அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்

குறள் 286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]

பொருள்
அளவின் - அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

தருக்கம் - நியாயவாதம்; மேம்பாடு; வாக்குவாதம்; நியாயவாதநூல்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நின்று - எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பட வரும் ஒர் இடைச்சொல்.

நில்-தல் - [நிற்றல்]   3 v. intr. [K.nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt,tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில்லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast;to persevere, persist in a course of conduct;உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. Tostay, abide, continue; தங்குதல் குற்றியலிகர நிற்றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; tobe discontinued, stopped or suspended; ஒழிதல் வேலை நின்றுவிட்டது. 6. To be subdued;அடங்குதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியாழிசைநிற்ப (கலித். 143, 38). 7. To remain; tobe left, as matter in a boil, as disease in thesystem; to be due, as a debt; எஞ்சுதல் நின்றதிற் பதினையாண்டு (திவ். திருமாலை 3). 8.To wait, delay; தாமதித்தல் தெய்வம் நின்றுகேட்கும்.  -

நிற்றல் - niṟṟl   v. noun. A standing, நிலை; [ex நில்.] (p.)

ஒழுகல்  - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.

ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றாது - செய்யாது இருத்தல் 

ஆற்றார் - செய்யாது இருப்பவர் 

களவின் - களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

கன்று - விலங்கின்கன்று; மரக்கன்று, இளமரம்; சிறுமை; கைவளையல்.

இய - இயைவு - iyaivu   n. இயை¹-. Union, joining together; சேர்க்கை


2கன்றிய -  கன்றுதல் - முதிர்தல்; அடிபடுதல்; சினக்குறிப்புக்கொள்ளுதல்; வெயிலாற்கருகுதல்; மனமுருகுதல்; வருந்துதல், நோதல்; வாடுதல்; பதனழிதல்.

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

காதலவர் - காதல் கொண்டவராக, மனம் விரும்புவராக

முழுப்பொருள்
"நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை அற்று" என்று கல்லாமையில் கூறியுள்ளார் திருவள்ளுவர். நுண்மையாக அறிந்து ஆராய்வதே அறிவு. தன்னைக்குள்ளேயும் பிறர்க்குள்ளேயும் தருக்கத்தின் மூலம் நுணுகி ஆராய வேண்டும். அப்படி அறிந்தால் தான் மேம்பாடு அடைய முடியும். நியாயத்தை கண்டுஅடைய முடியும். இந்த நியாயமே தருக்க அளவு என்று இக்குறளில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

சமயத்தில் 10 அளவைகள் உண்டு (wiki  யில் படிக்கலாம்)
1) காண்டல் (காட்சி)
2) கருதல்
3) உவமம்
4) ஆகமம் (நூல்)
5) ஆண்டைய அருத்தாபத்தி (பொருட்பேறு)
6) இயல்பு
7) ஐதிகம் (உலகுரை)
8) அபாவம் (இன்மை)
9) மீட்சி
10) ஒழிவறிவு எய்தி உண்டாம் நெறி (உள்ள நெறி)

ஆதலால் அளவைகள் துணைக்கொண்டு நுணுகி ஆராய்ந்து பெற்ற தருக்க அளவினை அறிந்தே துறவின் கண் ஒருவர் செல்லலாம். ஆதலால் அந்த தரும்ம நியாயத்தின் கண் நின்று ஒருவர் நடத்தல் வேண்டும். ஆனால் அவ்வாறு ஆற்றாதவர் களவின் கண் அதாவது வஞ்சம், திருட்டு, கள்ளவொழுக்கம் ஆகியவற்றை விரும்பி அவற்றை பின்பற்றுபவராக இருப்பார் அல்லது அவரால் துறவை பின்பற்ற முடியாமல் துறவின் பயனை அடையமாட்டார். 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார், களவின்கண் கன்றிய காதலவர் - களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார். (உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உற்ற விளைவுகளையும் அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.).

மணக்குடவர் உரை
களவின்கண்ணே மிக்க ஆசையையுடையவர் நேரின்கணின்று ஒழுகுதலைச் செய்யமாட்டார். இது நேர் செய்ய மாட்டாரென்றது.

மு.வரதராசனார் உரை
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.

No comments:

Post a Comment