கண்ணுடையர் என்பவர் கற்றோர்

குறள் 393
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
[பொருட்பால், அரசியல், கல்வி]

பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்

என்பவர் -என்கின்றனர்

கற்றோர் - தெளிந்தோர், சான்றோர், நூல்பலக் கற்றுஉணர்ந்தோர்

முகத்து - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

இரண்டு - இரண்டு'என்னும்எண்; சில உகரஎழுத்து; மலசலம்

புண் - உடல்ஊறு; தசை; வடு; மனநோவு. காயம்; ஊன்

உடையர் - உடையவர்கள்

கல்லாதவர் - கற்காதவர்கள்

முழுப்பொருள்
முகத்தில் எல்லோருக்கும் இரண்டு கண்கள் உள்ளது.  அதனால் என்ன பயன் ? ஏனெனில் கண் என்பது அறிவை குறிக்கும் சொல்லும் ஆகும். என் 'கண்ணை திறந்துட்ட' னு சொல்லாட்சி உண்டு. அது மட்டுமின்றி கண் என்றால் பீலிக்கண் (அழகிய மயில் தோகைக்கண்)  என்ற பொருளும் அடங்கும். ஆதலால் கண் இருந்தால் அவர் (அந்த சொல்லிற்கு தகுந்தாற்போல்) கண்டிப்பாக கற்று கற்றோராய் விளங்க வேண்டும். அப்படி ஒருவர் கற்று கற்றோராய் விளங்கவில்லையென்றால் அவர் கண்ணில் இரு புண் கொண்டவராவார் என்கிறார் திருவள்ளுவர். புண் என்றால் காயம் என்று மட்டும் பொருள் அல்ல மனநோய் என்றும் விளங்கும். ஆதலால் கல்லாதவரை மனநோய் கொண்டவர் புண் (காயம்) உடையவர் என்கிறார் திருவள்ளுவர்.

இங்கே திருவள்ளுவர் கற்க வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை. கற்று அதற்கேற்றாற்போல் நிற்கும் கற்றோராய் விளங்கவேண்டும் என்று தெளிவாக கூறுகிறார்.

அறிவுடையவர்களே உலகில் அதிகம் பார்க்க-புரிந்து கொள்ள ஆற்றலுடையவன். அறிவு இவர்கள் வாழ்வு. அறிவற்றவர் வாழ்வைவிடப் பொருண்மை "பொலிவு" நிறைந்தது என்படத்தில் ஐயமில்லை. இவர்களே "கண்ணுடையவர்கள்". இவர்கள் பிறநலச் சார்புடையவர்கள். இவர்கள் உலகிற்காகப் பாடுபடுபவர்கள். 

ஏன் கண்களையும் கல்வியையும் திருவள்ளுவர் தொடர்புபடுத்தவேண்டும்? ஏனெனில் கண்ணே மனிதன் முதலில் கற்க பயன்படுத்தும் கருவி. ஒரு குழந்தை வளரும் பொழுது தான் காணுபவற்றின் மூலமாக கற்கிறது. உதாரணமாக இன்று எனது 10 மாதமே ஆன எங்கள் பெண் குழந்தை உமையாள் நாங்கள் சப்பாத்தியிற்கு கையை ஒரு கோப்பையில் தோய்த்து உண்ணுகிறோம் என்பதை நாங்கள் கற்றுத்தராமால் தானாகவே கற்கிறாள். அவளுக்கு வெறும் சப்பாத்தி வேண்டாம் என்று செய்கை காண்பிக்கிறாள். உமையாள்  அதைப் பார்த்துத்தான் கற்றாள். ஆதலால் கண்களே கற்க இங்கு கருவி. அதனால் தான் திருவள்ளுவர் கல்வியையும் கண்ணையும் தொடர்புபடுத்திக் கல்லாதவர் கண் புண் என கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்.

வள்ளுவரே மற்றுமொரு அதிகாரத்தில், 

“குறள் 575
கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் 
புண்ணெண் றுணரப் படும்” என்கிறார். 

கலித்தொகை (130:6) பாடலொன்று,  “கல்லாது முதிர்ந்தவன் கண்ணில்லா நெஞ்சம்” என்கிறது.

“கண்ணில்புன் மாக்கள்” 
“கைப்பொருள் கொடுத்தும் கற்றல் கற்றபின் கண்ணும் ஆகும்” (சீவக.1595)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கண் உடையர் என்பவர் கற்றோர் - கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே, கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர் - மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண்ணுடையர், கண்ணிலர்.
(தேயம்இடையிட்டவற்றையும் காலம் இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண்உடைமையின் கற்றாரைக் கண்ணுடையர் என்றும் அஃதின்றி நோய்முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊனக்கண்ணேஉடைமையின், கல்லாதவரைப் புண்ணுடையர் என்றும் கூறினார்.மேல் கண்ணன்மை உணரநின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மைகூறியவாற்றான், பொருள் நூல்களையும் கருவிநூல்களையும்கற்றாரது உயர்வும், கல்லாதாரது இழிவும் இதனான் தொகுத்துக்கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர். அறிவு கல்வியின் கண்ணதாகலான் அக்கல்வியில்லாதார் கண் புண்ணாயிற்று.

மு.வரதராசனார் உரை
கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

சாலமன் பாப்பையா உரை
ற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

No comments:

Post a Comment