குறள் 124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
[அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.
நிலையின் - நிலையில்
திரிதல் - அலைதல்; எழுத்துமாறுதல்; பால்தன்மைகெடுதல்; கெடுதல்; சுழலல்; வேறுபடல்; சலித்தல்; மயங்குதல்; கைவிடுதல்; திருகுறுதல்; போதல்; திரும்புதல்.
திரியாது - அலையாது, கெடாது, மயங்காது, கைவிடாது
அடக்கம் - மனமொழி மெய்கள் அடங்குகை; கீழ்ப்படிவு பணிவு அடங்கியபொருள்; மறைபொருள் கொள்முதல் பிணம்அடக்கம்செய்தல்.
அடங்கியான் - அடங்குதல் - aṭaṅku- 5 v. intr. 1. Toobey, yield, submit, to be subdued; கீழ்ப்படிதல் நிலையிற் றிரியா தடந் யான் (குறள், 124). 2. Toshrink, become compressed; சுருங்குதல் தழற்பசியடங்கிடாது (கி. பூ 20, 6). 3. To cease; aṭaṅku- 5 v. intr. 1. Tobe close together, thick or crowded; நெருங்குதல். அலவன் கண்பெற வடங்கச் சுற்றிய (கலித். 85).2. To lie, lie down; கிடத்தல். வெள்ளேற்றெருத்தடங்குவான் (கலித். 104).
தோற்றம் - காட்சி; விளக்கம்; சாதி; படைப்பு; சாயை; புகழ்; பார்வை; உயர்ச்சி; உற்பத்தி; பிறப்பு; உருவம்; தன்மை; வலிமை; சொல்மாலை; உறுப்பு; உத்தேசம்; நாடகப்பிரதேசம்; எண்ணம்; மாயை; இருவகைத்திணை; காண்க:உயிர்த்தோற்றம்.
மலை - malai n. perh. மல்லல். [K. male.] 1.Hill, mountain; பருவதம். மலையினு மாணப் பெரிது(குறள், 124). 2. Collection, aggregation; ஈட்டம்.சொன்மலை (திருமுரு. 263). 3. Abundance, bigness, as a mountain; மிகுதி. Colloq.
மலையினும் - மலையை விட
மாணப் - மாண் -. Greatness;glory; splendour; excellence; dignity; மாட்சிமை., மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.
பெரிது - பெரிது, மிகவும்
முழுப்பொருள்
தான் கொண்ட நெறிகளில் இருந்தும், தன் கொள்கைகளில் இருந்தும், நிலை மாறாமல், மன உறுதியுடன் அடக்கத்துடன் வாழ்பவனின் உயர்வானது மலையினை விட பெரிதாகும்.
இக்குறளுக்கு எடுத்துகாட்டாக சம காலத்தில் பலர் உள்ளனர். சிகரம் தொட்டும் அடக்கத்துடன் இருக்கும் அவ்வுயரிய பண்பே அவர்களுக்கு மேலும் சிறப்பை கொடுக்கின்றது.
இதிகாச உதாரணம் கூற வேண்டும் என்றால், அனுமனை கூறலாம். மிக வலிமை பெற்றவனானாலும் கூட, எந்த இடத்திலும் அதை காட்டிக் கொள்ளாமல், ராமனுடைய கடை நிலை பக்தன் மட்டுமே என்று அடக்கத்துடன் நடந்து கொள்வது, அனுமனுடைய சிறப்பை மேலும் உயர்த்துகிறது .
ஒப்புமை
“ஆன்றோர் போலத்
துளக்கம் இல்லாத் திருத்தகு நிலைமைய” (பெருங் 1.50:4-5)
“மலையணைய நிலையுடைய மாதவர்கள்” (மேரு.சமவ.49)
பரிமேலழகர் உரை
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது - மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.).
மணக்குடவர் உரை
தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.
மு.வரதராசனார் உரை
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
பொருள்: நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - (தனது இல் வாழ்க்கை) நிலையினின்று வேறுபடாது (உளம், நா, உடல்) அடங்கியவனது தோற்றம், மலையினும் மாண பெரிது ‡ மலையினும் மிகப் பெரியது.
அகலம்: தோற்றம் - விளக்கம். தாமத்தர் பாடம் ‘நிலையிற் பிரியா’. இல்வாழ்க்கை நிலையினின்று வேறுபடாது அடங்குவதாவது, இல்வாழ்க்கை யின்கண் அடக்கி யாள வேண்டியவர்களை அடக்கி யாண்டுகொண்டே தான் அடங்கி யயாழுகல். ‘கருமஞ் சிதையாமல்’ என்னும் தொடக்கத்துக் குறளையும் நோக்குக. முந்திய மூன்று குறள்களால் பொதுவான அடக்கத்தைக் கூறினார். இக் குறளால் பிறருக்கு அடங்கி யயாழுகுதலின் பெருமையைக் கூறினார்.
கருத்து: இல்வாழ்வானது அடக்கம் அவனுக்கு மிக உயர்ந்த பெருமையைத் தரும்.
Management - 3 big questions of a king
A legend is that a King told one of his Ministers to find answers to three of his pressing questions. They were: 1) What is bigger than the earth? 2) What is deeper than an ocean? 3) What is taller than a mountain? The Minister explored all the possibilities to find answers to the King’s questions.
He could not get convincing answers to convince the King. He was much concerned that he would fail in fulfilling his responsibility. His daughter, on reading the disturbances on his face, asked him what was bothering him. The Minister explained to her the King’s expectations and his inability to find convincing answers to his questions. His daughter said, “My teacher told us, ‘You can find answers to all your questions in Thirukkural.’ My teacher is right as he always refers to Thirukkural to answer our questions. You too can refer to Thirukkural to find answers to your questions.” The Minister started to refer to Thirukkural to find answers to the King’s questions. He, like a detective with a magnifying glass, was meticulously reading the Kurals as he had a purpose. When he reached the Chapter 11, he found answer to the first two questions.
Kural 102 provided the answer to the King’s first question ‘What is bigger than the earth?’
குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
Given in time, even a trifling help Exceeds the earth. A timely help, even though small, is considered and will be treated by the person helped as bigger than the earth. Remember the old saying, ‘A friend in need is a friend indeed.’ The size of the help does not matter, but the time of the help matters the most.
Kural 103 provided the answer to the King’s second question ‘What is deeper than an ocean?’
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது (103).
Help given regardless of return Is wider than the sea. An unconditional help, like a mother’s love, that is helping someone without expecting any favor in turn, is considered deeper than an ocean. Somehow, we have become selfish and
we, before rendering any help, calculate the return on investment. When we expect something in return to the help provided to others that is not true help. Altruism is helping someone just for the sake of helping. An often told story is that a sadhu was bathing in the river Cauvery in Tamilnadu. He noticed a scorpion being carried away in the river. He wanted to save the scorpion, touched that to put that on the bank of the river. The scorpion stung his hand when he touched that. The sadhu dropped that. He attempted again, it stung again and he dropped the scorpion again. He kept on doing that to save the scorpion. An onlooker irritatingly commented, “Swami, you know a scorpion stings. In spite of that you are trying to save that.” The sadhu replied, “The nature of a scorpion is to sting. The nature of a sadhu is to help others despite difficulties.”
When the Minister continued reading further, he found the answer to the King’s third question ‘What is taller than a mountain?’ in Kural 124.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது (124).
The steadfast self-controlled towers aloft Taller than a mountain. If a person can remain polite and humble when he gets power, positions, personal gains, authority, and wealth, the ability to remain polite is considered taller than a mountain.
The Minister, while reading further, found answers to many of his pressing personal and professional problems.
English Meaning - As I taught a kid - Rajesh
The stature of one, who doesn’t diverge from the right path (values, policies, discipline, character etc.) and remains restrained, will belittle a mountain. Despite reaching heights, these people are humble which itself gives more heights for them. We can given Lord Hanuman as an example because despite his humongous strength he always remained humble and remained as bhakta of Lord Rama.
Questions that I ask to the kid
What can belittle a mountain?
What happens when you don't diverge from the right path?
No comments:
Post a Comment