கண்ணும் கொளச்சேறி நெஞ்சே

குறள் 1244
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

கொளச் - கொள் - koḷ   கொள்ளு, I v. t. take, receive in the hand, வாங்கிக்கொள்; 2. contain, hold, பிடி; 3. have, bear, வைத்திரு; 4. buy, வாங்கு; 5. take food, medicine etc. உட்கொள்; 6. marry, take a wife, பெண் கொள்; 7. get, obtain, பெறு; 8. resemble, ஒத்திரு; v. i. suit or befit, பொருந்து; 2. strike, hurt:-Note-As an auxiliary it either has a reflexive sense or denotes continuation. In the latter sense often கொண்டிரு & கொண்டுவா is used (see examples below).

சேறி - அவரைக் காணச்செல்லுகையில்

நெஞ்சே -  நெஞ்சு - (என் உள்ளமே) - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

இவை  - vai   pron. இ³. [T. ivi, K. ivu, M.iva.] These, the things close to the speaker,impers. pl.; சுட்டியறியப்படும் அண்மைப்பொருள்கள். (திருக்கோ 223, உரை )  

என்னைத் - என்னை - என்தந்தை; என்தாய்; என்தலைவன்; என்இறைவன்; யாது; என்ன; ஓர்இகழ்ச்சிக்குறிப்பு.

தின்னும் - தின்னுதல் - உண்ணுதல்; கடித்தல்; மெல்லுதல்; அரித்தல்; அழித்தல்; வருத்துதல்; வெட்டுதல்; அராவுதல்; பெறுதல்.

தின்னும் - பசியால் தின்னும்

அவர்க் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

காணல் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

உற்று - ṟṟu   part. உறு-. A sign of comparison; ஓர் உவமவாசகம் தோளுற்றோர் தெய்வம்(சீவக. 10).  


முழுப்பொருள்
கண் நெஞ்சத்திடம் இவ்வாறு கூறுகிறது:
இந்த கண் காண்பித்துத் தானே நீ அவனை பார்த்தாய். நீ மட்டும் எங்க போனாலும் எங்கேயும் செல்கிறாய். உனக்கு நன்றியே இல்லையே. இந்த கண் காட்டவில்லை என்றால் அவனை நீ பார்த்திருப்பாயா ? கூடவே போகிறாயே. போமோது இந்த கண்ணையும் கூட்டிக்கொண்டு சென்றால் என்ன ?

(மொத்தமாக அவள் செல்வதற்கு திட்டம் தீட்டுகிறாள் - அவள் சென்றாள் தான் கண் செல்லும் அல்லவா ?)

இல்லையெனில் அவனை காணாத துயரத்தினால் இந்த கண் அவளை உண்றுவிடும்

குறட் கருத்து (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
நன்றியில்லா நெஞ்சென்று  தன் நெஞ்சையே
   நங்கையவள் நினைக்கின்றாள் அழகு போங்கள்
மன்னவனைப் பார்த்ததவள் கண்கள் தானாம்
   மனதுக்கோ அதனால்தான்  பழக்கமானான்
சின்னவனைத் தேடி இந்த நெஞ்சு மட்டும்
   சிறகடித்துப் பறக்கிறதாம் ஊர்கள் எங்கும்
கண்களையும் அழைத்துச் செல்ல  வேண்டும் என்றே
   கை கூப்பி வேண்டுகின்றாள் நெஞ்சம் தன்னை

நன்றி : திரு.நெல்லை கண்ணன் (Star Vijay: தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நெஞ்சே, கண்ணும் கொளச் சேறி - நெஞ்சே நீ அவர்பாற் சேறலுற்றாயாயின் இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும் - அன்றி நீயே சேறியாயின், இவைதாம் காட்சி விதுப்பினால் அவரைக் காண்டல்வேண்டி நீ காட்டு என்று என்னைத் தின்பன போன்று நலியா நிற்கும். ('கொண்டு' என்பது, 'கொள' எனத் திரிந்து நின்றது. தின்னும் என்பது இலக்கணைக் குறிப்பு. அந்நலிவு தீர்க்க வேண்டும் என்பதாம். என்றது, தான் சேறல் குறித்து.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! நீ அவர்மாட்டுச் செல்லுவையாயின் இக்கண்களும் அவரைக்காணும்படி கொண்டு செல்வாயாக: அவரைக் காணலுற்று இவை என்னைத் தின்பனபோல நலியாநின்றன. கொள - பார்க்க.

மு.வரதராசனார் உரை
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.

No comments:

Post a Comment