மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

 

குறள் 1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
[காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்]

பொருள்
மாதர் - பெண்; அழகு; பொன்; காதல்; ஓர்இடைச்சொல்.

முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்

ஒளிவிட - ஒளிவிடு-தல் - oḷi-viṭu-   v. intr. ஒளி¹ +ஆடு-. See ஒளிர்-. (திவா.)  
ஒளிர்-தல் - oḷir-   4 v. intr. prob. ஒளி¹. Toshine; to emit light; to be resplendent; ஒளிசெய்தல் உள்ளத்து ளொளிர்கின்ற வொளியே (திருவாச. 37, 5).  

வல்லையேல் - வல்லை - வலிமை; பெருங்காடு; மேடு; கோட்டை; வயிற்றுக்கட்டிவகை; வருத்தம்; மரவகை; புனமுருங்கை; வட்டம்; விரைவு.

காதலை - காதல் -  அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

வாழி - வாழ்கஎன்னும்பொருளில்வரும்வியங்கோள்சொல்; ஓர்அசைச்சொல்

மதி - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை.

முழுப்பொருள்
காதலன் நிலவைப்பார்த்து கூறுகிறான்: நிலவே! பெண்கள் குறிப்பாக என் காதலியின் முகம் போல் தோற்றப்பொலிவுக் கொண்டு ஒளி விசுவாய் என்றால் நீயும் என் காதலை அன்பை பெறுவாய். அதாவது ஒளி விசும் முகம் கொண்ட பெண்ணிடம் தனது மனதை தொலைத்துவிட்டான் காதலன். இதனை நிலவிடம் கூறுவதுப்போல் காதலியின் செவியில் படும் வண்ணம் காதலன் கூறியிருக்கலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) மதி வாழி - மதியே வாழ்வாயாக; மாதர் முகம் போல ஒளி விடவல்லையேல் காதலை - இம்மாதர்முகம் போல யான் மகிழும் வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலையுடையையாதி ('மறு உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய்', என்பதாம். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு.).

மணக்குடவர் உரை
மதியே! நீ இம்மாதர் முகம்போல ஒளிவிட வல்லையாயின் நீயும் எம்மாற் காதலிக்கப்படுதி. வாழி- அசை. இது மறுப்போயினதாய முகமென்று கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

சாலமன் பாப்பையா உரை
நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.

No comments:

Post a Comment