அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்

 

குறள் 909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
அறன் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

அறவினையும் - அறவினை - நேர்மையான தொழில்

ஆன்ற -  மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.

பொருளும் - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.

வினையும் வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

ஏவல் -  ஏவுகை, தூண்டுகை; கட்டளை; ஏவல்வினைமுற்று; ஓதுகை; பணிவிடை; பணியாள்; பிசாசைஏவிவிடுகை; வறுமை.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

செய்வார் -செய்வார்கள்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இல் - இல்லை 

முழுப்பொருள் 
பெண்ணின் / மனைவியின் கட்டளைகளை பிரதானமாக செய்யும் கணவன்மார்களிடம் அறச்செயல்களும் மாட்சிமைவாய்ந்த பொருளும்/செல்வமும் மற்ற வினைகளும் மற்ற இன்பங்களும் இருக்காது. மற்ற/பிறவினைகள் என்றால் மனைவியிடம் பெறக்கூடிய புணர்ச்சியின்பத்தை/சிற்றின்பத்தைத் தவிர மற்ற இன்பங்கள் ஏதும் அவனுக்கு கிடைக்காது.

இங்கே திருவள்ளுவர், தன் கடமைகள் தர்மங்கள் அறங்கள் என்னவென்று அறிந்தவன் அதையே செய்வான். அதை செய்தே பொருள் ஈட்டுவான், இன்பமும் அடைவான். ஆனால், பெண்ணின் கட்டளைகளை செய்பவனுக்கு தனது கடமைகளை செய்ய நேரமேது? அல்லது தனது கடமைகளை செய்பவனுக்கு பெண்ணின் கட்டளைகளை செய்ய நேரம் ஏது? அல்லது கணவன் தன் கடமைகளை செய்துக்கொண்டு இருந்தால் பெண் ஏன் கட்டளைகளை இடுகிறாள் அல்லது கட்டளைகளை பிறப்பிக்க நேரம் ஏது? 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறவினையும் - அறச்செயலும்; ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும்; பிறவினையும் - இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்; பெண் ஏவல் செய்வார்கண் இல் - தம் மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாகா. (புலன்கள் ஐந்து ஆகலின், 'பிற வினை' எனப் பன்மையாயிற்று. அவை நோக்கி அறச்செயல் பொருட் செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின் என்பதுதோன்ற அவற்றைப் பிரித்துக் கூறினார். இவை மூன்றுபாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறஞ்செய்தலும் அமைந்த பொருள் செய்தலும் ஒழிந்த காமம் நுகர்தலும் பெண்ணேவல் செய்வார்மாட்டு இல்லையாம். இஃது அச்சமில்லாராயினும் சொன்னது செய்வாராயின் இம்மூன்று பொருளும் எய்தார் என்றது.

மு.வரதராசனார் உரை
அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.

No comments:

Post a Comment