குறள் 1179
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]
பொருள்
வாராக் - வாரா - வாராத - வராத
கால் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.
துஞ்சுதல் - தூங்குதல்; துயிலுதல்; சோம்புதல்; தொழிலின்றிஇருத்தல்; சோர்தல்; இறத்தல்; வலியழிதல்; குறைதல்; தொங்குதல்; தங்குதல்; நிலைபெறுதல்
துஞ்சாவரின் - தூங்கா என்கண்கள்
துஞ்சுதல் - தூங்குதல்; துயிலுதல்; சோம்புதல்; தொழிலின்றிஇருத்தல்; சோர்தல்; இறத்தல்; வலியழிதல்; குறைதல்; தொங்குதல்; தங்குதல்; நிலைபெறுதல்
துஞ்சா - தூங்கா என்கண்கள்
ஆயிடை - அவ்விடம்; அக்காலத்து.
ஆர் - நிறைவு; பூமி கூர்மை அழகு மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி ஆரக்கால் தேரின்அகத்தில்செறிகதிர்; அச்சுமரம் செவ்வாய் சரக்கொன்றை அண்மை ஏவல் பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப்பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.
அஞர் - துன்பம்; நோய் சோம்பல் வழுக்குநிலம் அறிவிலார்.
உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.
உற்றன - - adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்றமனிதன், a trustworthy person. உற்ற விசேஷம், உற்றசெய்தி, true report; உற்ற, rel. part. Uncommonly de voted, trusty.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
உடையார்
முழுப்பொருள்
கண்கள் படும் துன்பநோயைப்பற்றி கூறிகிறாள் தலைவி. பிரிந்து சென்ற தலைவன் வராத பொழுது அவர் எப்பொழுது வருவார் என்று வரும் வழிபார்த்து தூங்காமல் இருக்கும் என் கண்கள். அவர் வந்த பின்போ எப்பொழுது அவர் பிரிந்து சென்று விடுவாரோ என்று அஞ்சி தூங்காமல் இருக்கும் என் கண்கள். அதுமட்டுமின்றி தலைவன் என்னுடன் இருக்கும் பொழுது கலவி செய்வதாலும் தூங்காமல் இருக்கும் என் கண்கள். இப்படி தலைவன் உடன் இருந்தாலும் அல்லது பிரிந்து சென்றிந்தாலும் என் கண்கள் காதல் நோயை பெற்று துன்பப்படுகிறதே என்று புலம்புகிறாள் தலைவி.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
('நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) வாராக்கால் துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக்கண் ஆரஞர் உற்றன- ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய ('ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்)
மணக்குடவர் உரை
அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா: அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள். இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் இன்றேயல்ல எஞ்ஞான்றும் உறக்கமில்லை யென்றது.
மு.வரதராசனார் உரை
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.
சாலமன் பாப்பையா உரை
அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.
Comments
Post a Comment