உடுக்கை இழந்தவன் கை போல

குறள் 788
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பு]

பொருள்
உடுக்கை - Raiment,clothing; உடை, இடைசுருங்குபறை; சீலை உடுத்தல்.

இழந்தவன் - இழத்தல் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

போல - போல், போன்று

ஆங்கே -  ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.

இடுக்கண் - மலர்ந்தநோக்கமின்றிமையல்நோக்கம்படவரும்இரக்கம்; துன்பம் வறுமை

களைவதாம் - களைதல் - பிடுங்கியெறிதல்; நீக்குதல்; ஆடையணிகழற்றல்; அழித்தல்; குழைதல்; அரிசிகழுவுதல்; கூட்டிமுடித்தல்.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை

முழுப்பொருள்
உயிரை விட மானம் பெரிதாக கருதப்படும் நம் வாழ்வில்,நாம் அணிந்து இருக்கும் உடை நழுவி விழும் பொழுது நம்மையும் அறியாமல் நம் கை அதை சென்று பிடிக்குமே. நாம் சொல்லி கைகளுக்கு தெரிய வேண்டியது  இல்லை. தானாக சென்று நம் மானம் காக்குமே. இதை போன்று நண்பன் ஒருவனுக்கு துன்பம் என்றால் அது சொல்ல கூடியதோ,சொல்ல முடியாததோ, அந்த துன்பத்தை நீக்க நாம்  ஓடி சென்று உதவுவதே நட்பு.

ஒப்புமை
”தோளுற்றொர் தெய்வம்” (சீவக.10)
“தோள்முதல் தோழனை” (பெருங்.2:13:43)

“உடையழி காலை உதவிய கைபோல்
நடலை தீர்த்தல் நண்பன தியல்பென” (பெருங் 5.3:39-40)

பரிமேலழகர் உரை
உடுக்கை இழந்தவன் கைபோல - அவையிடை ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி அவ்விளிவரல் களையுமாறு போல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம் - நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி அப்பொழுதே சென்று உதவி அதனைக் களைவதே நட்பாவது. (அற்றம் காத்தற்கண் கை தன் மனத்தினும் முற்படுதலின், அவ்விரைவு இடுக்கண் களைவுழியும் அதற்கு ஒத்த தொழில் உவமையினும் வருவிக்க. உடையவன் தொழில் நட்பின்மேல் ஏற்பட்டது.).

மணக்குடவர் உரை
உடைசோரநின்றானுக்குக் கைசென்று உடைசோராமற் காத்தாற்போல, இடுக்கண்வந்தால் அப்பொழுதே அவ்விடுக்கணை நீக்குவது நட்பாவது.

மு.வரதராசனார் உரை
உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

சாலமன் பாப்பையா உரை
பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

Thirukkural - Management - Relationship
We know that a relationship happens when there is a need fulfillment. Any need fulfillment must be spontaneous and instantaneous. When an act is unconditional, unconditional means not expecting  any favor in turn, that act will be spontaneous and instantaneous. Yet another simile is employed by Valluvar in Kural 788 to educate us on altruism in relationships. A relationship is sustainable only when it is unconditional.

Swift as one's hand to slipping clothes 
Is a friend in need.

When a dress slips from your body, your arms do not wait for instructions from your brain to stop the slipping. Your arms act unconsciously, spontaneously, and quickly to adjust the slipping dress. Your arms do not expect any favor in turn for helping your body. Similarly, if your friend is in trouble, helping him come out of that trouble without expecting  any favor in turn is true and meaningful relationship. Remember,  “A friend in need is a friend indeed.”

No comments:

Post a Comment