உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்


குறள் 600
உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு
[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]

பொருள்
உரம் - வலிமை; திண்மை திடம் மரவயிரம்; எரு மார்பு அறிவு ஊக்கம் படைவகுப்பின்முன்னணி; குழந்தைகளுக்குவிழும்சுளுக்குவகை; மதில் உள்ளத்தின்மிகுதித்தன்மை; விரைவு

ஒருவற்கு -  ஒரு மனிதனுக்கு

உள்ள - uḷḷa   adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது  

வெறுக்கை - அருவருப்பு; வெறுப்பு; மிகுதி; செல்வம்; பொன்; வாழ்வின்ஆதாரமாயுள்ளது; கையுறை; கனவு.

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

இல்லார் - இல்லாதவர்

மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை.

மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

ஆதலே - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

முழுப்பொருள்
ஒருவர் உள்ளத்தில் கொள்ளும் உரமே ஊக்கமே வலிமையே திண்ணிய அறிவே உண்மையாக அவர்க்கொள்ளும் செல்வமாகும்.  அதுவே அவரது வாழ்விற்கு ஆதாரமாகும். அந்த ஊக்கம் இல்லாதவர் மனிதர் என்று கருதப்படமாட்டார். அவர் மரத்திற்கே ஒப்பாவர். 

ஏன் மரத்திற்கு ஒப்பாவர்?
ஏனெனில் மரங்கள் மழையினை / நீரினை நம்பி இருகின்றன. அம்மழை பொய்த்து வறண்டுப்போனால் கடுஞ்வறட்சிக்காலங்களில் மரங்களும் பட்டுப்போகும் ஏனெனில். மரங்கள் தண்ணீர் தேடி வேறு எங்கும் செல்ல முடியாது (செல்லாது). அதுவே மனிதராக இருந்தால் வேறு இடத்திற்கு தண்ணீர் தேடி செல்ல முடியும். மனிதருக்கு அந்த ஊக்கம் உண்டு. அந்த திண்ணிய அறிவு உண்டு. அவர் போராடி தண்ணீர் தேடி அலைந்து கண்டுபிடித்து உயிர்வாழ்வார். அதுவே மரம் போல் அங்கேயே இருந்தால் அவரும் உயிர் இழப்பார்.

ஔவை மூதுரையில் எழுதப்படிக்கத் தெரியாதவரை (அதுவும் கூட ஊக்கமின்மையினால்தான்), இழிவாகச் சொல்லுகையில் நகைச்சுவையோடு சொல்லுகிறார் இவ்வாறு. நல்ல என்ற சொல் கறுப்பு என்ற பொருளில் ஆளப்படுகிறது இப்பாடலிலும், கறுத்து, காய்ந்த மரங்கள் பயனற்ற முதிய மரங்கள். அவையாகிலும், பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, பலருக்குப் பயனாகி, வாழ்விறுதியில் காய்ந்து கறுத்தன, அவற்றையும் விட பயனில்லாதவன் வாசிக்கத்தெரியாதவன் என்று இழித்து, இடித்து உரைக்கிறார் ஔவையார். அப்பாடல்:

“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.”


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒருவற்கு உரம் உள்ள வெறுக்கை - ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதி; அஃது இல்லார் மரம் -அவ்வூக்க மிகுதி இல்லாதார் மக்களாகார், மரங்களாவார்; மக்களாதலே வேறு - சாதி மரங்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள் வடிவே: பிறிது இல்லை.
(உரம் என்பது அறிவாதல், 'உரனென்னுந் தோட்டியான்' (குறள், 24) என்பதனானும் அறிக. 'மரம்' என்பது சாதியொருமை. மக்கட்குள்ள நல்லறிவும் காரிய முயற்சியும் இன்மைபற்றி 'மரம்' என்றும் மரத்திற்குள்ள பயன்பாடின்மை பற்றி 'மக்களாதலே வேறு' என்றும் கூறினார். பயன், பழம் முதலியவும், தேவர் கோட்டம், இல்லம், தேர்,நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலியன. இவை மூன்று பாட்டானும் ஊக்கமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு அறிவாவாது உள்ளமிகுதியுடைமை: அஃதில்லார் மரமென்று சொல்லப்படுவர்: மக்கள் வடிவாதலே மரத்தின் வேறாகத் தோன்றுகிறது. இஃது அறிவும் இதுதானே யென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.

சாலமன் பாப்பையா உரை
ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.

No comments:

Post a Comment