கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

குறள் 1264
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
கூடிய - கூடுதல் - கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு.

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

பிரிதல் - பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.
பிரிந்தார் - பிரிந்து சென்றவர்

வரவு - வருவாய்; வருகை; வரலாறு; விளைவு; வழி; வணங்குகை

உள்ளி - உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )

கோடு - வளைவு; நடுநிலைநீங்குகை; யானையின்தந்தம்; விலங்குகளின்கொம்பு; ஊதுகொம்பு; நீர்வீசுங்கொம்பு; மரக்கொம்பு; யாழ்த்தண்டு; 'கெ', 'கே'முதலிவற்றின்தலைப்பிலுள்ளகொம்புக்குறியீடு; பிறைமதி; சங்கு; குலை; மயிர்முடி; மலையுச்சி; மலை; மேட்டுநிலம்; வரி; ஆட்டம்முதலியவற்றிற்குவகுத்தஇடம்; நீர்க்கரை; குளம்; காலவட்டம்; வரம்பு; ஆடைக்கரை; முனை; பக்கம்; அரணிருக்கை; கொடுமை; நீதிமன்றம்.

கொடு -நுகம்   n. id. +. 1.Yoke; நுகத்தடி (மரத்தடி) கொடுநுக நுழைந்த கணைக்காலத்திரி (அகநா. 350). 2. Plough; கலப்பை (பிங்.)3. The 10th nakṣatra. See மகம் (பிங்.)

ஏறும் - ஏறுதல் - உயர்தல், மேலேசெல்லுதல்; உட்செல்லுதல்; முற்றுப்பெறுதல்; வளர்தல்; மிகுதல்; பரவுதல்; ஆவேசித்தல்; குடியேறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல்.

என் - என்னுடைய

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
தலைவி கூறுகிறாள் "என்னுடன் கூடிவிட்டு பிரிந்தச் சென்ற காதலரை நினைத்து வருந்திக்கொண்டு இருந்தேன். அவர்மேல் கோபம் கூட இருந்தது. ஆனால் திரும்பி வரப்போகிறார் என்ற செய்தி கேட்டு என் வருத்தங்கள் கோபங்கள் என் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். மாறாக அவர் வரவை நோக்கி மரக்கிளைகளின் மேல் ஏறி அவர் வருவதை காண விழிநோக்கி ஆவலாய் இருக்கிறேன்" 

நாம் ஓர் இடத்தில இருந்து நின்று பார்த்தால் ஒரு ஆயிரம் அடி தூரத்தில் இருக்கின்றவை நமக்கு தெரியும். அதுவே ஒரு இருபது அடி உயரம் மேலே நின்று பார்த்தால் நமக்கு ஒரு கழுகின் பார்வைபோல் ஒரு இரண்டாயிரம் அடி தூரத்தில் இருப்பவை தெரியும். ஆதலால் கீழ் இருந்து பார்ப்பதை விட மேலிருந்து பார்த்தால் சற்று விரைவில் தெரிந்துக்கொள்ளலாம். தலைவியின் அந்த ஆர்வத்தையும் அவளது தலைவனை பார்க்க பொறுமையின்மையும் நுட்பமாக விவரிக்கிறார் திருவள்ளுவர்.

இக்காலத்தில் google-இல் flight status-உம், whatsapp-இல் location sharing செய்துக்கொண்டு அதில் இருக்கும் இடம் பார்த்து சந்தோஷப்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி - நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து; என் நெஞ்சு கோடு கொடு ஏறும் - என் நெஞ்சு வருத்தமொழிந்து மேன்மேற் பணைத் தெழாநின்றது. (வினைவயிற் பிரிவுழிக் காமஇன்பம் நோக்காமையும், அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பாகலின், 'கூடிய காமமொடு' என்றாள், 'ஒடு' உருபு விகாரத்தால் தொக்கது. கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது. கொண்டு என்பது குறைந்து நின்றது. 'அஃதுள்ளிற்றிலேனாயின் இறந்து படுவல்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப்பிரிந்தவர் வருவாராக நினைந்தே என்னெஞ்சம் மரத்தின்மேலேறிப் பாராநின்றது. உயர்ந்த மரத்தின்மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினாள்.

மு.வரதராசனார் உரை
முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.

No comments:

Post a Comment