Skip to main content

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

குறள் 582
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எல்லார் - ellār   n. எல் Devas of Hindumythology; தேவர் பனிவானத் தெல்லார் கண்ணும்(சீவக. 364).  
எல்லார்க்கும்  - எல்லோருக்கும்
எல்லாம் - ellām   s. all, the whole, முழுவதும்
நிகழ்பவை - நிகழ்காலம்; நிகழ்ந்துக்கொண்டு இருக்கும்
எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.
வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு.
வல்லறிதல் - வல் + அறிதல் - விரைவாக அறிதல்
வேந்தன் - எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.
தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு.

முழுப்பொருள்
பாரபட்சமின்றி எல்லா வித மக்களிடத்திலும் (ஏழைகள், வேலையாட்கள், விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள், இராணுவவீரர்கள், அமைச்சர்கள், அரசர்கள்) [இம்மூவரை கம்பர் அரசியல் படலத்தில் “ஏவரும் இனிய நண்பர் அயலவர், விரவார் என்று மூவகை இயலோர் யாவர்” என்ற வரிகளில் குறிக்கிறார்]  பற்றியும், அவர்கள் (பொது) வாழ்விலும் தொழிலிலும் நிகழ்ந்துக்கொண்டு இருக்கும் நல்லவை கெட்டவை என்று முழுவதுமாக (அதனுடைய இன்றைய பாதிப்பு, நாளைய பாதிப்பு) பற்றியும் எல்லா காலங்களிலும் ( நாடு செழிப்பாக இருக்கும் காலங்களிலும், மந்தமாக இருக்கும் காலங்களிலும்)  விரைந்து (தகவல் சொல்லும் ஒற்றர்கள் மூலம்) தெரிந்துக்கொள்வது அந்த நாட்டை ஆளும் அரசனின் தொழிலாகும். 

அதை தெரிந்துக்கொள்வதுடன் அரசருடைய கடமை முடியாது. அதற்கான திட்டங்களையும் தீர்வுகளையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். ஒரு பிரச்சனை வருவதற்கு முன்னர் முடிந்த அளவு அறிவு பூர்வமாக அதனை அறிந்துக்கொண்டு அதனை தடுக்கவோ அல்லது அதனில் இருந்து தற்காத்துகொள்வது சிறந்தது. ”வரும் முன் காப்போம்” என்று சொல்வது உண்டு. 

இதனை விரைந்து அறிதல் மிக முக்கியம். பல அடுக்குகள் கொண்ட ஆட்சியில் அது அவ்வளவு எளிது அல்ல. ஆதலால் ஒற்றர்கள் இருப்பின் அது விரைவு தன்மைக்கு ஏதுவாக இருக்கும். 

உதாரணமாக: 1) ஒரு நாட்டில் பருவமழை, வெள்ளம், பஞ்சம் பற்றிய முன் கணிப்பு சொல்ல விஞ்ஞானிகள் உள்ளனர்.  2) ஒரு நாட்டின் வணிக சந்தை பற்றிய கணிப்பை சொல்ல வணிக மேதைகள் உள்ளனர். இவர்களுடன் இணைந்து விரைந்து வேலை செய்வதே சிறந்தது. 3) சுகாதாரத்துரையில் டெங்கு (Dengue) போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதிபடுகின்றனர். இக்காய்ச்சல் முதல் முதலாக வந்ததை ஒரு ஒற்றர் (இங்கே Informer என்று சொல்லலாம்) அறிந்துக்கொண்டு அக்காய்ச்சல் மற்ற இடங்களுக்கும் பரவாமல் இருக்கவும், வந்தால் விரைந்து சிகிழ்ச்சை கொடுக்க தேவையான முன் ஏற்பாடுகளை கவனிக்கலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல் - எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்; வேந்தன் தொழில் - அரசனுக்கு உரிய தொழில்.
('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விருதொழிற்கும் அறிதல் காரணம் ஆதலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகைவராகியும் நட்டாராகியும் மத்திமராகியும் உதாசீனராகியும் இருக்கின்ற அரசர்க்கும், அவர் சுற்றத்திற்கும், தம் சுற்றத்திற்கும், அறம் பொருள் இன்பங்களைப் பற்றி நிகழ்பவை எல்லாவற்றையும் நாடோறும் பிறர் அறிவதன் முன்னர்த் தான் ஒற்றால் விரைந்து அறிதல் வேந்தனது தொழில் என்றவாறு.

மு.வரதராசனார் உரை
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை
பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.


English Meaning - As I taught a kid - Rajesh
An espionage should gather all the information about all kinds of people (poor, employees, farmers, weavers, traders, military men, ministers, etc.) Without any prejudice /bias / partiality during both good and bad times and promptly pass the information to the king. It is duty of the king to swiftly act upon those information. King's duties doesn't end up in gather the information. Prompt action after diligently analyzing it is essential. This way one can prevent any upcoming issues or quickly resolve current issues. 

Questions that I ask to the kid
How should an espisonage act? What is the duties of King w.r.t the information collected by the espionage agent?

Comments

Popular posts from this blog

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kurals grouped/labeled in single page - Kural mostly not in order பாயிரவியல் 01 கடவுள் வாழ்த்து  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 02 வான்சிறப்பு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 03 நீத்தார் பெருமை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 04 அறன்வலியுறுத்தல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] இல்லறவியல் 05 இல்வாழ்க்கை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 06 வாழ்க்கைத் துணைநலம்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 07 மக்கட்பேறு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 08 அன்புடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 09 விருந்தோம்பல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 10 இனியவைகூறல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 11 செய்ந்நன்றி அறிதல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 12 நடுவு நிலைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 13 அடக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 14 ஒழுக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 15 பிறனில் விழையாமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ]...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

குறள் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ். வையத்துள் -  பூமி, உலகத்தில் வாழ் - முறைமை வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாங்கு - vāngku   s. A dagger, பிச்சுவா. 2. [for.] A bench a seat, a board with legs, commonly வாங்குப்பலகை. வாங்கு - வளைவு; அடி; வசவு; பிச்சுவா; கால்களுள்ளபலகையாசனம் வாழ்வாங்கு   - முறைப்படி வாழ்வது; நெறி தவறாது வாழ்பவன் - வாழ்கின்றவன் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை...

மூதுரை - 02 - நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

மூதுரை - 02 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். பொருள் நல்லார் -  நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர். ஒருவர்க்குச் -  ஒருவர் செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். உபகாரம் - ஈகை; உதவி காணிக்கை மகிழ்ச்சி கல் -  வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி. மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. எழுத்துப் - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம். போல் - ஓர்உவமவுருபு...