Index Pages

Wednesday, September 16, 2020

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

 

குறள் 907
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

ஏவல் - ஏவுகை, தூண்டுகை; கட்டளை; ஏவல்வினைமுற்று; ஓதுகை; பணிவிடை; பணியாள்; பிசாசைஏவிவிடுகை; வறுமை.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

ஒழுகும் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

ஆண்மையின் - ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை

நாணுடைப் - நாண் - எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்; வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

உடைமை -  உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

பெண்ணே பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை

உடைத்து - உடைதல் - இருக்கும்

முழுப்பொருள் 
தனது கடமைகளை ஆற்றாமல் பொருளை ஈட்டாமல், பெண்ணின்/மனைவியின் கட்டளைகளை செய்து ஒழுகும் ஒரு கணவனுக்கு திறமை / திராணி / வலிமை இல்லை என்றே பொருள். அத்தகையவனை கண்டு இவ்வுலகம் நாணும். இவனை காட்டிலும் இவன் மனைவியின் பெண்மையே பெருமை /வல்லமை வாய்ந்ததாக போற்றப்படும். இவன் கட்டளைகளை இயற்றினாலும், அவற்றின் பெருமை எல்லாம் அவன் மனைவியினையே சாரும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல்தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணி¢னையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து. ('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துக்கோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.).

மணக்குடவர் உரை
பெண்டிர் ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின், நாணமுடைய பெண்மையே தலைமை உடைத்தாம். இது பிறரால் மதிக்கப்படாரென்றது.

மு.வரதராசனார் உரை
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

சாலமன் பாப்பையா உரை
மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.

No comments:

Post a Comment