உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்

 

குறள் 1200
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி]

பொருள்
உறா - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்

அர் - ar   part. 1. Pers. pl. suff.; பலர்பால்விகுதி . அரசர் வந்தனர். 2. Honorific pl. suff.;உயர்வுப்பன்மை விகுதி சம்பந்தர் பாடினர். 3. Anexpletive affixed to some words; பகுதிப்பொருள்விகுதி முன்னர் (குறள், 435).  

உறு - மிகுதி; மிக்க; பகை; போர்.

உறாஅர்க்குஉறாஅர்  - உற்றார் அல்லாதவர்
உறு - மிகுதி; மிக்க; பகை; போர்.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு

உரைப்பாய் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

கடலைச் - கடல் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி.

செறுதல் - அடக்குதல்; தடுத்தல்; சினத்தல்; வெறுத்தல்; வருத்துதல்; வெல்லுதல்; அழித்தல்; வேறுபடுதல்.

கடலைச் செறாஅஅய்– (அதனினும்) கடலை தூரெடுத்து நிரப்பி

வாழிய வாழி; முன்னிலையசைச்சொல், வாழ்க என்னும் பொருளில் வரும் வியங்கோள் சொல்; ஓர்அசைச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
தலைவனின் பிரிவால் வாடும் தலைவி தன் நெஞ்சத்திடம் கூறுகிறாள் “ஏ நெஞ்சே!! நான் இங்கு பிரிவின் காதல்நோயால் / பசலைநோயால் துன்பப்பட்டு வாழ்கிறேன் என்று என்னை விரும்பாத தலைவனிடம் உறைக்க தூது அனுப்புகிறாயே! அட முட்டாளே அது மிக கடுமையானது. அதைவிட, கடலை தூர்வாரி நிரப்பி வாழ்வது மிக எளிமையானது. அதை நீ செய்து வாழலாம் நெஞ்சே. 

தலைவனின் நெஞ்சம் மிக கடுமையானது. அதனால் அவன் திரும்பிவராமல் இருக்கிறான். மேலும், கடலை தூர்வாரி நிரப்ப எவ்வளவு காலம் ஆகும்? கணக்கற்ற அளவில் நேரம் ஆகும். அவ்வாறு தலைவனை பிரிந்து தனித்து வாழ்வது கணக்கற்ற காலத்தில் பெறக்கூடிய துன்பத்தை தருகிறது என்று தலைவி தனது துன்பத்தை உருவகிக்கிறாள். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சோடு சொல்லியது.) உறார்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே; கடலைச் செறாய் - நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக, அஃது எளிது. (உரைக்கலுற்றது அளவிறந்த நோயாகலானும், கேட்பார் உறவிலராகலானும், அது முடிவதொன்று அன்று; முடிந்தாலும் பயன் இல்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான், 'வாழிய' என்றாள்.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! நம்மோடு அன்புற்றார்க்குத் தூது விட்டாலும் பயனில்லை யென்று உன்னோடு உறாதார்க்கு நீயுற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்: நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின் அஃது அதனினும் நன்று. இது தூதுவிடக் கருதிய நெஞ்சுக்குத் தூதுவிட்டாலும் பயனில்லை யென்று தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.

No comments:

Post a Comment