எண்ணித் துணிக கருமம்

குறள் 467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
எண்ணித் - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

துணி-தல் - tuṇi-   4 v. cf. tuṇḍவெட்டுண்ணுதல் இருடுணிந் தன்ன குவவுகுருளை (அகநா. 201). 2. To be removed;இன்றே துணிந்ததென் வினைத்தொடர்பு(கம்பரா. கையடை 5). 3. To be torn; கிழிதல் ஆடையுந் துணிந்த சீரையாக்கியே (திருவாத. பு மண்சும. 29). 4. To become clear; தெளிவாதல். துணிநீர் மெல்லவல் (மதுரைக். 283). 5.To dare, venture; தைரியமடைதல். அவன் இப்போது துணிந்து பேசுகிறான்.--tr. 1. To resolve,determine, ascertain; to conclude; நிச்சயித்தல் அருஞ்சுரந் துணிந்து பிறளாயினள் (அகநா. 35). 2.To commence; தொடங்குதல் எண்ணித் துணிககருமம் (குறள், 467).  

துணிக - துணிவு - தெளிவு; மனத்திட்பம்; நம்பிக்கை; நோக்கம்; துண்டு; ஆண்மை; துணிச்சல்; உறுதி; முடிவு; கொள்கை; தாளம்; கைக்கிளைவகையுள்ஒன்று.

கருமம்செயல்; வினைப்பயன்; தொழில்வேதசம்பந்தமானசடங்கு; இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி.

துணிந்த துணி-தல் - tuṇi-   4 v. cf. tuṇḍவெட்டுண்ணுதல் இருடுணிந் தன்ன குவவுகுருளை (அகநா. 201). 2. To be removed;இன்றே துணிந்ததென் வினைத்தொடர்பு(கம்பரா. கையடை 5). 3. To be torn; கிழிதல் ஆடையுந் துணிந்த சீரையாக்கியே (திருவாத. பு மண்சும. 29). 4. To become clear; தெளிவாதல். துணிநீர் மெல்லவல் (மதுரைக். 283). 5.To dare, venture; தைரியமடைதல். அவன் இப்போது துணிந்து பேசுகிறான்.--tr. 1. To resolve,determine, ascertain; to conclude; நிச்சயித்தல் அருஞ்சுரந் துணிந்து பிறளாயினள் (அகநா. 35). 2.To commence; தொடங்குதல் எண்ணித் துணிககருமம் (குறள், 467).  

பின் பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

எண்ணுவம் - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

என்பது  என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )

இழுக்கு குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

முழுப்பொருள்
எண்ணுதல்
பேசிக்கொண்டே இருப்பதால் ஒரு பயனும் இல்லை. செயலில் காட்ட வேண்டும். ஏனெனில்குறள் 664 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்”.  அதனால் அதற்காக யோசிக்காமல் ஒரு செயலை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது. ஒரு செயலை ஆரம்பித்துவிட்டு பின்பு வரும் பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று ஒரு செயலை செய்வது தவறு. ஏனெனில் ஒரு செயலைத் துவங்கியப் பின்பு பல பிரச்சனைகள் வரக்கூடும். ஆதலால் குறைந்தபட்ச ஆராய்ச்சியும் திட்டமிடுதலும் தேவை. ஒரு செயலை துவங்குவது எளிது/சுலபம். ஆனால் தொடர்ந்து முடிவு வரை செயலாற்றுவது கடினம். ஆதலால் முடிவை எண்ணி துவங்கு (Start with the end/goal in mind)

ஒரு காரியத்தை நாம் செய்யப் போகிறோம் என்றால் அதற்காக காலத்தையும், பொருளையும் செலவிடப் போகிறோம் என்று அர்த்தம். அப்படி ஒரு காரியத்திற்காக செலவிடும் போது அந்த  காலத்தையும், பொருளையும் மற்ற காரியங்களுக்கு செலவிட முடியாது. எவ்வளவோ வேலைகளை விட்டு விட்டு  இந்த காரியத்தை செய்யப்  போகிறோம்.  

ஆதலால் ஒரு செயலை செய்யத் துவங்கும் முன்பு அச்செயலைப் பற்றி நன்கு எண்ண வேண்டும். எண்ணவேண்டும் எனில், அச்செயலில் தன்மை, பயன் (அரும் பயன் வாய்க்குமா? தீமை வாய்க்குமா) என்ன என்றும், செயலில் வரக்கூடிய இடையூறுகள், சிக்கல்கள்,  துன்பங்கள், ஆபத்துகள் என்ன என்றும், செயலை செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்றும் ஆராய வேண்டும். இந்த வேலையை செய்து முடிக்க எவ்வளவு பொருள், காலம், பணம், உழைப்பு, ஆட்கள், திறன், துணை போன்றவை தேவைப் படும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அனுமானிக்க வேண்டும். முடிந்த அளவு ஆழமாய் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆழமாய் தெரிந்துக்கொள்கிறேன் என்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது. Analysis paralysis என்பார்கள்.

அவ்வாறு செயலைப் பற்றி நன்கு ஆராய்ந்துப் பின்பே ஒரு செயலைத் துவங்க வேண்டும். துவங்கியப் பின்பு வழியில் ஆராய்ந்துக்கொள்ளலாம் என்று நினைப்பது மிக தவறு. ”வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம்” என்ற மனப்பான்மை  இழுக்கு.

முறையாக திட்டமிடுதல் எப்படி?
ஆங்கிலத்தில் 5W, 2H (ஐந்து ‘W’-ல் ஆரம்பிக்கும் கேள்விகள் – 
What? (என்ன?) Why? (எதற்கு? ஏன்) Where? (எங்கு?) When? (எப்பொழுது) Who? (யாருக்கு / யாரால்?) மற்றும் இரண்டு ‘H’ –ல் ஆரம்பிக்கும் கேள்விகள் How? (எப்படி?) How much? (எவ்வளவு)) என்று கூறுவார்கள்.

1) ஏன் செய்ய வேண்டும்? 
”ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை” என்ற (எம்.ஜி.ஆர் நடித்த) திரைப்பட பாடலை நாம் அறிவோம். நம் வாழ்க்கையே இதனை சுற்றித் தான் இருக்கிறது.

இந்தக் காரியத்தை செய்வதால் என்னப் பயன்?
இதனால் பயனடையப் போவது யார்?
அப்பயன் நமக்கு மகிழ்ச்சியை (மன நிறைவை) தருமா? அல்லது நாம் நினைக்கும் இலாபம் கிடைக்கும். 

அது மட்டுமல்ல. இது தெரிந்தால்தான் நாம் காரியத்தைச் சரியாகச் செய்து முடித்தோமா என்பதும் நமக்குப் புரியும்.

2) என்ன செய்யப் போகிறோம்?
சிந்தனை வடிவில் இருக்கும் நம் மன ஓட்டத்தை செயல் வடிவிற்கு கொண்டு வருகிறோம். ஒரு உயர்நிலை எண்ணத்தை சிறு சிறு எண்ணங்களாக்கி செயல் வடிவம் கொடுக்கிறோம்

3) எங்குச் செய்ய வேண்டும்? மற்றும் எப்பொழுதுச் செய்ய வேண்டும்?
எந்த இடத்தில் செய்வது? எந்த நேரத்தில் செய்வது? ஆங்கிலத்தில் “When: The Scientific Secrets of Perfect Timing: Pink, Daniel H ” என்ற ஒரு புத்தகமே எப்பொழுது என்பதற்காக இருக்கிறது.

4) எப்படிச் செய்ய வேண்டும்?
செயலை எப்படிச் செய்யப்போகிறோம்? என்பது மிக மிக முக்கியமான கேள்வி. என்ன என்ன வழிகளில் செய்யப் போகிறோம்? நமது வெற்றிக்கான அளவுக்கோள்கள் (Key Performance Indicators) என்ன என்ன? அந்த அளவுக்கோள்களை எப்படி, அத்தனை நாளைக்கு ஒருதரம் அளக்கப்போகிறோம் (How are we going to measure the KPIs and how often)? நாம் செய்யும் செயல்களின் அளவுக்கோள்கள் என்ன (Lead Indicators. e.g, Measuring the number of calories we are consuming (if weight loss is the goal), number of sales calls / sales meetings, number of lines coded etc)? நமது செயலின் பலன் எவ்வளவு (Lag Indicators. e.g., Weight lost in a week, Number of sales contracts, revenues etc) என்ன என்ன பிரச்சனைகள் வரலாம்? பிரச்சனைகள் வரமால் இருக்க என்ன செய்யவேண்டும்? பிரச்சனைகள் வந்தால் எப்படி சமாளிப்பது? Back up plan, risk mitigation plan, contingency plan என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

5) எவ்வளவு தேவை?
செயலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? எத்தனை ஆட்கள் தேவைப்படும்? அதற்கான செலவு எவ்வளவு ஆகும். இக்கேள்வி மிக முக்கியம். ஏனெனில் ஒரு செயலை பணம் இல்லாமல் நிறுத்தில் அதுவரையில் செலவு செய்த எல்லாம் வீணாக வாய்ப்புகள் உண்டு.

ஒரு செயலை செய்யும் பொழுது அதற்கு பல காலம் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒரு வருடமே மிக அதிகம். 12 வாரங்கள் (தோராயமாக 3 மாதங்கள்) தான் எடுத்துக்கொள்ள வேண்டும். [The 12 week Year by Brian P. Moran and Michael Lennington என்று ஒரு புத்தகம் உண்டு] நமது செயலை 12 வாரங்களாக பிரித்துக்கொண்டால் நாம் ஒவ்வொரு 12 வாரத்திற்கும் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு ஒரு வேகத்தில் செல்லலாம். ஒவ்வொரு 12 வாரமும் நம்மை நாம் சரிப்பார்த்துக்கொண்டு தேவையான இடங்களில் சரிசெய்துக்கொண்டு, திட்டங்களை அதற்கேற்றவாரு சரி செய்யலாம். நாம் நினைத்த அளவு வெற்றி கிட்டவில்லையெனிலோ அல்லது மேலும் செல்வது வெற்றியை தராது என்று ஒரு கட்டத்தில் தெரிந்தாலோ அச்செயலை கைவிடுதல் தவறில்லை. அதைப்பற்றி விரிவாக “நுனிக்கொம்பர் ஏறினார்” குறளை எடுத்துக்காட்டி இறுதியில் கூறியுள்ளேன்.

6)யாரால் செய்யப்பட வேண்டும்?
யார் செய்யப்போகிறார்கள்? செய்யப்போகிறவரிடம் அதற்கான தகுதியும், திறனும், அனுபவமும், நேரமும் இருக்கிறதா? அவர் கேட்கும் சம்பளத்தை நம்மால் கொடுக்க முடியுமா? அவர் கோரும் திறன் வாய்ந்த குழுவை நம்மால் தர முடியுமா? அவர்களுக்கு தேவையான பயிற்சியை தரமுடியுமா?

நமக்கு வரக்கூடிய மற்றக் கேள்விகள்
எப்படி துவங்குவது?
எப்படி முடிப்பது?
இடையூறுகள் வந்தால் எப்படி சமாளிப்பது?
எடுத்தச் செயலை முடித்துவிட்டோம் என்பதை எப்படி அறிந்துக்கொள்வது?

இவற்றை அறிந்துக்கொண்டால் நாம் சரியான வழியில் எவ்வித அச்சமும் இன்றி செல்லலாம். தகவல்களே நமது அறியாமையை குறையும். அறியாமை குறைந்தால் அச்சமும் குறையும்.

துணிவு
துவங்க என்று மட்டும் சொல்லாமல் துணிய என்று கூறியுள்ளார். எல்லாவற்றையும் ஆராய்ந்துவிட்டு, அச்செயலில் நன்மை இருக்கும் எனில், அச்செயலை துவங்க துணியவேண்டும். துணிவு என்பது மனதில் உறுதி, நம்பிக்கை, திட்பம், ஆளுமை(ஆண்மை), தெளிவு ஆகியவற்றை குறிக்கிறது. அதற்கு ஏற்றார்ப்போல் ஒரு செயலை துணிந்து துவங்க வேண்டும். 

நாம் இச்செயலை முடித்துவிட முடியும் என்ற தன்னம்பிக்கை மிக அவசியம். அதுவே துணிவு. அத்தன்னம்பிக்கை தெளிவில் இருந்து வரும். அத்தெளிவு நாம் ஒரு செயலினை செய்வதற்கு முன்பு செய்யும் ஆராய்ச்சியாலும், நமது திறத்தாலும், நமது அறிவாலும் வரும்.

துணிவு இல்லாமல் ஒரு செயலை துவங்கினால் அது செயலில் தெரிந்துவிடும். துணிவு இல்லாமல் செய்தால் ஒரு இடையூறு வந்தாலோ அல்லது சோர்வு வந்தாலோ செயலை பாதியிலேயே விடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும், துணிவு இருந்தால் தான் பயமில்லாமல் ஒரு செயலை செய்யலாம்.  அச்சம் என்பது வாழ்வில் மிகப்பெரிய ஒரு மனத்தடை. அது நம்மை செயலாற்ற விடாமல் குட்டையில் இருக்கும் நீர்ப்போல் தேங்கச்செய்யும். அல்லது செயல் புரிவதைத் தள்ளிப்போடும். (Fear is a reason for procrastination). பயம் நம்மிடம் இருந்தால் மறதி, சோம்பல் ஆகிய குணங்கள் நம்மிடம் குடிக்கொள்ளும். செய்யவேண்டிய செயல்களை விட்டுவிட்டு சின்ன சின்ன சில்லறை செயல்களை செய்து பொய் மகிழ்ச்சிக்கொள்வோம். மேலும் ஒருவரை நாம் அஞ்சத்தொடங்கினால் நம் ஆற்றல் குறைவது மட்டுமல்லாது நமது அச்சத்தை எதிரிக்கு ஆற்றலென சமைத்து அளிக்கவும் செய்வோம். ஆதலால் அஞ்சக்கூடாது.

ஒரு செயல் சரியாக வரலாம், வராமலும் போகலாம். நன்கு ஆராய்ந்து திட்டமிடப்பட்டுத் தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றியாக முடிய வேண்டும் என்று ஏதும் விதியில்லை. தோல்வியும்  வரலாம். மற்ற காரியங்களை (”யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்” நினைவில் கொள்க) வேண்டாம் என்று தள்ளி வைக்கும் துணிவு, தோல்வி வந்தால் துவண்டு விடாமல் மீண்டும்  தொடரும் துணிவு  வேண்டும்.

மேலும், ஒரு காரியத்தை தொடங்கினால், பல இடையூறுகள் வரும். சங்கடங்கள் வரும். எதிர்பார்த்த சிக்கல்கள், எதிர்பாராத ஆபத்துகள் என்று பல வரலாம். இவற்றை எல்லாம் எதிர் கொள்ளும் துணிவு வேண்டும்.  துவண்டு விடக் கூடாது. வியாபாரம் என்றால் நட்டம் வரும். திருமணம் என்றால் மன வேற்றுமை வரும். தேர்தல், தேர்வு என்றால் வெற்றி தோல்வி வரும். துணிந்து இறங்க வேண்டும்.

(துணிவு பற்றி கல்யாண்ஜி(எ)வண்ணதாசனின் ஒரு கவிதை இங்கு
நேற்றை இன்று வாங்குதற்கு 
வழியே இல்லை.
நினைவை  நன
வாக்குதற்கு
வகையே இல்லை.
ஆற்று நறும்
புனல் மலையில்
ஏறி ஆதி
அருவியிலே கலப்பதற்கு
விசையே இல்லை.
காற்றிலுதிர் சருகிலைகள்
கிளையில் மீண்டும்
காம்பினிலே துளிர்ப்பதற்கு
விதியே இல்லை.
தோற்றவர்கள் வெல்வதற்கு மட்டும்
நெஞ்சில்
துணிவிருந்தால் 
புது  எழுச்சி என்றும் உண்டு.
-- கல்யாண்ஜி(எ)வண்ணதாசன்)


துணிந்தப்பின் எண்ணுவம் என்பது இழுக்கு
செயலை செய்ய துவங்கிய பின்பு, செயலைப்பற்றி ஆராய்வது குற்றம். (ஒரு சில செயல்களில் அவ்வப்போது களத்தின் நிலைமையை ஆராய்வது தேவையானதே. அதற்கு ஏற்ப மாற்றங்கள் தேவைப்படும். அது வேறு). இடையூறு வந்தால் செயலை பாதியில் நிறுத்துவதோ அல்லது விட்டொழிவதோ இழுக்காகும். 

மேலும்
என்பதை நினைவில் கொள்க. அதனால் தான் ”துணிந்தப்பின் எண்ணுவம் என்பது இழுக்கு” என்பது இழுக்கு என்கிறார் திருவள்ளுவர்.

உதாரணமாக ஒருவர் ஒரு செயலை துவங்கிப் பாதியில் விட்டால், அவரைப்பற்றி என்ன சொல்லுவார்கள். அவன் நல்லா தான் துவங்குவான், ஆனால் கொஞ்ச நாள் கழித்து விட்டுவிடுவான். அது அவப்பெயர். ஒருவர் பலவற்றை பரிச்சார்த்த முறையில் முயற்சி செய்துப்பார்பது தவறு அல்ல. உதாரணமாக (பல ஆயிர ரூபாய்கள் அல்லது பல நூறு டால்ர்கள் போட்டு) புகைப்படம் கருவிகள் வாங்குவது, அல்லது இசைக்கருவி கற்றுக்கொள்வது, புத்தகம் வாசிப்பது போன்று பலவற்றை முயற்சி செய்யலாம். செய்யவேண்டும். ஆனால் எல்லாவற்றையும் துவங்கி பாதியில் விடுவது தொடர்கதையாக இருக்கக்கூடாது. ஏனெனில் எல்லாவற்றிலும் ராஜாவாக இருக்க முடியாது. நமக்கு இருக்கும் நேரம் அளவானதே. ”குறள் 334 நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்” என்பதை நினைவில் கொள்க. அதுமட்டும் இல்லாமல், ஒரு துறையில் சிறந்துவிளங்க 10000 மணிநேரங்கள் பயிற்சியும் உழைப்பும் அனுபவும் தேவை என்கின்றன ஆய்வுகள் (Read book Outliers by Malcom Gladwell). ஆதலால் பல காரியங்களை துவங்கி பாதியில் விடுவதை தவிர்க்கவும்.

என்பதை நினைவில் கொள்க. ஏனெனில் எல்லோரும் உயர்ந்த லட்சியங்களை கொண்டு இருப்பர். (அது ஒருவித உந்து சக்தி. ஆங்கிலத்தில் Motivation எனலாம்). ஆனால் எல்லோரும் அல்லட்சியங்களை அடைவதில்லை ஏனெனில் பலர் அல்லட்சியங்களை நோக்கி பயனித்தலே சாதனை என்று நினைகின்றனர். அல்லது குறிக்கோளில் 60 அல்லது 70 சதவிதம் அடைந்தாலே பெருவெற்றி என்றி நினைக்கின்றனர் அல்லது 70% வெற்றிக்கே குறி வைக்கின்றனர். அதனால் தான் அவர்கள் உறுதி அற்றவர்கள் எனலாம். வினையில் திண்மை இல்லாதவர்கள். உண்மையான வினைத்திட்பம் உடையவர்கள் எண்ணியவற்றை எண்ணியவாரே (அதாவது 100%) அடையவே எண்ணுவர். அவ்வாறு எண்ணி அதனை அடைவர். அதனால் தான் “எண்ணித் துணிக” என்றுக் கூறுகிறார் திருவள்ளுவர்.

அதேப்போல் ஒரு செயலில் வெற்றிப் பெற்று விட்டால் அடுத்த செயலையோ அல்லது அதேப்போன்ற மற்றுமொரு செயலையோ எண்ணாமல் செய்யக்கூடாது. உதாரணமாக ஒரு வியாபரி ஒரு வியாபரத்தில் வெற்றிப் பெறலாம். ஆனால் அதே வியாபாரி அத்தொழிலை பெரிதாக்கினாலும் சரி, அல்லது வேறு இடத்தில் அதே வியாபாரத்தை துவங்கினாலும் சரி, அல்லது அதேப்போன்ற வேறு ஒரு வியாபாரத்தை துவங்கினாலும் சரி அதனை ஒரு புது தொழிலாக எண்ணி ஆராய்ச்சி செய்து துவங்க வேண்டும். அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர அனுபவத்தை உத்திரவாதமாக எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் ஒரு வியாபரம் என்பது இடம், பொருள், சந்தையின் அளவு, மக்களின் தேவை, குணாதிசியம் ஆகிய பலவற்றால் வேறுபடும்.

அதேப்போல் சில செயல்கள் எதிர்ப்பாராத விதமாக பாதியில் நிறுத்த வேண்டிய கட்டாயம் அல்லது சூழல் எனில், அதனை நிறுத்துவதே சரி. அதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனெனில்
குறள் 476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்
தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்
"
என்பதை நினைவில் கொள்க. சில சமயம் செயலை தேவையில்லாமல் தொடர்ந்தால் ஒன்று உயிர்ப்போகும் அல்லது பெருநஷ்டம் உண்டாகும் அல்லது நேரம் விரையமாகும். ஆனால் எப்பொழுது நிறுத்தவேண்டும் என்பதை முன்கூட்டியே சிந்தித்தால் அது இன்னும் சிறப்பு சேர்க்கும். அதனால் தான் எண்ணித் துணிக கருமம் என்றார் திருவள்ளுவர். 

ஆக செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய (நன்கு ஆராய்ந்த) பிறகே துணிந்து தொடங்க வேண்டும்.  அப்படித் துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்றென்பது குற்றமாகும் தகுந்ததும் அல்ல. 

எண்ணாமல் இராவணன் செய்த செயலை சடாயு கூறுவதாக அமைந்த கம்பராமாயணப் பாடல், சடாயு உயிர்நீத்த படலத்தில் வருகிறது. அப்பாடல்,

பேதாய்! பிழை செய்தனை; பேர் உலகின்
மாதா அனையாளை மனக்கொடு, நீ
யாது ஆக நினைத்தனை? எண்ணம் இலாய்?
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ? (கம்ப.சடாயு.95))

இராவணா, பேதையே நீ பிழை செய்து விட்டாய். இந்த உலகுக்கு எல்லாம் தாய் போன்றவளை, நீ உன் மனத்தில் என்ன என்று நினைத்தாய்? எண்ணம் இல்லாதவனே, உனக்கு இனிமேல் யார் ஆதாரம்? – என்று இராவணைனி எண்ணித் துணியாமையை சடாயு வாயிலாகக் கம்பன் கூறுகிறான்.

இக்குறளுக்குத் தொடர்பில்லாவிட்டாலும், பாரதியின் நவராத்திரிப் பாடலின் தொடக்கப்பாடலுக்கான சொல், எதுகை அமைப்புக்கான ஊக்கி எங்கிருந்து வந்தது என்பது புரியும். அப்பாடல் இது.

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்?
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே

இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணமும் உண்டு. எண்ணாமல் பாரதி எடுத்தாண்ட சொற்கள் அல்ல இவை. கம்பனின் சொல்லாடல் சிறப்பை எண்ணி அதைப் பொருத்தமாக பயனாக்கிக் கொள்ள எண்ணித்துணிந்த கருமமே இது.

ஒப்புமை
1) அடுத்தவும் எண்ணிச் செய்தல் அண்ணலே அமைதி அன்றோ (கம்ப.மாரீசன்.236)
2) ஆலம்பார்த் துண்டவன்போ லாற்றலமைந் துளரெனினும்
சீலம்பார்க் குரியோர்கள் எண்ணாது செய்பவோ (கம்ப.ஊர்தேடு.222)

மேலும்: அஷோக் உரை

கனகர் “இப்போதுகூட நாம் திரும்பிச்சென்றுவிடமுடியும்” என்றார். பிறர் ஒன்றும் சொல்லவில்லை. இருளுக்குள் அவர்களின் விழிவெண்மைகள் மட்டும் தெரிந்தன. “நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பியிருக்கலாமே?” என்று பின்னால் நின்றிருந்த அஸ்வகர் கேட்டார். அவர் முதலில் இருந்தே அஞ்சியவர் போலிருந்தார் என்பதை கனகர் உணர்ந்தார். “இதுவரை வந்துவிட்டோம். இதனாலேயே பாதிப்பங்கு செயலை ஆற்றிவிட்டோம். திரும்பிச்சென்றால் எஞ்சியதை கற்பனையில் ஆற்றியபடி மீதி வாழ்வை வீணாக்குவோம். சென்று செய்து விளைவை எதிர்கொள்வதே நாம் செய்வதற்குகந்தது.”

“அப்போதுதான் அந்த மணத்தை உணர்ந்தேன். அதுவே நான் அடைந்த உச்சநிலை. அதை அறிந்தால்தான் நான் எவரென நான் உணரமுடியும். அதை எண்ணியபின் எனக்கு இனி பின்னடிவைப்பில்லை” என்றான் பீமன். முண்டன் தலைகுனிந்து சற்றுநேரம் நடந்தான். பீமன் அவனை நோக்கியபடியே தொடர்ந்தான். பின் அவன் நின்று நிமிர்ந்து பீமனை நோக்கி “பாண்டவரே, முன்னோக்கி வைக்கும் ஒவ்வொரு காலடியிலும் அதுவரை வந்த தொலைவனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறோம் என உணர்ந்திருக்கிறீர் அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் பீமன்.

தலைமுறை தலைமுறையாக வெற்றியென்பதற்கு அப்பால் ஏதுமறியாத மாவீரர்கள் அவர்கள். வெற்றி மேலும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னம்பிக்கை ஐயமில்லாது செயல்படச் செய்கிறது. ஐயமின்மை முடிவெடுப்பதில் விரைவை அளிக்கிறது. விரைந்து முடிவெடுப்பவர்கள் வெல்கிறார்கள்.

பரிமேலழகர் உரை
கருமம் எண்ணித் துணிக - செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக, துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவோம் என்று ஒழிதல் குற்றம் ஆதலான்.
(துணிவுபற்றி நிகழ்தலின் துணிவு எனப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உபாயம் என்பது அவாய்நிலையான் வந்தது. அது , கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் என நால்வகைப்படும். இவற்றை வடநூலார் தான, சாம, பேத , தண்டம் என்ப. அவற்றுள் முன்னைய இரண்டும் ஐவகைய. ஏனைய மூவகைய, அவ்வகைகளெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். இவ்வுபாயமெல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால்விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின் ஒழிதல்ஆகாமையானும் அரசன் துயருறுதலின், அவ்வெண்ணாமையை 'இழுக்கு'என்றார். செய்வனவற்றையும் உபாயம் அறிந்தே தொடங்குகஎன்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒருவினை செய்யத் துணிவதன் முன்னே அதனால் வரும் பயனை எண்ணிப் பின்பு செய்யத் துணிக: துணிந்தபின் எண்ணுவோமென்றல் தப்பாமாதலான்.

மு.வரதராசனார் உரை
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

Management_Execution
Leadership_Courage
Leadership_DecisionMaking
Leadership_Perseverance

Thirukkural - Management - Decision Making
Decide judiciously. When it comes to tasks, before doing an activity, do a lot of thinking of the consequences  of that activity. That is called to have forethought.  that is an example for proactive approach. 

Deciding to carry out a task without proper forethought and thinking midway through while executing the task will be an insult to a decision maker, clarifies Kural 467.

Think and act; to act and then to think
Is folly.


English Meaning - As I taught a kid - Rajesh
Think, research, plan and courageously start. Courageously Start a work without doubt / self-doubts. Once you start, do not look back or self doubt or stop. If you look back, self-doubt or stop, then it is a shame. You should deliver results without quitting. [ Fear leads to inaction. Hence, fear is dangerous. Hence, we should courageously start.. Also inaction leads to stagnation, doubts etc. our confidence also goes down. no growth)

Questions that I ask to the kid
How should you start a work?
In addition to research and planning, how (or what should you have) to start a work?
Can you stop a work in between?
In what cases you can stop a work? (refer to நுனிகொம்பர் kural)

No comments:

Post a Comment