பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

 

குறள் 1189
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
பசக்கு - pacakku   n. Nāñ. 1. Substance;பொருள். 2. Ability; திறன்
பசக்கெனல் - pacakkeṉal   n. Onom. expr.signifying suddenness; திடீரெனற்குறிப்பு.

பசப்புதல் - பசப்பு இன்முகங்காட்டிஏய்த்தல்; அலப்புதல்.
பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

பசக்கமன் - பசலைப் பூக்கட்டும்

பட்டாங்கு - உண்மை; உள்ளநிலைமை; சாத்திரம்; மெய்போல்பேசும்கேலிப்பேச்சுமுதலியன; சித்திரவேலையமைந்தசேலை.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

மேனி - நிறம்; வடிவம்; உடல்; அழகு; நன்னிலைமை; நிலத்தின்சராசரிவிளைச்சல்; காண்க:குப்பைமேனி.

நயப்பித்தார் - நயப்பி-த்தல் - nayappi-   11 v. tr. Caus. ofநய¹-. 1. To induce to love or desire; விரும்பும்படி செய்தல் தலைமகனை நயப்பித்துக் கொள்கையில்(ஐங்குறு. 88, உரை). 2. To persuade, winanother's consent, secure compliance orapproval; சம்மதப்படுத்துதல். (W.) 3. To rendercheap, cheapen; மலிவாக்குதல். (W.) 4. Toimprove, benefit; பயன்படுத்துதல். (W.)  

நல் - நல்ல; வறுமை.
நிலையர் - நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.

ஆவர் - யாவர்

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்

முழுப்பொருள்

இக்குறளை இருவிதமாக பொருள்கொள்ளலாம்
1. தலைவியின் மேனியில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நிறமாற்றத்திற்கு காரணம் தலைவனின் பிரிவு. ஏனெனில் அவரை விரும்பச்செய்தவர் அவரே. ”அப்பிரிவால் நான் பசலைநோயால் அவதிப்படுகிறேன். நான் இப்படி துன்பப்பட்டாலும், இப்பிரிவால் அவர் நல்ல நிலைமையில் இருக்கிறார் என்றால் எனக்கு அதுப்போதும். இப்பசலை நோயை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தலைவி கூறுகிறாள்.

2.  தலைவியின் மேனியில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நிறமாற்றத்திற்கு காரணம் தலைவனின் பிரிவு. ஏனெனில் அவரை விரும்பச்செய்தவர் அவரே. ”அப்பிரிவால் நான் பசலைநோயால் அவதிப்படுகிறேன். ஆனால் இப்பிரிவிற்கு காரணமான அவரை இவ்வுலகமோ நல்லவர் என்றுப் போற்றுகிறது. உண்மையில் என்னிடம் காதலை உண்டுப்பன்னியது அவர் தான். அதனை இவ்வுலகம் மறந்துவிட்டதா அல்லது அறியவில்லையா? அவரை நல்லவர் என்று நினைத்து ஏமாந்து இப்பிரிவை சந்தித்ததற்கு தண்டனையாக நான் இப்பசலைநோயை ஏற்கிறேன்” என்று தலைவி கூறுகிறாள்.

இவ்விரு பொருள்களில், முதல் பொருளே பொருத்தமாக இருக்கிறது. ஏனெனில், ஒருவர் மற்ற ஒருவரிடம் ஏமாந்ததாக என்னினால் அதன்பின் அவரிடம் காதல் இருக்காது. பின்பு எப்படி பசலைநோய் வரும்? பொதுவாக பிரிவு வரும் என்பதை பெண்கள் அறிவர். ஆனாலும் காலம் அவர்களுக்கு கைகொடுக்கும் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வர். அது தலைவன் ஏமாற்றுவதாக ஆகாது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க - என் மேனி பட்டதுபடப் பசப்பதாக. (நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்'? என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.).

மணக்குடவர் உரை
என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக: நம்மைக் காதலித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின். இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.

மு.வரதராசனார் உரை
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.

சாலமன் பாப்பையா உரை
இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!.

No comments:

Post a Comment