நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு

 

குறள் 1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு
[காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி]

பொருள்
நசை - ஆசை; அன்பு; நம்பிக்கை; எள்ளல்; குற்றம்; ஈரம்.
இய-த்தல் - iya-   12 v. tr. இக-. To passbeyond, excel, transcend; கடத்தல் உணர்ந்துருவியந்தவிந் நிலைமை (திவ். திருவாய். 1, 3, 6.)  
நசைஇயார் – காதலியால் விரும்பபட்டவர் 

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்..

நல்கார் - விரும்பாதவர் 

எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும்.

மாட்டு - - அகன்றுகிடப்பினும் அணுகியநிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற்கொண்டு கூட்டியசொல் முடிவு கொள்ளும்முறை; அடி; சொல்.

இசை - இசைவு; பொன் ஊதியம் ஓசை சொல் புகழ் இசைப்பாட்டு நரம்பிற்பிறக்கும்ஓசை; இனிமை ஏந்திசை தூங்கிசை, ஒழுகிசை சீர் சுரம் வண்மை திசை

இசையும் இசைவு - பொருந்துகை; தகுதி உடன்பாடு ஏற்றது ஓட்டம்

அவர்மாட்டு இசையும் – அவர் வாய்மொழி என்பது ஏதாயினும்

இனிய இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக 

செவிக்கு - காது; கேட்கை/கேள்வி; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை

முழுப்பொருள்
தன்னை பிரிந்து சென்றதால் தன்னை விரும்பாதவர் தலைவன் என்று ஆயிற்று தலைவிக்கு. தான் விரும்பிய தன் காதலர் தன்னை விரும்பாத போதிலும் கூட தன் காதலரிடம் இருந்து வரும் வாய்மொழி சொற்கள் கூட தனது செவிக்கு இனிமையானது என்று தலைவி கூறுகிறாள். ஏனெனில் பிரிந்து சென்ற தலைவன் தன்னைப்பற்றி சிந்தித்து இருக்கிறாரே என்ற ஆறுதல் தலைவிக்கு. மேலும் அவள் பிரிவால் தனித்து வாழ்வதால் அவள் மிகுந்த துன்பத்தில் வாழ்கிறாள். தலைவனிடம் இருந்து வரும் இத்தகைய சொற்கள் அவளுக்கு இனிமையானது மட்டும் அல்ல மருந்தானதும் கூட. அவளை உயிருடன் வாழ வைத்திருக்கும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நசைஇயார் நல்கார் எனினும் - என்னால் நச்சப்பட்ட காதலர் என்மாட்டு அன்பிலரேயாயினும்; அவர்மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவர் திறத்து யாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம். (இழிவு சிறப்பு உம்மை, 'அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்' என்பதுபட நின்றது. 'அதுவும் பெற்றிலேன்'என்பதாம்.).

மணக்குடவர் உரை
எம்மால் காதலிக்கப்பட்டார் எமக்கு அருளாராயினும் அவர் பக்கத்தனவாகிய சொற்களும் எங்கள் செவிக்கு இனியவாம்.

மு.வரதராசனார் உரை
யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.

No comments:

Post a Comment