மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

 

குறள் 1119
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி
[காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்]

பொருள்
மலர் - பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர்.

அன்ன - அத்தன்மையானவை; ஓர் அஃறிணைப் பன்மைக்குறிப்பு வினைமுற்று; ஓர்உவமஉருபு.

கண்ணாள் - கலைமகள், நாமகள்; kaṇ-ṇ-āḷ   n. id. Belovedwoman; கண்ணாட்டி. (யாழ். அக.); kaṇṇāḷ   n. id. Sarasvatī,the goddess of learning; சரசுவதி (பிங்.)

முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

ஒத்தி - ஒத்திட - ottiṭ   inf. To compare, ஒப்பிட. 2. To be alike, equal, ஒத்திருக்க

ஆயின் - ஆனால்; ஆராயின்

பலர் - அநேகர்; சபை

காணத் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

தோன்றல் - தோற்றம்; தலைமை; உயர்ச்சி; விளக்கம்; தலைவன்; முல்லைநிலத்தலைவன்; தமையன்; அரசன்; மகன்; மொழிப்புணர்ச்சியில்வரும்தோன்றல்விகாரம்.

மதி - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை.

முழுப்பொருள்
காதலன் நிலவைப் பார்த்து இப்படிக் கூறுகிறான்: நிலவே! என் காதலயின் மலர்ப்போன்ற கண்களை உடைய முகத்தை ஒத்ததாய் நீ அழகாய் இருப்பாய் என்றால் நீ பலர் காணுபடியாக தோன்றாதே. அவள் முகம் போல் அழகிய பொலிவை நீயும் கொண்டால் நானும் உன்னை விரும்புவேன். ஆனால் நான் காதலிப்பதை மற்றவர்கள் காண்பதை நாம் விரும்ப மாட்டேன் என்பதை நீ அறிவாயாக.

அனுமன் கூறுவதாக கம்பன் எழுதிய “கண்டனன் கற்பினுக் கணியை கண்களால்” என்னும் வரி நினைவுக்கு வருகிறது.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) மதி - மதியே; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் -இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்; பலர் காணத்தோன்றல் - இதுபோல யான் காணத் தோன்று; பலர் காணத் தோன்றாதொழி. (தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
மதியே! நீ மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒப்பையாயின், பலர் காணுமாறு தோன்றாதொழிக. இது மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றது.

மு.வரதராசனார் உரை
திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

சாலமன் பாப்பையா உரை
நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.

No comments:

Post a Comment