இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்

 

குறள் 900
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
இறந்து -  இறந்துபடுகை; சாவு
இறந்து - இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்பொருட்பால், குடியியல், குடிமை
அமைந்த - அமைந்து - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

சார்பு - இடம்; பக்கம்; அடைக்கலம்; பற்று; பிறப்பு; பௌத்தர்கூறும்பன்னிரண்டுநிதானங்கள்; ஒருதலைநிற்றல்; அண்மை; கூட்டுறவு; பொருத்தம்; சார்ப்புக்கூரை; புகலிடம்; கிட்டுகை.

உடையர்  - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்

உய்யார் - நீங்க முடியாது ; தப்பிக்க முடியாது ; பிழைக்க முடியாது 

சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

சிறத்தல் - மேன்மையாதல்; மேற்படுதல்; கனத்தல்; இன்றியமையாதிருத்தல்; மங்கலமாதல்; அன்பாதல்; மகிழ்தல்; அழகாதல்.

அமைந்த அமைந்து - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

சீரார் - சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு.

செறின் -  செறு¹-தல் - சினத்தல். அரசர்செறின் வவ்வார்(நாலடி, 134), வெறுத்தல். செற்றாரெனக் கைவிடலுண்டோ (குறள், 1245).

முழுப்பொருள்
ஒருவருக்கு மிகுதியாக அமைந்த புகலிடங்களும் துணைகளும் அடைக்கலங்களும் இருந்தாலும் அவர் பல நற்குணங்களை கொண்ட அறிவுத்திறனை கொண்ட சான்றாண்மையை கொண்ட சான்றோர் பெரியோர் சினக்கும் வகையில் நடந்துக்கொண்டால் அவரால் அதன் தீய விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது. கண்டிப்பாய் அழிவர். துன்பம் வந்து சேரும். 

சார்பு என்பதை, அரண், படை, பொருள், நட்பு என்று நான்கு வகைப்பட்டதாகக் கூறுவார் பரிமேலழகர். குணம், கல்வி, கேள்வி, அறிவுடைமை என்று நான்குவகைப்பட்டதாகக் கூறுவார் காளிங்கர்.

நாலடியார் பாடலொன்று இக்குறளின் முற்றுக் கருத்தையும் கூறுவதாக அமைந்தது. படம் விரித்தலையுடைய நாகப்பாம்பு நிலத்தின் வெடிப்பினுள்ளே உள்ளதானாலும் இடியின் கொடிய ஒலிச்சீற்றமானது தொலைவில் இருந்தும் அதற்கு அஞ்சும், அதுபோல, அருமைப்பாடுடைய பாதுகாப்பிடத்தைச் சேர்ந்திருந்தாலும், மேன்மையுடைய பெரியோர் சீறுவாராயின், ஏனைச் சிறியோர் அதற்குத் தப்பமாட்டார். அப்பாடலானது:

விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.(நாலடி.164)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சிறந்து அமைந்த சீரார் செறின் - கழிய மிக்க தவத்தினை உடையார் வெகுள்வராயின்; இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார் - அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையார் ஆயினும் அதுபற்றி உய்யமாட்டார். (சார்பு - அரண், படை, பொருள், நட்பு என இவை. அவை எல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும் ஆகலின், 'உய்யார்' என்றார். சீருடையது சீர் எனப்பட்டது. இதனால் அக்குற்றமுடையார் சார்பு பற்றியும் உய்யார் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மிகவும் அமைந்த துணையுடைய ராயினும் கெடுவர்: மிகவும் அமைந்த சீர்மையுடையார் செறுவாராயின். இது துணையுடையாராயினும் உயிர்க்கேடு வருமென்றது.

மு.வரதராசனார் உரை
மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை
மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.

No comments:

Post a Comment