சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

குறள் 976
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு
[பொருட்பால், குடியியல், பெருமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
சிறியார் - சிறியவர், சிறியர், சிறி யோர், s. The low, the base, கீழ்மக்கள். 2. Small persons, சிறுவர்; [ex சிறுமை.] சிறியார்க்கினியதுகாட்டாதேசேம்புக்குப்புளிவிடாதாக் காதே. Give not dainties to children, and spare not tamarind with சேம்பு. i. e., indulge not hurtfully, neither hesitate as to what is needful.

உணர்ச்சியுள் - உணர்ச்சி - உணர்வு; அறிவு மனம்

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

பெரியாரைப் - பெரியார் - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர்.

பேணிக் - பேணுதல் -  போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

கொள்வேம் - கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

நோக்கு - கண்; பார்வை; அழகு; கருத்து; அறிவு; பெருமை; விருப்பம்; கதி; விநோதக்கூத்துக்களுள்ஒன்று; ஒருவகைச்செய்யுளுறுப்பு; ஓர்உவமவுருபு

முழுப்பொருள் 
பெரியோர்களான சான்றோர்களுக்கும் சிறியோர்களான கீழ்மக்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? பெரியோர் பெருமை அடைவதற்கான காரணம் என்ன தெரியுமா? அதற்கு விடை கூறுகிறார் திருவள்ளுவர்.

கீழ்மக்களுக்கு /சிறியோர்களுக்கு பெரியோர் சான்றோருடன் இணங்கி பழகி  அவர்களை போற்றி பேணி பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் இருக்காது. அதற்காக முயலமாட்டார்கள். 

ஆனால் பெரியோர் சான்றோர்களுடன் பழகுவதை ஒரு விரதமாகவே / பழக்கமாகவே கொள்வார்கள். அவ்விருப்பதை பெரியோர்கள் ஒரு பெருமையாகவே கருதுவர். சான்றோரை போற்றி பேணும் பொழுது சான்றோரின் அறிவும் ஞானமும், நல்ல பழக்க வழக்கங்களும் அறிந்துணர ஒரு நல்லவாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாய்ப்பு அவர்கள் கடந்து வந்த பாதைகளையும் அவர்கள் செய்த தவறுகளையும் நாம் அறிய உதவுகிறது. ஆதலால் நாம் அத்தவறுகளை செய்யாமல் தப்பிக்கலாம். மேலும் பெரியோர் துணையிருந்தால் நாம் தவறான பாதையில் சென்றால் நம்மை திருத்தி நல்வழிப்படுத்துவார்கள் பெரியோர். இது எப்படிப்பட்ட ஒரு பலம் பெரியோருக்கு. 

பெரியோரை பேணாததால் சிறியோரால் பெரியோரின் நல்ல பண்புகளை பின்பற்ற ஆர்வமும் எண்ணமும் உணர்வும் ஏற்படவில்லை.  அதுவே பெரியோர்களால் முடிகிறது. அதுவே சிறியோர் பெருமை அடையாததற்கும் பெரியோர் பெருமை அடைவதற்கும் உள்ள அடிப்படை காரணம்/வேறுபாடு. 

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - அப்பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினை யாம் கோடும் என்னும் கருத்து; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது. (குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு, அஃது உடையராதல் கூடாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை, பெருமை யுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து. இது பெரியாரைப் பெறுதலும் பெருமையென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.

English Meaning - As I taught a kid - Rajesh
What is the difference between great people and trivial people? A trivial person doesn't have it in him, in his thoughts, in his objectives to be associated with scholars, experts, knowledgeable people, mentors and to protect them. They won't even try for it. Whereas great people have it as an objective to be associate with and protect scholars, experts, knowledgeable people and mentors. 
Because of this difference, great people get to learn from scholars, follow their advice, grow in life and attain greater horizons. Whereas trivial people don't' grow not attain heights.

Questions that I ask to the kid
How can you say a person is great or trivial based on his associations?

No comments:

Post a Comment