துப்படிதல்; செறிதல்; அணைதல்; உறைதல்; கலத்தல்; பொருத்துதல்; முகத்தல்; கிட்டுதல்; ஒத்தல்; அகப்படுதல்; நட்டல்; துவைச்சலிடுதல்.

தோயார் - தம்மை ஈடுபத்திக்கொள்ளார்

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.

நெஞ்சில் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

பேணி - பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

புணர்பவர் - புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள்

தோள் - புயம்; கை; தொளை

முழுப்பொருள்
மாட்சிமையற்றவர்கள் அறிவற்றவர்கள் நீதியற்றவர்கள் அழிவின்மைகொண்டவர்கள் வரையறையற்றவர்கள் கற்பற்றவர்கள் மனவடக்கமற்றவர்கள் கவனமற்றவர்கள் தம்மை விலைமாதர்களுடன் ஈடுபடுத்திக்கொள்வார்கள்.  இவ்விலைமாதர்கள் பிறரிடம் பொருளை கவரும் பொருட்டு தங்களை அலங்கரித்துக்கொண்டு பிறருடன் புணருவர். மனவடக்கம் இல்லாதவரே அவர்களுடன் கூடுவர்.

உள்ளம் வேறொருவர்பால் இருக்க, வஞ்சத்தால் தம்மோடு உறவுகொள்ளும் விலைமாதரின் கருத்தை அறியாதோர், ஆராய்ந்து நன்றாகத் தெரிந்த நிலையினும் தீவினைமிக்க பிறப்பினை உடையவர் என்பதை கூறும் நாலடியார் பாடல்:

“உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார் 
கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம்” 
என்னும் நாலடியார் (380) பாடல்.

கம்பரும் இதையே இவ்வாறு கூறுகிறார். 
“விலைநினைந் துளவழி விலங்கும் 
வேசையர் உலைவுறும் மனமென” (கம்ப.கார்காலப்.12)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நெஞ்சின் பிற பேணிப் புணர்பவர் தோள் - நெஞ்சினாற் பிறவற்றை ஆசைப்பட்டு அவைகாரணமாகக் கொடுப்பாரை மெய்யாற் புணரும் மகளிர் தோள்களை; நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் - நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர். (பொருளும் அதனால் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்சு அவற்றின் மேலதாகலின், புணர்வது உடம்பு மாத்திரம் என்பது அறிந்து, அது வழி ஓடாது நிற்கும் நெஞ்சினையுடையார். தோயாமையின், அஃதிலார் 'தோய்வர்' என்றார்.).

மணக்குடவர் உரை
நிறையுடைய நெஞ்சில்லாதார் தோய்வர்: இன்பமில்லாத பிறவாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பிவைத்து அன்புற்றார் போலப் புணருமவரது தோளினை. இது நிறையில்லாதார் சேர்வரென்றது.

மு.வரதராசனார் உரை
நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.

சாலமன் பாப்பையா உரை
பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.

No comments:

Post a Comment