குறள் 627
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
இலக்கம் - விளக்கம்; குறிப்பொருள்; நூறாயிரம் எண் எண்குறி; இலக்கு காணுதல்
உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி
இடும்பைக்கு - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்
என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்
கலக்கத்தைக் - கலக்கம் - கலங்குகை; மனக்குழப்பம்; துன்பம்; அச்சம்; புத்தித்தெளிவின்மை; அழுகை; ஆரவாரம்.
கையாறாக் - துன்பம் என
கையாறு - செயலொழிதல்; ஒழுக்கநெறி; துன்பம்.
கையாற்று-தல் - kai-y-āṟṟu- v. tr. Caus.of கையாறு-. To give or offer relief, as by asubstitute; உதவிசெய்து இளைப்பாறச் செய்தல் Loc.
கொள்ளாதாம் - கருத மாட்டார்
கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.
மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.
முழுப்பொருள்
இவ்வுடம்பு நிலையில்லாதது. உடலும் மனமும் வேறு வேறு. பொய் உடம்பு ஒருநாள் அழியப்போவது உறுதி. இதனை அறிந்து தெளிந்த சான்றோர்கள் /அறிவுடையோர் உடம்பிற்கு ஒரு துன்பம் (நோய்) வந்தால் அத்துன்பத்தை துன்பமென கருதமாட்டார்கள். உடலிற்கு வந்த துன்பத்தை உள்ளத்திற்கு கடத்த மாட்டார்கள் ஏனெனில் உள்ளத்திற்கு கடத்தினால் அது உள்ளத்திற்கு மனநோயாக மாறிவிடும். மனநோய் உடலழிவை விரைவுபடுத்தும் அதிக துன்பமும் தரும்.
அதுமட்டும் இன்றி பொதுவாகவே துன்பத்தில் எண்ணம் குவியக் குவிய அது பெருகிக்கொண்டே செல்லும் ஆற்றல் உடையது. ஆதலால் அதில் எண்ணத்தை குவிக்காது அடுத்த காரியத்திற்கு செல்ல வேண்டும்.
பொய் உடம்பு என்றாலும், உடலிற்கு ஒரு இழப்பு வந்தால் அதனை இயற்கையான நல்ல நிலைக்கு திரும்ப எடுத்துச்செல்வது என்பது கடினமான காரியம். அப்படி இருக்கையில், ஒருவன் உடம்பின் துன்பத்தையே துன்பமாக கருதவில்லை என்றால், பின்பு மற்றவையெல்லாம் துன்பமே இல்லை என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது இன்னும் எளிது.
மேலும்: அஷோக் உரை
நாம் துன்பத்தில் இருக்கும் பொழுது நாம் பற்றிக்கொள்ள ஏதாவது ஒன்று போதும். அதைப்பற்றி எழுத்தாளர் போகன் சங்கர் முகநூலில் ஒரு பதிவிட்டு இருந்தார். அது கீழே
எதையாவது பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இருள் ஒரு ராட்சத மிருகம் போல் உங்களை சூழ்ந்துகொள்கையில் பற்றிக்கொள்ள கவிதை போல் வலுவானது எதுவும் இல்லை. கவிதைக்கும் பிற இலக்கிய வடிவங்களுக்குமுள்ள வித்தியாசம் இதுதான்.
கவிதை, எல்லா விளக்குகளும் விண்மீன்களும் மத நம்பிக்கைகளும் சித்தாந்தங்களும் அணைக்கப்பட்டபிறகும் மிச்சமிருக்கும் ஒளி.
நான் திருஞான சம்பந்தரின் பாடலைப் பற்றிக்கொண்டேன் இன்று.
"மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை"
-- போகன் சங்கர்
வலியைப்பற்றிய அச்சமளவுக்கு பயங்கரமானதல்ல வலி. வலியைத் தாங்கமுடியாது என்ற கற்பனையே பொய். வலியைத் தாங்கமுடியும். மனிதனால் மிகமிகக் கடுமையான வலியைக்கூட தாங்கமுடியும். அதை உணர உணரத்தான் சித்ரவதைமுறைகள் மேலும் மேலும் கடுமையாகின்றன. அவை அப்படிக் கடுமையாக ஆவதிலிருந்தே மனிதன் வலியை வெல்கிறான் என்று தெரிகிறது.
இதோ என்னைப்போல. நானும் வலியை வென்றிருக்கிறேன். என்னாலும் முடியும்… அந்த வெற்றியுணர்வு என்னைப் பூரிக்கச்செய்தது. என்னைப்பற்றி எப்போதும் உணராத பெருமிதம் உருவாயிற்று
முதுமையில் பார்கின்ஸன் நோயால் அவதிப்பட்ட எஸ்.ராமகிருஷ்ணன் நடுங்கும் கைகளால் ஒற்றைவிரலால் தட்டச்சிட்டு நூல்களை எழுதினார். பார்க்கின்ஸன் நோய் பற்றி ஒரு நூல் எழுதிக்கொண்டிருக்கையில் உயிர்துறந்தார்.
நான் அறிந்த மகத்தான் பெண்மணிகள் எனில் அது வானவன் மாதேவி மற்றும் வல்லபி என்பேன். அவர்கள் தசைச்சிதைவு நோயால் பாதிக்கபட்டவர்கள். ஆனால் அவர்கள் ஆற்றிய பணி அரும்பணி. அவர்களை பற்றி ஜெயமோகன் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஒரு உரையில் பேசியுள்ளார். அவை கீழே.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து எடுத்த ஒரு பகுதி உரைநடையாக [குறளிது - நாள் 3 பகுதி 1 @ 44:35 to 48:00]
வானவன் மாதேவி அவர்கள் (2017 ஜனவரியில் இறந்தார்கள்) தசைச்சிதைவு நோயால் பல நாட்கள் அவதிப்பட்டு இறந்துப்போனார்கள். ”நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்”. இந்த நாள் தான் மறுநாள் என்று ஒன்றுபோல் காட்டி உயிரை வெட்டிச் செல்லும் வாள் அது உணர்வார் பெறின். அதை நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் ஒவ்வொரு நாளும் உங்களுடைய உயிரை கொஞ்சம் வெட்டி எடுக்கக் கூடிய ஒரு வாள் அது. நமது ஊர்களில் ஒரு பெரிய வெல்லம் (jaggery) மனையினை வைத்து இருப்பார்கள் குறிப்பாக திருச்செந்தூர் திருவிழாவில். ஒரு நல்ல (nice or soft) வாளினால் அதனை சீவி (வெட்டி) கொடுப்பார்கள் (ஒரு பைசா/ரூபாய் இரண்டு பைசா/ரூபாய் என்று விற்பார்கள். பையன்கள் விளையாட்டாக வாங்கி சாப்பிடுவார்கள்). அந்த வாள் போன்று ஒவ்வொரு நாளும் நீங்கள் கொண்ட உயிர் என்ற வெல்ல கட்டியை சீவி சீவி எடுக்கிறது அந்த வாள்.
(நாள் என ஒன்று) நிகழ்வதே தெரியாமல் ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் உணர்வார் பெறின். பெரும்பாலானவர்கள் அதனை உணர்வது இல்லை. தருமன் யக்ஷனை சந்திக்கும் பொழுது யக்ஷன் கேட்கிறான், இப்பூமியில் மாபெரும் அதிசயம் என்பது என்ன? ஒவ்வொரு நாளும் மானிடர் இறந்துக்கொண்டு இருந்தாலும் நான் மட்டும் கடைசிவரைக்கும் வாழ்வேன் என்று ஒவ்வொருவரும் நினைப்பது போல மகத்தான விந்தையான ஏதும் பூமியில் இல்லை என்று தருமன் பதில் சொல்கிறான். சரியான பதில் என்று யக்ஷன் ஒத்துக்கொள்கிறான்.
(எனக்கு தெரிந்த வரையில் எனக்கு தெரிந்த நபர்களில்/நண்பர்களில்) வானவன் மாதேவி அளவிற்கு அறத்தின் பொருட்டென வாழ்ந்த என்றும் பிறர்க்கென வாழ்ந்த யாரும் கிடையாது. தன் துயரை பிறர் மகழிச்சிக்கென மாற்றிக்கொண்டு வாழ்ந்தார்கள். ஏன் அவர்களுக்கு அத்தகைய வாழ்க்கை வாய்த்தது? அவ்வளவு மகத்தான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து நிறைவை அடைய முடிந்தது என்றால் அதற்கு காரணம் நாட்கள் எண்ணி தரப்பட்டு இருக்கின்றன என்ற எண்ணம் வானவன் மாதேவி அவர்களுக்கு வந்தது. வானவன் மாதேவி வளரும் பருவத்தில் பள்ளிக்கூடத்திற்கு செல்கிறார்கள். உயர்நிலை பள்ளியில் கால் தடுக்கி ஒரு நாள் கீழ் விழுகிறார்கள். ஐந்துமுறை கால் தடுக்கும் பொழுது கால் கொஞ்சம் வளைகிறது. ஒரு மருத்துவர் சொல்கிறார் இது தசைச்சிதைவு நோய். அதிக பட்சம் ஐந்து ஆண்டுகள்.
ஐந்து ஆண்டுகள் என்று தெரிந்த உடனே வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களுக்கு பொருள் இல்லாமல் போய்விடுகிறது. சொத்து சேர்க்க வேண்டியதில்லை, பிள்ளைகளை கரைசேர்க்க தேவையில்லை, பேர குழந்தைக்கு கல்யாணம் செய்துவைக்கத் தேவையில்லை.
ஐந்து ஆண்டுகள் தான். அந்த ஐந்து ஆண்டுகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் முக்கியமாகிவிடுகிறது. ஒரு கணம் கூட தனக்கென முக்கியமாகபடவில்லை (வானவன் மாதேவிக்கு). அவ்வளவு மகத்தான வாழ்க்கை அமைய காரணம் நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளினை (தசையிருக்க நோயை / ஐந்து ஆண்டு என்று) கண்ணால் அவர்கள் பார்த்தது தான்.
திருக்குறளைப் போன்ற ஒரு நூலை படிக்கும் பொழுது யாக்கை (உடம்பு) நிலையாமை பற்றிய அதிகாரத்தை பார்க்கிறோம். என்ன இது ஒரே பண்டார(ம்) தனமாய் இருக்கிறது என்று நமக்கு தோன்றும். ஆனால் வாழ்க்கையை கொண்டாடுவதற்கும் வாழ்க்கைய அனுபவிப்பதற்கும் வாழ்க்கையை வகுத்துக்கொள்வதற்கும் தான் நாம் நூல்களை (பொதுவாக) படிக்கிறோம்.. இதெல்லாம் கோப்பலங்கள், எல்லாம் அழிந்துப்போய்விடும் என்று ஒருவர் சொல்லும் பொழுது, அதான் தெரிந்ததே வேறு விஷயம் சொல்லு என்று நாம் சொல்வோம்.
ஆனால் இந்த வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த வாள் அதன் நிழல் நம் தலைக்கு மேல் அவ்வப்போது கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. நாம் அனைவரும் செய்யாத ஒன்றை (வானவன் மாதேவி) அவர்களால் செய்ய முடிகிறது என்றால் அதற்கு காரணம் அதனை அவர்கள் உணர்ந்ததனால் தான்.
வானவன் மாதேவி பற்றி
1) வானம்
2) மகத்தான சந்திப்பு
3) அஞ்சலி : வானவன் மாதேவி
4) வானவன் மாதேவி இயலிசை வல்லபி- இல்லத்திறப்புவிழா
5) வானதி- நினைவுகளினூடாக…
6) நம்பிக்கை மனுஷிகள் -- காணொளி
7) என் வாழ்வில் ஒரு முக்கிய சந்திப்பு
8) Care for the Future

(குறும்படம் - காணொளி)
பரிமேலழகர் உரை
உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று - நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் - தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார். (ஏகதேச உருவகம். 'உடம்பு' சாதிப்பெயர். 'கலக்கம்' என்னும் காரியப் பெயர். காரணத்தின்மேல் நின்றது. 'கையாறு' என்பது ஒரு சொல், இதற்கு ஒழுக்க நெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக் கொள்வர் என்பது குறிப்பெச்சம்.).
மணக்குடவர் உரை
உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதி, தமக்கு உற்ற துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் மேலாயினர். இது மேல் நன்மையாற் றவஞ் செய்யுங்கால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.
மு.வரதராசனார் உரை
மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.
சாலமன் பாப்பையா உரை
உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.
English Meaning - As I taught a kid - Rajesh
This body is fragile and temporary. Body is false and it would decease one day for sure. The knowledgeable and strong person who has realized that will not take any pain in body or a disease to their mind/heart. Because worrying about physical health will lead to imbalance of mental health which reflect in their work and life as well.
Questions that I ask to the kid
Should we dwell in pain for any injuries to our physical body? Why?
No comments:
Post a Comment