ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப

 

குறள் 918
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு
[பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்]

பொருள்
ஆயும் -  ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.

அறிவினர் - அறிவு உடையோர் 
 
அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))

அல்லார்க்கு - இல்லாதவர்க்கு 

அணங்கு - தீண்டிவருத்தும்தெய்வப்பெண்; தெய்வப்பெண் பத்திரகாளி தேவர்க்காடும்கூத்து; அழகு விருப்பம் மயக்கநோய்; அச்சம் வருத்தம் கொலை கொல்லிப்பாவை பெண் வடிவு

என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

மாயை -- மூலப்பிரகிருதி; விந்து, மோகினி; மாயேயம்என்னும்மூவகைப்பட்டமலம்; மாயாபஞ்சகத்துள்ஒன்றாகியமாயை; பொய்த்தோற்றம்; மாயவித்தை; வஞ்சகம்; அமானுடசத்தி; காளி; பார்வதி; காண்க:அசுத்தமாயை; மாயாதேவி; மாயாபுரி; திரோதானசத்தி; ஒருநரகவகை.

மாய - மாயம் - மாயை; வஞ்சனை; பித்தளை; பாசாங்கு; அறியாமை; கனவு; பொய்; நிலையின்மை; வியப்பு; அழகு; தீமை; கயமைத்தன்மை; கறுப்பு; உயரம்; நீளம்; தொகை.

மகளிர் - பெண்டிர், பெண்கள், மாதர்

முயக்கு - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.

முழுப்பொருள்
ஒரு விலைமாதர் தன் பொய் உடம்பின் அழகினால் கவர்ந்து பின்பு புணர்ந்து பின்பு பொருட்களை பறித்து வஞ்சிக்கிறாள் என்பதை அறிந்து ஆராயாத அறிவில்லாதவர்கள் விலைமாதர்களுடன் கூடுகின்றனர். அறிவில்லதவர்கள் அழகை காட்டி மயக்கும் கொல்லிபாவைகளிடம் சிற்றின்பம் நாடி மஞ்சத்தில் முயங்கி பின்பு பொருளை பறிகொடுத்து புகழை இழந்து உடல்நலத்தையும் இழந்து மனநிம்மதியையும் இழந்து துன்பத்தை வருவித்துகொள்கின்றனர். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கு” (புறநா.73:13-4)

பரிமேலழகர் உரை
மாய மகளிர் முயக்கு - உருவு சொல் செயல்களான் வஞ்சித்தலை வல்ல மகளிரது முயக்கத்தை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப - அவ்வஞ்சனை ஆய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்கு அணங்கு தாக்கு என்று சொல்லுவர் நூலோர். (அணங்கு - காமநெறியான் உயிர் கொள்ளும் தெய்வமகள்.தாக்கு -தீண்டல். இவ்வுருவகத்தான் அம்முயக்கம் முன் இனிதுபோன்று பின் உயிர் கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவுஎன்பது தோன்ற அவர்மேல் வைத்துக் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.).

மணக்குடவர் உரை
யாதானும் ஒரு பொருளை உள்ளவாறு ஆராய்ந்தறியும் அறிவுடையரல்லாதார்க்கு வருத்தமாமென்று சொல்லுவர், மாயத்தை வல்ல மகளிரது முயக்கத்தை. இஃது இவரை அறிவில்லாதவர் சேர்வரென்றது.

மு.வரதராசனார் உரை
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.

No comments:

Post a Comment