ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

 

குறள் 1059
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
ஈவு - கொடை; நன்கொடைப்பொருள்; பங்கிடுகை; பிரித்துக்கண்டபேறு; ஒழிகை.

ஈவார் - கொடை அளிப்பவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

உண்டாம்  - உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்; uṇṭu   உள்-. [K. uṇṭu, M. Tu.uṇḍu.] v. intr. Finite verb denoting existence,used in common to all genders and personsand both numbers;

தோற்றம் - காட்சி; விளக்கம்; சாதி; படைப்பு; சாயை; புகழ்; பார்வை; உயர்ச்சி; உற்பத்தி; பிறப்பு; உருவம்; தன்மை; வலிமை; சொல்மாலை; உறுப்பு; உத்தேசம்; நாடகப்பிரதேசம்; எண்ணம்; மாயை; இருவகைத்திணை; காண்க:உயிர்த்தோற்றம்

இரந்துஇரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

கோள் - கோள் கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி.

மேவார் - மேவுதல் - அடைதல்; விரும்புதல்; நேசித்தல்; உண்ணுதல்; ஓதுதல்; நிரவிச்சமனாக்குதல்; மேலிட்டுக்கொள்ளுதல்; வேய்தல்; அமர்தல்; பொருந்துதல்.

இலா - இல்லை 

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

இலாஅக் கடை – இல்லாது போயின்

முழுப்பொருள்
ஈவாரிடம் சென்று யாசிப்பவர்கள் இல்லாமல் போனால் கொடுத்து உதவும் ஈவார்க்கு புகழ் இருக்குமா? யாசிப்பவர்கள் இல்லையென்றால் பின்பு ஈவார்க்கு புகழும் புண்ணியமும் அடைய வேறு வழி ஏது? 

இரந்து கொள்வார் சென்று இரக்கவில்லையாயின் ஈவார் என்பார்க்கு புகழுக்கு யாதொரு வழியுமில்லை.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பரப்புநீர் வையத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்
இரப்பாரில் வள்ளல்களும் இல்லை - இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பனும்
தம்மைத் தலைப்படுத்த லால்” (அறநெறி.219)

பரிமேலழகர் உரை
இரந்துகோள் மேவார் இலாஅக் கடை - அவர்பாற்சென்று ஒன்றனை இரந்துகோடலை விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என் உண்டாம் - கொடுப்பார் மாட்டு என்ன புகழுண்டாம்? யாதுமில்லை. (தோற்றம் - ஆகுபெயர். மேவுவார் என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை வெளிப்படாமையின் அதனால் புகழெய்தார் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இரந்து கோடலைப் பொருந்துவார் இல்லாதவிடத்து ஈயக கருதியிருப்பார்மாட்டுப் புகழ் யாதான் உண்டாம். இஃது இரப்பாரில்லாராயின் புகழுடையார் இலராவார். ஆதலால் இரவு பழிக்கப்படா தென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?.

No comments:

Post a Comment