உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்

குறள் 574
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்
[பொருட்பால், அரசியல், கண்ணோட்டம்]

பொருள்
உள - உள்ள - uḷḷa   adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது  

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

முகத்து - முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

அளவினால் - அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

கண்ணோட்டம் - கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality,glow of kind feeling towards a friend or even acasual acquaintance, reluctance to deny arequest made by a friend or acquaintance,humanity, fellow-feeling;)  இரக்கம், கடைக்கண்பார்வை, அருள்காட்டுதல்; பார்வையிடுதல்

இல்லாத - இல்லாத்தனம் - illā-t-taṉam   * n. இல்² +.Poverty, destitution; தரித்திரம் Colloq.
இல்லாததும்பொல்லாததும் illāta-tum-pollātatum, n. id. +. Falsehood andslander; பொய்யும் தீங்குவிளைப்பதும். Colloq.  ; வறுமை

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
பிறர் மீது அவர்களின் சமயத்திற்கு ஏற்றாற்போலும் (அவர்களின் துன்பம் நீங்குவதற்கான) தேவைக்கு ஏற்றாற்போலும் கண்ணோட்டம் (தயவு, தாட்சிணியம், இரக்கம்) இல்லையென்றால், முகத்தில் இருப்பதுப்போல் தோன்றினாலும் அக்கண்களுக்கு என்ன பயன் ?

அதாவது கண் படைக்கப்பட்டதே பிறர் துன்பங்களை கண்டு இரக்கப்பட்டு அவர்களுக்கு உதவுவதற்க்கே. அப்படி இரக்கம்(கண்ணோட்டம்) இல்லையென்றால் கண் இருந்தும் அது இல்லாததற்கு சமம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முகத்து உளபோல் எவன் செய்யும் - கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் - அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்.
('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை
அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண்கள், முகத்தின்கண் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்? . அளவென்றது தகுதியை. இது தனக்கும் பயன்படாதென்றது

மு.வரதராசனார் உரை
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை
வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?.

No comments:

Post a Comment