கடனறிந்து காலங் கருதி இடனறிந்து

குறள் 687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை
[பொருட்பால், அமைச்சியல், தூது]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.

கடமை - கடப்பாடு; ஒவ்வொருவருக்கும்உரியபணி; முறை; கடன்; தகுதி; குடிகள்அரசர்க்குச்செய்யும்உரிமை; காட்டுப்பசுஒருவகைமான்; பெண்ணாடு; குடியிறை.

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

கருதி - கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்.

இடன் - அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம்இருப்பவன்.

இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

அறிந்துஅறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

எண்ணி - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

உரைப்பான் - உரை-த்தல் - urai-   v. tr. [K. ore, M. ura.]1. To tell, say, speak; சொல்லுதல் (திவா.) 2.To sound; ஒலித்தல் (திவா.)  

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள் 
ஒரு தூதுவனின் பொறுப்புகள் என்ன?
1. தான் ஆற்றவேண்டிய கடமைகளை / முறைமைகளை நன்கு ஆராய்ந்து அறிந்துக்கொள்ள வேண்டும். தான் தூதுக்கு செல்லுகிற நாட்டை பற்றியும் அந்நாட்டின் முறைகளை பற்றியும் அறிந்துக்கொள்ள வேண்டும். அந்த நாட்டின் கலாச்சாரத்திற்கு தன்னை பொருத்திக்கொள்ள வேண்டும். தான் தூதாக கூறுகின்ற செய்தியை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு வரக்கூடிய எதிர்வினைகளையும் கேள்விகளையும் ஆராய்ந்து அதற்கு தன்னை ஆயுதப்படுத்துக்கொள்ள வேண்டும். 

2. தூது செய்தியை சொல்ல வேண்டிய தக்க காலம் / பொழுதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் 

3. தூது செய்தியை சொல்ல வேண்டிய தக்க இடத்தையும் ஆராயவேண்டும். சில செய்திகள் நேரடியாக தனியே கூறவேண்டிய ராஜாங்க ரகசிய செய்திகள். ஆதலால் செய்திக்கும் நாட்டிற்கும் அவசரத்திற்கும் முக்கியத்துவத்திற்கும் ஏற்ப இடங்கள் மாறும். 

இவ்வாறு தூதை மேற்கொண்டு செய்பவனே சிறந்த தூதனாக விலங்குவான்.

ஒப்புமை
காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ் (ஏலாதி 26)

செல்லுங்கால் தேயத் தியல்தெரிந்து சென்றக்கால்
புல்லிய சுற்றம் புணர்வறிந்து - புல்லார்
மனத்தால் பிரித்து வலியால் உதவும்
இனத்தால் தெரிவது தூது (பாரத வெண்பா)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கடன் அறிந்து - வேற்றரசரிடத்துத் தான் செய்யும் முறைமை யறிந்து; காலம் கருதி - அவர் செவ்வி பார்த்து; இடன் அறிந்து - சென்ற கருமஞ் சொல்லுதற்கு ஏற்ற இடம் அறிந்து; எண்ணி - சொல்லுமாற்றை முன்னே விசாரித்து; உரைப்பான் தலை - அவ்வாறு சொல்லுவான் தூதரின் மிக்கான். (செய்யும் முறையாவது: அவர் நிலையும் தன் அரசன் நிலையும் தன் நிலையும் தூக்கி, அவற்றிற்கு ஏற்பக் காணும் முறைமையும் சொல்லும் முறைமையும் முதலாயின. செவ்வி - தன் சொல்லை ஏற்றுக் கொள்ளும் மன நிகழ்ச்சி. அது காலவயத்ததாகலின் காலம் என்றார். இடம்: தனக்குத் துணையாவார் உடனாய இடம். எண்ணுதல்: தான் அது சொல்லுமாறும், அதற்கு அவர் சொல்லும் உத்தரமும், அதற்குப்பின் தான் சொல்லுவனவுமாக இவ்வாற்றான் மேன்மேல் தானே கற்பித்தல். வடநூலார் இவ்விரு வகையாருடன் ஓலை கொடுத்து நிற்பாரையும் கூட்டித் தூதரைத் தலை, இடை, கடை, என்று வகுத்துக் கூறினாராகலின், அவர் மதமும் தோன்றத் 'தலை' என்றார். தூது என்பது அதிகாரத்தான் வந்தது. இவை ஐந்து பாட்டானும் தான் வகுத்துக் கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
காரியம் நின்ற முறைமையை யறிந்து காலத்தையும் நினைத்து இடமும் அறிந்து தானேயெண்ணிச் சொல்லவல்லவன் தலையான தூதனாவான். இது தலையான தூதரிலக்கணம் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா உரை
தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.

English Meaning - As I taught a kid - Rajesh
Following are the foremost responsibilities of an envoy
1) Know the task to be performed well, know the role and responsibilities very well - comprehensively in depth. Be aware of the culture, characteristics, power equations of the country, organization, people etc. 
2) Be conscious of the time - Know the right time to talk to the opponent, know the right time during the conversation to place your points and respond to the opponent. Make decisions at the right time
3) Be conscious of the place - Know where to talk and what to talk. Sometime, one has to communicate part of the message (Secret message) privately to the opponent. So, it one has to vigilantly look for private moments or create private moments.

Only the envoy who performs the above three responsibilities can perform well in his duties and succeed.

Questions that I ask to the kid
What are three foremost responsibility of an envoy?

No comments:

Post a Comment