Skip to main content

Posts

New Project - English Meanings and questions

I have been updated individual Thirukkural posts with English meanings. It is not a planned project. For last couple of years, I have been discussing Thirukkurals (Aram and Porul) with a high school student for whom I give the meanings in English. I had documented some 240 Thirukkural meanings in English. I am slowly bringing them to this blog also. While I revise the Thirukkurals with the high school student I ask questions and follow up questions in order to solidify the understanding of the Thirukkural as much as possible. Hence, those questions are also documented. All the Thirukkurals would have English meanings by end of 2025.  Hopefully this section of English meanings and questions to ask would be helpful to students for deepening their understanding of a Thirukkural.  If you have any thoughts/suggestions that you would like to share with me, please do comment in the respective post.  

1 Million பார்வைகள்

இந்த வலைத்தளம் 1 மில்லியன் பார்வைகளை 6-Oct-2022 அன்று தொட்டது. Stats அப்படித்தான் சொல்கிறது. ஒரு விள்ளல் சந்தோஷம்.  நவம்பர் 2022 இல் 70580 பார்வைகள் பெற்று ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சற்றும் எதிர்பாராதது. ஒவ்வொரு மாதமும் 45000-53000 பார்வைகள் தான் வரும். பார்வையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் google தேடலில் மேலே வந்துக்கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன். பார்வையாளர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். அன்புடன் ராஜேஷ்

செயல்

 செயல் குறள் 33 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் குறள் 333 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் குறள் 461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் குறள் 471 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் குறள் 486 ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து குறள் 516 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல் குறள் 518 வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல் குறள் 637 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் குறள் 668 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல் குறள் 673 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல் குறள் 675 பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் குறள் 676 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் குறள் 948 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் குறள் 949 உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் குறள் 316 இன்னா எ...

மூதுரை - 02 - நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

மூதுரை - 02 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். பொருள் நல்லார் -  நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர். ஒருவர்க்குச் -  ஒருவர் செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். உபகாரம் - ஈகை; உதவி காணிக்கை மகிழ்ச்சி கல் -  வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி. மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. எழுத்துப் - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம். போல் - ஓர்உவமவுருபு...

மூதுரை - 01 - நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்

மூதுரை - 01  நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கோல் என வேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால். பொருள் நன்றி -  நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம். ஒருவர்க்குச் - ஒருவர் செய்தக்கால் - செய்தால் - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் அந்நன்றி - அந்த நன்றி, உதவி என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். தருங்கோல் - தருதலால் - தருதல் -   trutl   v. noun. Giving, &c. See தா, v., கொடை என -  என்று  வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டா - விரும்பாத  நின்று - எப்பொழுதும்; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்படவரும்ஒர்இடைச்சொல். தளரா ; niṉṟu   see under நில்; 2. an expletive, அசைச்சொல். வளர்- வளர்தல் -பெரிதாதல்; மிகுதல்; நீளுதல்; களித்தல்; உறங்குதல்; தங்குதல். தெங்கு - தென்னைமரம்; தித்திப்பு; போர்ச்சேவலின்தன்மைகுறிக்கும்குழூஉக்குறியுள்ஒன்று; ஏழுதீவுகளுள்ஒன்று. தாள்  -...

மூதுரை

சற்று மிகப்பெரிய இடைவெளிக்குப்பின் அடுத்தப் பயணத்தை துவங்குகிறேன்.  ஔவையாரின்’ மூதுரை. கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. 9-June-2021

திருக்குறள் (முதல் நிலை கற்றல்) - நிறைவு

நான் எடுத்த ”நாளும் ஒரு திருக்குறள்” [ http://DailyProjectThirukkural.blogspot.com/ ] என்னும் செயலை/குறிக்கோளை நேற்று 14 அக்டோபர் 2020 இரவு முடித்தேன். இச்செயலை 11 டிசம்பர் 2013 அன்று துவங்கினேன். சரியாகச் சொன்னால் 2500 நாட்கள்.  இதில் சுமார் பாதி நாட்கள் தான் 1330 குறள்களுக்கு எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நடுவில் பல நாட்கள் சோம்பேறித் தனம் என்று நினைக்கையில் வெட்கமாகவே உள்ளது. ஏனெனில் “ குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் ”  என்றென்பதே வள்ளுவன் வாக்கு. அதாவது தான் படித்தும் அதனை பிறர்க்கு எடுத்துரைத்த போதிலும் தான் அதை பின்பற்றவில்லை என்றால் அவனைப்போன்று பேதை வேறு யாரும் இல்லை. நான் சோம்பலை கடந்து இச்செயலை குறைந்தது 2000 நாட்களிக்குள்ளாவது முடித்து இருக்க வேண்டும் (2000?ஏனெனில் நடுவில் இரு ஆண்டுகள் MBA படிக்கச் சென்றுவிட்டேன்). ஆனால், கடந்த 2.5 வருடங்களாக நாளும் உரை எழுதி முடித்துள்ளேன் என்பது ஆறுதல். 1330 குறள்களை கற்றுள்ளேன். இதில் கண்டிப்பாக சில குறள்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உதாரணமாக நான் எழுதிய முதல் குறள் “...