வேண்டின்உண் டாகத் துறக்க

குறள் 342
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் 
ஈண்டுஇயற் பால பல
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வேண்டின் - இன்பங்களை வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.
உண்டாகத் - உருவாக ?
துறக்க - துறவு - விடுதல்; இரகசியம்; வாய்ப்பானநிலை; வெளியிடம்; சன்னியாசம்; துறவியருக்குவிதித்துள்ளஅறம்.
துறந்தபின் - துறந்த பிறகு
ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம் வந்துறும்; இம்மை விரைவு புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது;
இயற்பால - முறையான இன்பங்கள்
பல - பல உள்ளன

முழுப்பொருள்
மெய்யான இன்பம் தனை ஒருவர் விரும்புவார் என்றால் அவ்வின்பம் உண்டாக எல்லா போலியான பொருள்களையும் ஆசைகளையும் காமகுரோதமோகங்களை  துறக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அப்படி ஒருவர் எல்லாவற்றையும் துறந்தால் அவருக்கு மெய்யான பல இன்பங்கள் தானாய் இயற்கையாக உண்டாகும். இங்கே உண்டாகும் என்னும் சொல்லை ஏன் பயன்படுத்தப்பட்டது என்றால், இத்தகைய பலன்கள் ஒரு நாள் துறந்து மறுநாள் கிட்டாது. இவை துறவறம் போல் பல காலம் கடைப்பிடிப்பாயின் பல நிலையான இன்பங்கள் இயற்கையாக பயக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை


பெருஞ்செயல்களுக்காக நாம் எழும்போது சிறியவை நமக்கு எதிராகத் திரள்வதில்லை, அவை சிதறி விலகிவிடுகின்றன. பிற பெரியவையே நிகரான ஆற்றலுடன் எழுந்து வந்து வழி மறிக்கின்றன. பெருங்கனவுகளை காக்கின்றன இரக்கமற்ற தெய்வங்கள். அவை விழிநகைக்க கைசுட்டி கேட்கின்றன, நீ எதை ஈடுவைப்பாய்? எதையெல்லாம் இழப்பாய்? நம் கனவின் மதிப்பை அதன்பொருட்டு இழப்பவற்றைக்கொண்டே அறிகிறோம்.” 

இங்கு சூழ்ந்துள்ள பொருட்களே நாம் அறியக்கூடிய மெய்மை. அப்பொருட்களுடன் நாம் கொண்டுள்ள உறவு துயரற்றதாகுதலே விடுதலை. நோய், பசி, மிடிமை எனும் மூன்றையும் வெல்லுதல் மட்டுமே மீட்பு என நாங்கள் நம்புகிறோம்” என்றார் வஹ்னர்.

எழுத்தாளர் போகன் சங்கர் தனது முகலில் தன்னுடைய தியான அனுபவத்தைப் பற்றி இப்படி ஒரு பதிவு இட்டார்

நான் எனது தியான அனுபவம் குறித்து இது பற்றியெல்லாம் நான் கேட்கும் குமாரன் ஆசானிடம் கேட்டேன்.எனக்கு அது ரமணரின் மரண அனுபவத்துக்கு ஒப்பானதாகத் தோன்றியது.அவர் என்னை ஒரு முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளச் சொன்னார்.எனக்கு அவர் என்னை அவமானப்படுத்துவதாகத் தோன்றியது.அவர் 'ரமணர் வந்து கேட்டிருந்தாலும் இப்படித்தான் சொல்லியிருப்பேன்"என்றார்.என் உடலில் பிரச்சினை ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் அது ஒரு epiphany ஆக இருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார்.ஒரு அகதரிசனம்.

ஆனால் அந்த தரிசனத்தைக் கண்டது எது?அடைந்தது எது?என்று கேட்டேன்.
உன் மூளைதான் என்றார்.

"உன் மொபைல் போனில் நிறைய ஆப்கள் உள்ளன.போனின் மெமரி குறைவாக இருந்தால் அவை சரியாகச் செயல்படாது.தேவையற்ற செயலிகள்,அவற்றின் கடந்த கால சுவடுகள்(cache memory) இவற்றை அழித்தால் அவை செயல்படும்.தியானத்தில் இதுவே நிகழ்கிறது.நிகழ்ந்திருக்கிறது.Life is nothing but memory and data.எந்த ஒரு genetic scientistஐயும் கேட்டால் சத்தியம் செய்து சொல்வான்.ஆகவே be careful with your memory.Know your data capacity and  limit and act accordingly.
Delete your memory. Delete yourself."

பரிமேலழகர் உரை
துறந்த பின் ஈண்டு இயற்பால பல - எல்லாப் பொருள்களையும் துறந்தால், ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையை உடைய இன்பங்கள் பல, வேண்டின் உண்டாகத் துறக்க - அவ் இன்பங்களை வேண்டின், அவற்றைக்காலம் பெறத் துறக்க. (அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள் காரணமாக மனம், மொழி, மெய்கள், அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன. இளமைக்கண் துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகலின், 'உண்டாகத் துறக்க' என்றார். இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன. இம்மைக்கண் துன்பங்கள் என்பதும் இலவாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டு என்பதாம்.).

மணக்குடவர் உரை
தன்னுயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டின், தன்னுடைமையெல்லாவற்றையுந் துறக்க; துறந்தபின் இவ்விடத்தே யியலும்பகுதியின பல. இஃது இம்மைப் பயன் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.

சாலமன் பாப்பையா உரை
பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
துறவும் சன்னியாசமும்
கீதையில் யோகம், துறவு, சன்னியாசம், தியாகம், வேள்வி ஆகிய யாவும் ஏறத்தாழ ஒரே கருத்திலேயே உபயோகிக்கப்படுவதை நாம் இங்குக் கவனிக்க வேண்டும். துறவு, சன்னியாசம் என்பன தாடியும் சடையும் வளர்த்துக் கொண்டு காட்டுக்குப் புறப்படுவதல்ல. துறவு என்பது வாழ்வைத் துறப்பதல்ல. உண்மையில் வாழ்வைத் துறந்தாலாகாது என்பதை வற்புறுத்த எழுந்ததே பகவத்கீதை. எது உண்மையான துறவு என்பதைக் கீதை தெளிவாகக் கூறுகின்றது. செய்யும் செயலின் பலனில் நாம் கொள்ளும் பற்றையோ ஆசையையோ துறப்பதே துறவு. அதுவே உண்மைச் சன்னியாசம், உண்மையான தியாகமும் அதுவேயாகும். ஆசைகளை ஞானமாகிய அக்கினியினால் எரிப்பதே வேள்வி. வேதங்களிலே பேசப்படும் வேள்விக்கும் இக்கருத்துப் பொருந்தும். மிருகங்களை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதுதான் வேள்வியென்றோ யாகமென்றோ கொள்ளாது நமது ஆசைகளாகிய விலங்குகளை ஞானமெனப்படும் அக்கினியிலே இட்டு எரிப்பதே வேள்வியும் யாகமும் எனக் கொள்வதே பொருத்தமாகும். 


ஆனால் ஏன் நீங்கள் துறந்துசெல்லமுடியாது என்கிறேன்? பிதாமகரே, வாழ்தல் இயல்பானது. அதற்கு எந்தத் தூண்டுதலும் தேவையில்லை. உயிர்களுக்குள் வாழ்வதற்குரிய ஆணையை பிரம்மன் பொறித்திருக்கிறான். துறத்தல் மானுடர் தேர்வது. அதற்கு அவர்களுக்குள் இருந்து ஆணை எழவேண்டும். அதற்குரிய பயன் என்னவென்று உள்ளம் தெள்ளிதின் அறியவேண்டும்.


“நான் துறப்பதனால் பயன்நிகழாதென்று எண்ணுகிறீரா?” என்று சற்று அடைத்ததுபோல் ஒலித்த குரலில் பீஷ்மர் கேட்டார். “ஆம்” என்றார் இளைய யாதவர். “ஏன்?” என்று பீஷ்மர் கேட்டார். “ஏனென்றால் இங்கு நிறைந்து அங்கு செல்பவர் அல்ல நீங்கள். இங்கு நிகழ்ந்து முடிந்தவரும் அல்ல.” பீஷ்மர் சீற்றத்துடன் “இல்லை, இதை நானே அறிவேன். நான் காடுகளில் ஒருகணம்கூட அஸ்தினபுரியையோ என் குடிகளையோ எண்ணாமல் பல்லாண்டுகாலம் வாழ்ந்திருக்கிறேன்” என்றார். இளைய யாதவர் “ஆம், அங்கெல்லாம் உங்கள் உள்ளத்திற்குகந்த அஸ்தினபுரி ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

பீஷ்மர் “இது அனைத்துமறிந்ததுபோல் பேசும் வீண்மொழி. அஸ்தினபுரியில் நான் மிகவிரும்பியது என் படைக்கலச்சாலையை. காட்டில் அதற்கிணையாக எதை உருவாக்கினேன்?” என்றார். இளைய யாதவர் “காங்கேயரே, அது நீங்கள் அஸ்தினபுரியில் உருவாக்கிய காடு. காட்டில் நீங்கள் அரசவையை உருவாக்கவில்லை என்று சொல்லமுடியுமா?” என்றார். பீஷ்மர் சிலகணங்கள் இமைக்காமல் நோக்கிவிட்டு விழிதாழ்த்திக்கொண்டார். இளைய யாதவர் “நீங்கள் துறந்து செல்ல இயலும், பிதாமகரே. ஆனால் தொடங்கிய புள்ளிக்கே மீளச்சுழன்று வந்துகொண்டிருப்பீர்கள். பெரும்பயனின்மையே அது” என்றார்.

English Meaning - As I taught a kid - Rajesh
If one wants to attain moksha or attain a goal, then one has to give up or eliminate the desires, anger, lust/distractions (Kama, Krodha, Moga). If one gives up untrue things or distractions and does his penance one automatically yields true things i.e. true happiness.

Questions that I ask to the kid
If one wants to attain a goal/moksha what should one do or give up? How will you earn the goal?

No comments:

Post a Comment