காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்

குறள் 1164
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்
[காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்]

பொருள்
காமக் -  காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

கடல் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி.

மன்னும் மன்னில்மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

உண்டே - உண்டு - உள்ளதன்மையைஉணர்த்தும்ஐம்பால்மூவிடத்திற்கும்உரியஒருகுறிப்புவினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

நீந்தும் - நீந்துதல் -நீரில்மிதந்துசெல்லுதல்; கடத்தல்; பெருகுதல்; வெல்லுதல்; கழித்தல்.

ஏமப் - ஏம்புதல் - களித்தல், மனம்கலங்குதல், வருந்துதல், மயக்கமடைதல்.
ஏமம் - இன்பம்; களிப்பு; மயக்கம்; காவல்; இரவு; பொன்; திருநீறு; இடுதிரை; பாதுகாவல்; வலிமை; சேமநிதி.

புணை - தெப்பம்; மரக்கலம்; உதவி; மூங்கில்; விலங்கு; ஈடு; ஆள்பொறுப்பு; ஒப்பு.

மன்னும்மன்னில் - மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

இல் - இல்லை

முழுப்பொருள்
1) அகலத்திலும் ஆழத்திலும் கடலளவு காமம் தன்னில் இருக்கிறது என்று தலைவி கூறுகிறாள். ஆனால் அதில் நீந்தி இன்பம் களிக்க வேண்டிய மரக்கலம் (தோணி) என்றாகிய என் தலைவன் இங்கு என்னுடன் இல்லை, பிரிந்து இருக்கிறான் என்று துன்பத்தில் வருந்துகிறாள் தலைவி.

2) இக்குறளுக்கு இன்னொரு பொருளும் பொருந்துகிறது. தலைவனின் பிரிவில் இருக்கும் நான்/தலைவி காமம் தரும் கடலளவு துன்பத்தால் வாடுகிறேன். அதை கடக்க தேவைப்படுகின்ற வலிமையான மரக்கலம் (தோணி)யாகிய தலைவன் இங்கு என்னுடன் இல்லை.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

“கண்ணும் வாளற கைவளை சோருமால்
புண்ணும் போன்று புலம்புமென் நெஞ்சரோ
எண்ணில் காமம் எரிப்பினும் மேல்செலாப்
பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே” (சீவக சிந்தாமணி)

“கண்ணிலாம் கவினொளிக் காளை மார்திறத்து
உண்ணிலா எழுதரு காம ஊழெரி
வெண்ணிலாச் சுடர்சுட விரிந்து நாண்விடாப்
பெண்ணலாற் பிறிதுயிர் பெரிய தில்லையே” (சூளாமணி)

பரிமேலழகர் உரை
(தலைவியர் காமக்கடற் படார், படினும், அதனை ஏற்றபுணையான் நீந்திக் கடப்பார் என்ற தோழிக்குச் சொல்லியது.) உண்டு காமக்கடலே - யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே; அது நீந்தும் ஏமப்புணை இல் - அதனை நீந்தும் அரணாகிய புணை இல்லை. (இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை. 'தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய் நீயும ஆயிற்றிலை' என்பது கருத்து.)

மணக்குடவர் உரை
காமக்கடல் நிலையாக உண்டே; அது கடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே. இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லையெனத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை.

சாலமன் பாப்பையா உரை
காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.

No comments:

Post a Comment