நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்

குறள் 1254
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்]

பொருள்
நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.

உடையேன் -  உடையவன் -  கொண்டவன், உரியவன்; பொருளையுடையவன்; கடவுள் செல்வன் தலைவன்

என்பேன் - என்று கூறுவேன்

மன் - n. மன்னு-. 1. King; அரசன்.மன்னுடை வேலினாய் (சீவக. 1200). 2. Kṣattriya;warrior; க்ஷத்திரியன். மன்னாகி மறையவனாய் (சேதுபு. சேதுபல. 69). 3. Lord, chief; தலைவன்.மன்னுயிர் நீத்தவேலின் (பு. வெ. 4, 23, கொளு). 4.Husband; கணவன். மன்னொடுங்கூடி . . . வானகம் பெற்றனர் (சிலப். 25, 59). 5. The 26thnakṣatra. See உத்தரட்டாதி. (பிங்.) 6. Greatness; பெருமை. (யாழ். அக.) 7. Meanness,inferiority; இழிவு. (சூடா.)

மன்  - n. manu. Mantra; மந்திரம்.(பிங்.)

யானோ - நானோ

என் - என்னுடைய

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

மறை - மறைக்கை; இரகசியம்; மந்திராலோசனை; வேதம்; உபநிடதம்; ஆகமம்; மந்திரம்; உபதேசப்பொருள்; சிவப்புப்புள்ளிகளையுடையமாடுமுதலியன; களவுப்புணர்ச்சி; பெண்குறி; உருக்கரந்தவேடம்; திருகுவகை; விளக்கின்திரியைஏற்றவும்இறக்கவும்உதவும்திருகுள்ளகாய்; புகலிடம்; சிறைக்கூடம்; மறைவிடம்; வஞ்சனை; இரண்டாம்உழவு; கேடகம்; எதிர்மறை; விலக்குகை; புள்ளி; சங்கின்முறுக்கு

இறந்து - இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

மன்று-தல் - maṉṟu-   5 v. tr. மன்று. Tofine, punish; தண்டஞ்செய்தல். அடிகெட மன்றிவிடல் (பழ. 288). முட்டில் ஐங்கழஞ்சு பொன்மன்றஒட்டிக்கொடுத்தோம் (S. I. I. iii, 99).

மன்று - சபை; தில்லையிலுள்ளபொன்னம்பலம்; நீதிமன்றம்; பசுத்தொழுவம்; பசுமந்தை; மரத்தடிப்பொதுவிடம்; தோட்டத்தின்நடு; நாற்சந்தி; மணம்.

மன்றுபடும் - சபைக்கு வந்துவிடும்

முழுப்பொருள்
ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றல் என்னிடம் இருக்கிறது என்று நினைத்தேன். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவற்றை கடைபிடிக்கும் குணம் என்னிடம் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் அதற்கு மாறாக என் காமம் / காதல் அதை முறியடித்துவிட்டது. ஏனெனில் நான் தலைவன்மேல் மறைத்து வைத்திருந்த ஆசையை/காதலை இவ்வூரார் சபை முன்பு வெளிப்படுத்திவிட்டது. காதல் எல்லாவற்றையும் முறியடிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

”மறையல ராகி மன்றத் தஃதே” (குறுந்.97:4)
“அலரும் மன்றுபட் டன்றே” (அகநா 201:10)


பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது. (மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன, மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.).

மணக்குடவர் உரை
யானே நிறையுடையே னென்றிருப்பன்; இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது. இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.

மு.வரதராசனார் உரை
யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

சாலமன் பாப்பையா உரை
இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.

No comments:

Post a Comment