மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

குறள் 556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]

பொருள்
மன்னர்க்கு - மன்னர் - மன்னன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

மன்னுதல் - மன்னு-தல் - maṉṉu-   5 v. intr. 1. To bepermanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2.To remain long; to stay; தங்குதல். உத்திரைவயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து

செங்கோன்மை - அரசநீதி; Righteous rule

அஃது - அஃறிணை ஒருமைச்சுட்டு; அது அப்படி

இன்றேல் -  இல்லை என்றால்

மன்னாவாம் - நிலைபெறாது 

மன்னர்க்கு மன்னர் - மன்னன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.

முழுப்பொருள்
ஒரு அரசர் அரசராக அப்பதவியில் இருப்பதனால் அவருக்கு புகழ் வந்துவிடாது. அரசரின் கீழ் அறத்தின் வழி நடைப்பெற்ற நெறியான ஆட்சியே அரசருக்கு நிலைபெறும் புகழை தரும். அரசரின் ஆட்சி நெறி தவறினால் அரசரின் புகழும் குன்றிவிடும். ஆதலால் நான் அரசன், நான் மந்திரி என்று கர்வம் கொள்ளாமல் தன் வேலையை செவ்வென செய்யதல் வேண்டும். 

இது அரசர் மந்திரிகளுக்கு மட்டும் பொருந்தாது. எல்லோருக்கும் பொருந்தும். அலுவகத்தில் மேலாளர், நிர்வாகளார், குழு தலைவர் என்றும் நிர்வாகத்தின் தலைவர் போன்ற பதவிகளால் ஒருவருக்கு புகழ் கிடைக்காது. அவர் அப்பதவியில் செய்த செயல்களின் அடிப்படையிலேயே புகழ். ஆதலால் செயலே புகழுக்கு காரணம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம், அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப்புகழ்கள் தாம் உளவாகா.
(விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் 'இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக' (நான்மணி 17 ) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால்ஒளி மன்னாவாம் : ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று.வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின்,பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மைஇல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும்கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அரசர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மை; அஃதில்லை யாயின் அரசர்க்கு ஒளி நிலையாதாம். முறை செய்யாமையால் அவன் நிலைபெறுதல் அருமையெனக் குற்றங் கூறுவார் முற்படப் புகழில்லையாம் என்றார்.

மு.வரதராசனார் உரை
அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்

சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

No comments:

Post a Comment