குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

 

குறள் 898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள்.

அன்னார் - aṉṉār   n. Asbestos; கல்நார்.(வை. மூ.)
அன்னார் - அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such person

குன்ற - குன்றுதல் -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.

மதித்தல் - அளவிடுதல்; பொருட்படுத்துதல்; கருதுதல்; தியானித்தல்; துணிதல்; கடைதல்; கொழுத்தல்; மதங்கொள்ளுதல்; சாதல்; உப்புதல்.

மதிப்பின் - மதிப்பு -அளவிடுகை; சிறப்பிக்கை; கருத்து; கடைகை; கொழுத்திருக்கை.

குடியொடு - குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

நின்று - எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் படவரும் ஒர் இடைச்சொல்.

அன்னார் - aṉṉār   n. Asbestos; கல்நார்.(வை. மூ.)
அன்னார் - அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such person

மாய்வர் - மாய்தல் - மறைதல்; அழிதல்; சாதல்; ஒளிமழுங்குதல்; கவலைமிகுதியால்வருந்துதல; அறப்பாடுபடுதல்; மறத்தல்.

நிலத்து நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை. 

முழுப்பொருள்
மலையளவு மாட்சிமை கொண்ட பெரியோர்களை சான்றோர்களை மதித்துப்போற்றுவது ஒருவரின் கடமையாகும். அதனை செய்யாது பெரியோரை அவமதித்தாலோ அல்லது அவர்களுக்கு கேடு செய்ய நினைத்தாலோ அல்லது அவர்களின் நற்பெயரை கெடுக்க முற்பட்டாலோ அத்தகையவர் இவ்வுலகத்தில் வாழ்கிறவர் போல் தோன்றினாலும் தன் குடியோடு அழிந்து விடுவார்.

மலையளவு என்ற உவமையினால் அவர்களின் பொறுக்கும் தன்மையைச் சுட்டி, வெயிலால் காய்ந்தாலும், மழையால் நனைந்தாலும், சலியாது, மாட்சியிலே உயர்ந்து நிற்பதைக் குறிக்கிறார் வள்ளுவர்

“கெடுவான் கேடு நினைப்பான்” என்ற நிலைமொழியின் கருத்தையே கூறுகிறது இக்குறள்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
'மாதவக் குன்றினை யெதிர்ந்தனன்” (கம்ப.திருவவ.49)

பரிமேலழகர் உரை
குன்று அன்னார் குன்ற மதிப்பின் - குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்; நிலத்து நின்று அன்னார் குடியொடு மாய்வர் - அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியொடும் மாய்வர். (வெயில், மழை முதலிய பொறுத்தலும் சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், 'குன்றன்னார்' என்றார். 'மல்லல் மலையனைய மாதவர்'(சீவக.முத்தி-191) என்றார் பிறரும். நிலை பெற்றாற் போறலாவது, இறப்பப் பெரியராகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லை என்று கருதப்படுதல்.).

மணக்குடவர் உரை
மலைபோலப் பெரியாரைக் குறைய மதிப்பாராயின், உலகத்தின் கண்ணே நின்றாற்போலத் தோன்றுகின்றவர் குடியோடே கூடமாய்வர். குன்ற மதித்தல்- அவமதித்தல்.

மு.வரதராசனார் உரை
மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

சாலமன் பாப்பையா உரை
மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

No comments:

Post a Comment