குறள் 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
[பொருட்பால், நட்பியல், நட்பு]
பொருள்
செயல் - செய்-. 1. Deed, act, action;செய்கை ; தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு;
அரிய - ariya adj. அரு-மை. Precious,dear, excellent, rare, difficult; அருமையான.
யா - யாவை
உள- யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால்
நட்பின் - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.
அதுபோல - அதனை போன்று
வினைக்கு - வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.
அரிய - ariya adj. அரு-மை. Precious,dear, excellent, rare, difficult; அருமையான.
யா - யாவை
உள- யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால்
காப்பு - பாதுகாவல்; காவலாயுள்ளது; காப்புநாண்; தெய்வவணக்கம்; காப்புப்பருவம்; திருநீறு; கைகால்களில்அணியும்வளை; வேலி; மதில்; கதவு; அரசமுத்திரை; ஏட்டுக்கயிறு; காவலானஇடம்; ஊர்; திக்குப்பாலகர்; சிறை; மிதியடி; அரசன்நுகர்பொருள்.
முழுப்பொருள்
வாழ்க்கையில் நாம் பலவற்றை செய்கிறோம். அப்படி செய்பவற்றில் நட்பை போன்று ஈன்றுவது/செய்வது வேறேதுமில்லை. அதாவது (நட்புறவை)உறவை போன்று ஈன்றுவதற்கு யாதுமில்லை. செயல் என்றாலே ஒழுக்கம் என்ற பொருளும் உண்டு. ஆதலால் நட்பிலும் ஒழுக்கம் உண்டு என்பது எனது எண்ணம். நல்ல நட்பை ஈட்டுவது ஒரு அரிய செயலாகும். அப்படி ஒரு நட்பு நமக்கு கிட்டினால் நாம் வாழ்க்கையில் ஆற்றும் மற்ற வினைகளில் நம்மை காக்கும் நட்பை போன்ற ஒரு அரிய கவசம் வேறேதுமுண்டோ ?
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
நட்பின் செயற்கு அரிய யா உள - நட்புப்போலச் செய்து கோடற்கு அரிய பொருள்கள் யாவை உள? அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள - செய்துகொண்டால் அது போலப் பகைவர் செய்யும் வினைக்குப் புகற்கு அரிய காவலாவன யாவை உள? (நட்புச்செய்தற்கு ஆவாரைப் பெறுதலும், பெற்றால்செய்யும் உபாயமும், செய்தால் திரிபின்றி நிற்றலும்முதலிய அரிய ஆகலின். 'நட்பிற் செயற்கு அரியன இல்லை' என்றும், செய்தால் பகைவரஞ்சி வினை தொடங்காராகலின், 'அதுபோல வினைவாராமைக்கு அரிய காவல் இல்லை' என்றும் கூறினார். நட்புத்தான் இயற்கை செயற்கை என இருவகைப்படும்: அவற்றுள் இயற்கை, பிறப்பு முறையானாயதூஉம், தேய முறையானாயதூஉம் என இருவகைப்படும். அவற்றுள் முன்னையது சுற்றமாகலின், அது 'சுற்றந்தழாலின'அடங்கிற்று. ஏனையது பகையிடையிட்ட தேயத்ததாகலின், அதுதுணைவலி என 'வலியறிதலுள' அடங்கிற்று. இனி ஈண்டுச்சொல்லப்படுவது முன்செய்த உதவி பற்றி வருஞ் செயற்கையேயாகலின், அதன் சிறப்பு இதனாற் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
நட்புப்போல உண்டாக்குதற்கு அரியவான பொருள்கள் யாவையுள? அவ்வாறு உண்டாக்கப்பட்ட நட்புப்போலப் பிறர் நல்வினை செய்தற்கு அரியவாகக் காக்கும் காவல்கள் யாவையுள? இது நட்புத் தேடவரிது என்றது.
மு.வரதராசனார் உரை
நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.
சாலமன் பாப்பையா உரை
சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?.

No comments:
Post a Comment