வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

குறள் 865
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கான் - நோக்காமல் இருப்பவர்

வாய்ப்பன் - vāyppaṉ   n. prob. வாய்²-. Akind of cake; ஒருவகைப் பணிகாரம். (J.)

வாய்ப்பு - ஆதாயம்; கைகூடுநிலை; நேர்பாடு; நன்கமைந்தது; பொருத்தம்; அழகு; சிறப்பு; செழிப்பு; பேறு.

செய்யான் - ceyyāṉ   n. id. 1. See செய்யவன், 1. செய்யானை வெண்ணீ றணிந்தானை (திருவாச.8, 13). 2. Red, venomous centipede; செம்பூரான் Loc.  ; சிவந்தவன்; ஒருபூரான்வகை.

செய்யான்  - செய்யமாட்டான்

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

நோக்கான் - நோக்காமல் இருப்பவர்

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

இலன் - இல்லை என்று

பற்றார்க்கு - பகைவர்

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள்
நெறிநூல்கள் கூறும் வழிகளை ஆராய்ந்து நோக்காமல் அவ்வழிகளில் செல்லாமல், நல்ல வாய்ப்புகளை (வாய்ப்புகளைத் தேடி) நல்ல செயல்களை செய்யாமல், பழிவரும் செயல்களை தீய செயல்களை பழி வரும்படி செயல்களை செய்யதக்க,  நற்பண்புகள் அறவே இல்லாதவரை வெல்லுதல் மிக எளிது. அத்தகையவர் பகைவர்க்கு வேலையே/கஷ்டமே தரமாட்டார். ஆதலால் அவர் பகைவர்க்கு மிக இனிமையானவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வழிநோக்கான் - ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான் - அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழி நோக்கான் - தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்புஇலன் - தான் பண்புடையன் அல்லன்; பற்றார்க்கு இனிது - அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது. (தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான் 'வழி' என்றும் , தப்பாது பயன்படுதலின் 'வாய்ப்பன' என்றும் , இக்குற்றங்களுடையான் தானே அழிதலின் 'பற்றார்க்கு இனிது' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
ஒருவினை செய்யத்தொடங்குங்கால் பின் வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான், அதனால் உறும் பழியைப் பாரான், குணமுமிலன்; இவன் பகைமை பகைவர்க்கு இனிது. இஃது இவன் பகைமையால் பகைவர்க்கு இனிமை உண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.

சாலமன் பாப்பையா உரை
நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.

English Meaning - As I taught a kid - Rajesh
Whom does the enemies consider as darlings? 1) வழிநோக்கான்  -  The one who doesn't find and follow/live/travel by the ways mentioned by the books/scholars 2)  வாய்ப்பன செய்யான் - The one who doesn't seek opportunities 3) பழிநோக்கான் - The one who does wrong activities without worrying about the bad/negative consequences 4) பண்பிலன்  - The one who doesn't have noble qualities - The aforementioned are darlings for enemies because they can be easily defeated without much effort.

Questions that I ask to the kid
What are the four qualities which makes it easy for the enemies to defeat us?

No comments:

Post a Comment