வேலன்று வென்றி தருவது மன்னவன்

குறள் 546
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்
[பொருட்பால், அரசியல், செங்கோன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வேல் - நுனிக்கூர்மையுடையஆயுதவகை; திரிசூலம்; ஆயுதப்பொது; ஆயுதவகை; முருகன்வேல்; வெல்லுகை; பகை; மரவகை; வெள்வேல்; உடை; மூங்கில்.

அன்று - அன்றே, third pers. sing. of அல்ல it is not that (but something else).

வென்றி - வெற்றி

தருவது - கொடுப்பது

மன்னவன் - மன்னன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

கோல் -  கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.

அதூஉம் - அதுவே

கோடல் - கொள்ளுகை; பாடம்கேட்கை; மனத்துக்கொள்ளுகை; வளைவு; முறித்தல்; வெண்காந்தள்.
கோடாது - வளையாது 

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

முழுப்பொருள்
ஒரு அரசருக்கு போரில் வேல் தரும் வெற்றி உண்மையான வெற்றியல்ல. அரசரின் வெற்றியென்பது தன் செங்கோலின் கீழ் நடைபெறும் நெறியான ஆட்சி தரும் வெற்றியும் பயன்கள் ஆகும். அதுவும் நேர்மை /அறம் தவறாது இருத்தல் வேண்டும். அதுமட்டுமின்றி ஒரு நாட்டின் அரசன் போரில் வெற்றிப்பெற்று வரும் புகழை விட அவன் அந்நாட்டுக்கும் அந்நாட்டுக்கும் உழைத்து தன் கடமைகளை ஆற்றி நாட்டை வளப்படுத்தி பாதுகாத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி முன்னேற்றினால் அவன் பெறக்கூடிய புகழ் பல காலம் நிலைத்துநிற்கும். 

ஆதலால் போரில் வேல் கொண்டு மக்களை காப்பாற்றுவது மக்களையும் நாட்டையும் பாதுக்காக்கும் ஒரு வேலை மட்டுமே என்பதை அரசர்கள் உணரவேண்டும். அதுவே அரசாங்கம் ஆகிவிடாது என்கிறார் திருவள்ளுவர். இன்றைய கால கட்டங்களில் இந்தியா போன்ற நாடுகளில் நாட்டின் இராணுவத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மிக மிக அதிகம். மாறாக கல்வி சுகாதாரம் போன்ற துறைகளுக்கு தேவைக்கு மிக குறைவாகவே முதலீடுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்தியாவின் இன்றைய நிலைக்கு அதுவும் ஒரு காரணமாகும். 

அரசன் நீதி தவறியதால் கண்ணகி மதுரையை எரித்தாள் என்று சிலப்பதிகாரத்தில் பார்த்தோம். பாண்டிய மன்னன் எத்தனை வெற்றி பெற்றான் என்பதை இங்கு நாம் பார்க்கவில்லை ஏனெனில் போரில் தோல்வி என்பது நடக்க கூடியது. அதனை மக்கள் பொறுப்பர். அடுத்த முறை போரில் வெற்றி பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணக்கூடும். ஆனால் நீதி / அறம் தவறினால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மஹாபாரதத்தில், அஸ்தினபுரி அரசன் துரியோதனன் அரசாள்வதை விட போர் புரிவதிலேயே ஆதீத நாட்டம் கொண்டான். அவனுக்கு அன்றாட அலுவல்கள் சலிப்பூட்டின. அதுவே அவன் அரசாள்வதில் கவனம் செலுத்தி இருந்தால் அவனுக்கு ஆக்குவது எவ்வளவு கஷ்டம் என்பது தெரிந்து இருக்கும். ஆதலால் அழிவை உண்டாக்கும் போரை விரும்பி இருக்க மாட்டான். 

மேலும், இன்றைய (2021) காலக்கட்டங்களில் உதாரணமாக சொன்னால், இந்தியாவில் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க-வின் மோடி அரசு உலகெல்லாம்  உள்ள நாடுகளுக்கு கொரோனா (covid) தடுப்பூசிகளை தயாரித்து விநியோகித்து தனக்கும் நாட்டுக்கும் நற்பெயர் (என்னும் செல்வத்தை) (மோடிக்கு brand building) ஈட்ட மூற்பட்டார். ஆனால், அவருடைய அரசின் அலட்சியத்தால் கொரோனா-வின் இரண்டாம் அலை மிக மிக மோசமாக இந்தியாவை தாக்கியுள்ளது. தடுப்பூசிகளை உள்நாட்டு மக்களுக்கு விநியோகம் செய்யாமல் வெளிநாட்டினருக்கு ஏற்றுமதி செய்தார், தடுப்பூசிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பெரிய அளவில் முனைப்புக்காட்டவில்லை. சமூக இடைவெளி கடைப்பிடிக்கவேண்டிய காலக்கட்டங்களில் பல மாநிலங்களில் தேர்தல் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டும் அதில் பேரணிகளை நடத்தினார். இத்தகைய அலட்சியத்தாலும் மேம்போக்காலும் இந்தியாவில் சராசரியாக அதிகாரப்பூர்வமாக நான்கு லட்சம் மக்கள் தினமும் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு ஆளாகிறார்கள். அதிகார்ப்பூர்வ கணக்கு மட்டும் நான்கு லட்சம். ஆனால் உண்மையான எண்ணிக்கை குறைந்தது இருபது லட்சம் இருக்கும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை, சுடுகாடுகள் நிரம்பி வழிகின்றன. 25 வயது இளைஞர்கள் எல்லாம் கொரோணாவுக்கு இறக்கிறார்கள். மக்கள் இப்படித் துன்பத்தில் அழுது விழும் கண்ணீருக்கு இந்த அரசாங்கம் கண்டிப்பாய் விலைக்கொடுக்கும். முதலாவதாக மோடி இத்தனை ஆண்டுகளாக ஈட்டிய அத்தனை நற்பெயரும்  (Brand Modi) கெட்டுப்போகும் என்பது தின்னம். மேலும் இது இந்தியாவிற்கும் கெட்டப்பெயரை வாங்கித்தருகிறது. 

மேலும், சரியான நிர்வாகம் செய்யவில்லை என்றால் 
செல்வத்தைத் தேய்க்கும் படை” என்பதை நினைவில் கொள்க

இக்குறளில் ஒரு கவனிக்கத்தக்க சொல், “அதூஉங்” என்பதுதான். பேச்சு வழக்கில் இருப்பது போல், “இதைத் தருவது இதுதான், அதுவும் இப்படி இருக்குமானால்” என்பதில் ஒரு நாடக வசனத்தன்மை இருப்பது இரசிக்கத்தக்கது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின்.
(கோல் செவ்விதாயவழியே 'வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார். 'மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா.55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க).

மணக்குடவர் உரை
அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின். இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.

மு.வ உரை
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.

English Meaning - As I taught a kid - Rajesh
The fame and publicity that a King yields by military victories through war is not a real thing. If a King performs his duties effectively thereby lifting livelihood of people and prosperity of nation will receive longstanding greatness and fame. Hence, for a leader, lifting people and nation is the top priority not military

Questions that I ask to the kid
What is not the real victory of a King?
Is Military victory the King's main priority ?
What is and what is not the main priority of a King?

No comments:

Post a Comment