என்னைமுன் நில்லன்மின் தெவ்விர்

குறள் 771
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
என்னை - என்தந்தை; என்தாய்; என்தலைவன்; என்இறைவன்; யாது; என்ன; ஓர்இகழ்ச்சிக்குறிப்பு.

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்

நில் -[நிற்றல்]   3 v. intr. [K.nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt,tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில்லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast;to persevere, persist in a course of conduct;உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. Tostay, abide, continue; தங்குதல் குற்றியலிகர நிற்றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; tobe discontinued, stopped or suspended; ஒழிதல் வேலை நின்றுவிட்டது. 6. To be subdued;அடங்குதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியாழிசைநிற்ப (கலித். 143, 38). 7. To remain; tobe left, as matter in a boil, as disease in thesystem; to be due, as a debt; எஞ்சுதல் நின்றதிற் பதினையாண்டு (திவ். திருமாலை 3). 8.To wait, delay; தாமதித்தல் தெய்வம் நின்றுகேட்கும்.   

அன் - ஆண்பால்வினைவிகுதி; தன்மையொருமைவிகுதி; ஆண்பால்பெயர்விகுதி; ஆண்பால்வினையாலணையும்பெயர்விகுதி; சாரியை எதிர்மறைகாட்டும்வடமொழிமுனனொட்டுத்திரிபு

மின் - மின்னல்; ஒளி; பெண்; முன்னிலையேவற் பன்மை விகுதியுள் ஒன்று.;4. vulg. for மூன், before

நில்லன்மின்  - முன்பு  நிற்காதே / முன்பு நிற்க துணியாதீர்கள் 

தெவ்வு - tevvu   s. the moon, சந்திரன்; 2. battle, war, contest, போர்; 3. an opposing force or enemy, சத்துரு; 4. enmity, hostility, பகை.

நீவிர் - நீங்கள், முன்னிலைப்பன்மைப்பெயர்.

தெவ்விர் - உங்களை போன்ற பகைவர் 

பலர் - அநேகர்; சபை.

என்னை - என்தந்தை; என்தாய்; என்தலைவன்; என்இறைவன்; யாது; என்ன; ஓர்இகழ்ச்சிக்குறிப்பு

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்

நின்று - niṉṟu   id. adv. Always, permanently; எப்பொழுதும் நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை )  

கல் - வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி. நாடு  

கல் -  n. கல் + perh. நாட்டு.Hero-stone, cenotaph; வீரக்கல். நாகந்தை சிறுகுட்டியார் கல்நாடு (S. I. I. vii, 345).
வீரக்கல் - vīra-k-kal   n. வீரம்¹ +. Memorial stone. See நடுகல். Loc.; போரில் இறந்துபட்ட வீரனைத் தெய்வமாக நிறுத்தும்கல்

நின்றவர் - நின்றார்கள் 

முழுப்பொருள்
என்னுடைய வீரமிகு தலைவன் முன்பு நிற்காதீர்கள் அல்லது துணியாதீர்கள்(அசட்டுத்தனமாக). ஏனென்றால் அவரை (என் தலைவனை) வெல்வேன் என்று வீர சாகசம் செய்ய துணிந்த பகைவர்கள் எல்லோரும் அவரிடம் வீழ்ந்து நடுக்கல்லாய் (வீரக்கல்லாய்) அவரவர் வீட்டில் (நாட்டில்) நிற்கின்றனர். அவரது வீரம் அவ்வளவு செருக்கு (புகழ்)  வாய்ந்ததாகும்.

தனது தலைவனின் மீது தனது படைவீரர்களுக்கு உள்ள நம்பிக்கையே இங்கு செருக்கே விளங்குகிறது. அதற்கு ஏற்றவாரு தலைவன் இருத்தல் வேண்டும். ஒரு தலைவன் இடத்தில் எதிரியை வெல்லும் வியூகமும், எதிரிக்கு தலைவன் மீது அச்சமும் தேவை. அது தலைவனின் செயல் இருந்து வரும். கிரிக்கேட் விளையாட்டில் ஒரு அணி தனது முந்தைய வெற்றிகளை மட்டும் வைத்துக்கொண்டு விளையாட முடியாது. தற்போதைய அணியின் தலைவன் எவ்வாறு ஒழுக்கமாக விளையாட்டை அணுகுகிறான் என்பதும் மிக முக்கியம். ஒழுக்கம் (disciplined approach), வியூகம் (Strategy), சிந்தனை திறன்(thought process), செயல்திறன் (implementation/execution skills), ஆகியவை மிக முக்கியம். ஒரு யானை உண்ணுவதானாலும் அதனை ஒரே அடியாக உண்றுவிட முடியாது. ஒரு யானையினையும் ஒவ்வொரு வாயாக தான் சாப்பிட முடியும். (How to eat an elephant? Bite by bite). அதுப்போல் தலைவனும் எப்பேர்பட்ட எதிரியையும் ஒவ்வொரு அடியாக தான் வெல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் எல்லோரையும் வெல்லலாம். அந்த நம்பிக்கையை வீரர் இடத்தில் உருவாக்கி தக்கவைத்தல் மிக அவசியமாகும். 

இக்குறள், பகைவருடைய படையை அணுகி தம்மனோர் ஆண்மையை உயர்த்திச் சொல்லுவதாகிய புறப்பொருள் திணைகளுள் ஒன்றாம் வஞ்சித்திணையின் ஒருதுறையாம், “நெடுமொழி வஞ்சித் துறையைச்” சார்ந்த பாடலாகும். புறப்பொருள் வெண்பாமாலை, இதை, “ஒன்னாதார் படைகெழுமித் தன்னாண்மை எடுத்துரைத்தன்று” நெடுமொழி என்பது வீரவுரை, அல்லது பெருமித உரையாம்.

கீழ்வரும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலொன்றும் இதையொட்டி அமைந்திருப்பதாம்.

“இன்னர் எனவேண்டா, என்னோடு எதிர்சீறி
முன்னர் வருக. முரண்அகலும் – மன்னர்
பருந்துஆர் படைஅமருள் பல்லார் புகழ
விருந்தாய் அடைகுறுவார் விண்
                      – புறப்பொருள் வெண்பாமாலை 44

நடுகல் என்பதைப் பற்றி, சேரமான் பெருமாள் நாயனார், “பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்ட கல்லும்” என்கிறார். அகநானூற்றுப் பாடலும் இதே செய்தியை இவ்வாறு கூறுகிறது, “ நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர் தோறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்”


ஒப்புமை
1. ”களம்புகல் ஓம்புமின்தெவ்விர்” - புறநா.87:1
2. “போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை
      ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
      தாட்படு சின்னீர்க் களிற்ட்டு வீழ்க்கும்
      ஈர்ப்புடைக் கராஅத் தன்ன வென்னை”      (புறநா. 104:1-4)
3. “யாரே னுந்தா னாகுக யானென் தனியாண்மை 
     பேரேன் நின்றே வென்றி முடிப்பென் புகழ்பெற்றேன்
     நேரே செல்லும் கொல்லுமெ னிற்றானி மிர்வென்றி
     வேரே நிற்கும் மீள்கிலன் என்னா விடலுற்றான்” (கம்ப.இராவணன் வதை. 136)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர் - பகைவீர்,இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின் - நீவிர் அதன்கணின்றி நும் உடற்கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின். ('என் ஐ' எனத் தன்னோடு தொடர்புபடுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல் - நடுகல். 'நம்பன் சிலை வாய் நடக்குங்கணைமிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை',(சீவக.காந்தர்வ.317) என, பதுமுகன் கூறினாற் போல ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி'.(பு.வெ.மா.வஞ்சி.12).

மணக்குடவர் உரை
என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! நில்லாது ஒழிமின்; முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லிலே எழுதப்பட்டு நிற்கின்றார் பலராதலால் என்றவாறு. இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் என்றது.

மு.வரதராசனார் உரை
பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.

சாலமன் பாப்பையா உரை
பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.

English Meaning - As I taught a kid - Rajesh
Do not think or have to courage to stand in front of my leader/King because the people who had fought with my leader/King had lost his life and stood as stone in the graveyard in their home/place. This Kural showcases the confidence of soldiers on the King which means that King had capabilities to defeat any kind of opponent. That King had a disciplined approach, strategy, though process, implementation/execution skills, practice/preparedness, courage to take over an opponent.

Questions that I ask to the kid
What kind of courage a solider has on his king? What does that signify about a king?

No comments:

Post a Comment