Skip to main content

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்

குறள் 256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்
[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்]

பொருள்
தின்(னு)-தல் - tiṉ-   8 v. tr. [T. tinu, K.tin, M. tinnuka.] 1. To eat, feed; உண்ணுதல் இரும்பே ரொக்கலொடு தின்மென (புறநா. 150). 2.To chew; மெல்லுதல் உண்ணுஞ்சோறும் பருகுநீருந் தின்னும்வெற்றிலையும் (திவ். திருவாய். 6, 7, 1).3. To bite, gnash, as one's teeth; கடித்தல் தின்றுவாயை விழிவழித் தீயுக (கம்பரா. ஒற்றுக். 49).4. To eat away as white ants to consume

பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; நிமித்தமாக

தினற்பொருட்டால் - உண்ணுவதை பொருட்டு ;உண்ணுவதற்காக

கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

கொல்லாது - வதைக்காது; அழிக்காது ; வெட்டாது ; துன்பப்படுத்தாது

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

யாரும் - எவரும்

விலைப் - விற்பனைத்தொகை; விற்கை; மதிப்பு.

பொருட்டால்பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; நிமித்தமாக

ஊன் - தசை, இறைச்சி; கொழுப்பு; உடம்பு.

தருதல் - கொடை.

தருவார் - கொடுப்பார்

இல் - இல்லை; இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
மாமிச உணவை உண்ணுவதற்காக இவ்வுலகில் மக்கள் இல்லையென்றால் மாமிச உணவை விற்பதற்கும் இவ்வுலகில் மக்கள் இருக்க மாட்டார்கள். ஆதலால் உயிரினங்களை கொலை செய்வதும் தவிர்க்கப்படும்.

மாமிச உணவு உண்பதற்காக பிறர் உயிர்களை கொல்லாதே என்கிறோம். ஆனால் மாமிச உணவு உண்பவர்கள் கூறும் காரணம் : கொலையை நான் செய்வது இல்லை. விற்பனையாளர்கள் கொலை செய்கிறார்கள். நான் வெறுமென வாங்கி உண்கிறேன் என்பர். காரணம் தான் பிழைக்கு அடிப்படையையே தவிர. காரியம் இல்லை. காரியம் கொலை செய்தல் ஆனால் காரணம் மாமிச உணவு உண்ணுதல். ஆதலால் விலங்குகளை கொலை செய்பவனுக்கு பாவம் இல்லை அதனை உண்பவன் உனக்கே பாவம்.

"கொன்னால் பாவம் தின்னா போச்சு" என்கிற பசப்பு வார்த்தைகள் பொருந்தாது.

தமிழ் திரைப்படம் மகாநதியில் ஒரு காட்சி வரும். கதாநாயகன் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் கதாபாத்திரத்தின் மகளை மிக இளவயதில் பாலியல் வன்கொடுமை / பலாத்காரம் செய்தவரை பழிவாங்க செல்வார். அப்பொழுது அந்த நபர் கூறுவார் தனது உதவியாளர் தான் உன் மகளை எனக்கு விற்பனை செய்தார் (வசனம்: "இதெல்லாம் supply பண்றது தனுஷ். நீ வேணும்னா அவனை பழி வாங்கிக்கோ" என்பார்). நான் வெறுமென அனுபவித்தேன் என்று. அதற்கு கதாநாயகன் (நடிகர் கமல்) கூறுவார் - அவன் வெறும் supplier (விற்பனையாளன்) நீ தான் டா demand (என்று) (வசனம் "தனுஷ் கசாப் கடை வெச்சு இருக்கிறவன் நீ தான் பிள்ளை கறி வேணும் என்று கேக்கிறவன். அவன் supplier  நீ தான் டா demand"). இக்குறள் ஊன் உண்ணுதலுக்கு மட்டும் அல்ல இது போல் வன்கொடுமை தொழிலுக்கும் பொருந்தும். அதேப்போல அத்திரைப்படத்தின் காட்சி ஊன் உண்ணுதலுக்கும் பொருந்தும்.

(மகாநதி திரைப்பட காட்சி : இதெல்லாம் supply பண்றது தனுஷ். நீ வேணும்னா அவனை பழி வாங்கிக்கோ)


(மகாநதி திரைப்பட காட்சி :தனுஷ் கசாப் கடை வெச்சு இருக்கிறவன் நீ தான் பிள்ளை கறி வேணும் என்று கேக்கிறவன். அவன் supplier  நீ தான் டா demand )

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தினற்பொருட்டால் உலகு கொல்லாது எனின் - பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின், விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும் இல் - பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், 'தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.).

மணக்குடவர் உரை
தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை. இது கொன்று தின்னாது விலைக்குக்கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை யென்றார்க்கு அதனாலுங் கொலைப்பாவம் வருமென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

சாலமன் பாப்பையா உரை
தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை 
மக்கள் புலால் உண்பதைத் தவிர்த்தால் கறிக்கடைகள் இராது.

Comments

Popular posts from this blog

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kurals grouped/labeled in single page - Kural mostly not in order பாயிரவியல் 01 கடவுள் வாழ்த்து  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 02 வான்சிறப்பு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 03 நீத்தார் பெருமை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 04 அறன்வலியுறுத்தல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] இல்லறவியல் 05 இல்வாழ்க்கை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 06 வாழ்க்கைத் துணைநலம்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 07 மக்கட்பேறு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 08 அன்புடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 09 விருந்தோம்பல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 10 இனியவைகூறல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 11 செய்ந்நன்றி அறிதல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 12 நடுவு நிலைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 13 அடக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 14 ஒழுக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 15 பிறனில் விழையாமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ]...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

குறள் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ். வையத்துள் -  பூமி, உலகத்தில் வாழ் - முறைமை வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாங்கு - vāngku   s. A dagger, பிச்சுவா. 2. [for.] A bench a seat, a board with legs, commonly வாங்குப்பலகை. வாங்கு - வளைவு; அடி; வசவு; பிச்சுவா; கால்களுள்ளபலகையாசனம் வாழ்வாங்கு   - முறைப்படி வாழ்வது; நெறி தவறாது வாழ்பவன் - வாழ்கின்றவன் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை...

மூதுரை - 02 - நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

மூதுரை - 02 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். பொருள் நல்லார் -  நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர். ஒருவர்க்குச் -  ஒருவர் செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். உபகாரம் - ஈகை; உதவி காணிக்கை மகிழ்ச்சி கல் -  வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி. மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. எழுத்துப் - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம். போல் - ஓர்உவமவுருபு...