Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

குறள் 182
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே 
புறனழீஇப் பொய்த்து நகை
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]

பொருள்
அறன் - aṟaṉ   n. அறம் Sacrificer, asperforming a sacred duty; வேள்விமுதல்வன் (பரிபா. 3, 5.)  ; வேள்விமுதல்வன்; அறக்கடவுள்

அழீஇ - அழி - கேடு; வைக்கோல் வைக்கோலிடும்கிராதி; கிராதி வண்டு மிகுதி வருத்தம் கழிமுகம் இரக்கம்

அல்லவை - அறம் அல்லாதவை; பாவச் செயல்கள்; பயன் அல்லாத செயல்கள்; allavai   n. அல்¹. 1. Sin, evil;பாவம். அழுக்காற்றி னல்லவை செய்யார் (குறள், 164).2. Uselessness, fruitlessness; பயனின்மை. (பிங்.)

செய்தலின் - செய்வது

தீதே - தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு.

புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

புறன்  - puṟaṉ   புறம்¹. n. 1. See புறம்¹. 2.Slander; பழிச்சொல். கேளாம் புறன் (சி. போ.அவையடக். 9).--adv. Behind one's back;காணாதபோது. புறனழீஇப் பொய்த்து நகை (குறள்,182).

அழீஇப் - இழிவாக இப்பொழுது பேசுதல்

பொய்த்து - அசத்தியம்; (எ. கா.) பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ (குறள். 938); மாயை (W); போலியானது (W.); நிலையாமை; (எ. கா.) புற்புதமே யன்ன பொய்க்குடி வாழ்க்கை யை (திருநூற். 3); உட்டுளை; (எ. கா.) பொய்பொரு முடங்குகை (சிலப். 15, 50); மரப்பொந்து (பிங்.); செயற்கையானது (பேச்சு வழக்கு); சிறுசிராய் (W.); உண்மை இல்லாதது, உண்மைக்குப் புறம்பானது

நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.
நகை - (வி)சிரி; பழி

முழுப்பொருள்
எனக்கு இக்குறளுக்கு இரண்டு பொருள்கள் தோன்றுகின்றன (ஏனோ தெரியவில்லை சமீபகாலமாக சில குறள்களுக்கு இரு அர்த்தங்கள் தோன்றுகின்றன. வாசிப்போர் அவர்களுக்கு சரி என்று படுவதை எடுத்துக்கொள்க)

1) அறத்தை அழித்து பாவச் செயல்களை செய்வதைப் போன்று (அல்லது அதனினும்) தீயது, கேடு விளைவிக்ககூடியது பிறரைப்பற்றி அவர் இல்லாதப் பொழுது தவறாகப் பேசிப் பின்பு அவர் இருக்கும்பொழுது செயற்கையாக நல்வற்றைப் பேசுவது (முகஸ்துதி செய்வது) என்ற பழி. நகை என்ற சொல்லுக்கு பழி என்ற பொருளும் உண்டு. ஆதலால் ஒருவர் புறம் பேசுவது நகைப்புக்கு /சிரிப்புக்கு என்ற அர்த்தத்திலும் மற்றொன்று பழி என்ற அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ளலாம்.

2) பிறரொருவர் அறத்தை அழித்து அறத்திற்கு புறம்பாக பாவச்செயல்களை நமக்கு செய்தாலும் அவறைப் பற்றி நாம் புறம் பேசுவது தீயது ஆகும். அதாவது அவறைப்பற்றி தவறாக அவரது முதுகுக்கு பின்னால் அவரில்லாதபோது பேசுவது தீயது ஆகும். கேடு விளைவிக்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப்பொய்த்து நகை - ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல். (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் - ஒளியைக் கோறல்.).

மணக்குடவர் உரை
அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல். இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.

மு.வரதராசனார் உரை
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.


Thirukkural - Management - Avoiding Backbiting
Though duality is the way of the universe, dual nature must not be the way of an individual. One's tongue should not move according to its whims and fancies just because it is flexible. Sharing with a person the negative qualities of another person in his absence and talking the positive qualities of the same person in his presence are too dangerous. They are more harmful than committing a crime, advices Kural 182.

Worse thon scoffing at virtue and committing a sin
Is to slander behind one's back and smile to his face.

No comments:

Post a Comment