பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்

 

குறள் 1190
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்.

எனப் - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு

பேர் - பெயர்; ஆள்; உயிரி; புகழ்; பெருமை; பொலிவு.

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

நன்றே நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

நயப்பித்தார் - நயப்பி-த்தல் - nayappi-   11 v. tr. Caus. ofநய¹-. 1. To induce to love or desire; விரும்பும்படி செய்தல் தலைமகனை நயப்பித்துக் கொள்கையில்(ஐங்குறு. 88, உரை). 2. To persuade, winanother's consent, secure compliance orapproval; சம்மதப்படுத்துதல். (W.) 3. To rendercheap, cheapen; மலிவாக்குதல். (W.) 4. Toimprove, benefit; பயன்படுத்துதல். (W.)  

நல்கு - nalku   III. v. t. desire, long for, விரும்பு; 2. bestow, grant, ஈ; 3. favour, கடாட்சி.
ஆமை - ஒரு நோய்

நல்காமை - (என் மீது) ஆசை நோய்

தூற்றல் - பழிச்சொல்; சிறுமழை.

தூற்றுதல் - சிதறுதல்; தூசுபோகத்தானியங்களைத்தூவுதல்; புழுதிமுதலியவற்றைஇறைத்தல்; பரப்புதல்; அறிவித்தல்; பழிகூறுதல்; வீண்செலவுசெய்தல்.

தூற்றார் - பழிச்சொல்லாமல், பரப்பாமல்

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்

முழுப்பொருள்
என்னை அவர்மேல் விரும்பச்செய்தவர், என்னை விரும்பியவர் எனக்கு இன்பம் தந்தவர் என்னை பிரிந்து சென்றுவிட்டார். அதனால் நான் துன்பநோயால் வாடுகிறேன். பசலைநோய் என்னை வாட்டுகிறது. ஆனால் என்மேல் அன்பு நல்காதவரை தூற்றுவார்கள் எனில் அதைவிட இப்பசலைநோயை நானே பெற்றுக்கொண்டேன் என்றப் பெயரை பெறுதல் நன்றே என்று தலைவி கூறுகிறாள். ஏன் அது நன்று? ஏனெனில் அப்பிரிவுக்கு சம்மதித்தவள் அவள் தானே. மேலும் ஆயிரம் இருந்தாலும் தன் தலைவனை பிறர் ஏசுவதை தலைவி விரும்பவில்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்; பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே - பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று. ('நட்டார்' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள், அவரை அருளிலர் என்னாது 'இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று: நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின். இது நின்மேனி பசந்ததென்ற தோழிக்கு அவ்வளவாய்க் குற்றமில்லையென்று தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.

சாலமன் பாப்பையா உரை
என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.

No comments:

Post a Comment