படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்

குறள் 1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
படல் - ஓர்அடைப்புவகை; மறைப்புத்தட்டி; பூந்தடுக்கு; பாய்மரத்தில்இணைக்கப்பட்டகுறுக்குக்கட்டையிலுள்ளகுழி; உறக்கம்.

ஆற்றுதல் -   வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றா - ஆற்றாமல் - பொழியாமல்

பைதல் - இளையது; சிறுவன்; குளிர்; துன்பம்.

உழக்கும் - உழ-த்தல் - uḻa-   4 v. intr. 1. To suffer;to experience sorrow, pain, trouble or fatigue;வருந்துதல். அருந்துத லின்றி யலைகட லுழந்தோன்(மணி. 16, 74). 2. To be accomplished, asin an art; பழகுதல் (சீவக. 597.) 3. To try,make an effort; பிரயாசப்படுதல் செயற்றலைநின்றுழப்பவர்கள் (தணிகைப்பு. நாட்டு 130).--tr. Toconquer; வெல்லுதல் பாடகச் சீறடி பரற்பகையுழவா (சிலப். 10, 52).

கடல் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி.

ஆற்றுதல் -   வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றா - ஆற்றாமல் - பொழியாமல்

காம - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
முன்பு ஒரு குறளில் தலைவியின் காதல் கடலளவு ஆழமும் அகலும் கொண்டது என்று பார்த்தோம் [குறள் 1164 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல்]. ஆனால் அப்படிப்பட்ட காதலை தந்தது தலைவியின் கண்கள். ஏனெனில் அவையே தலைவனை காணச்செய்தது. ஆனால் இப்பொழுது தலைவன் தலைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டான். ஆதலால், தலைவி, காதல் தரும் நோயால் அவதிப்படுகிறாள். இக்காமநோய் கடலைவிட பெரிதாக உள்ளது. கடலளவு காதலை தந்த இக்கண்களே இக்கடலை விட பெரிதான காமநோய்க்கு காரணமாக அமைகின்றன. இந்த காமநோயால் இக்கண்களும் உறங்காமல் துன்பப்படுகின்றன.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கந்தர வந்த காம ஒள்ளெரி” (குறுந் 305:11)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) கடல் ஆற்றா காமநோய் செய்த என்கண்- எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காம நோயைச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும் -அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன. (காமநோய் காட்சியான் வந்ததாகவின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது)

மணக்குடவர் உரை
கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள் தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன. இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

சாலமன் பாப்பையா உரை
கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment