நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

 

குறள் 770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்
[பொருட்பால், படையில், படைமாட்சி]

பொருள்
நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.

மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

சால - மிகவும்

உடைத்து - உடைதல், இருக்கும், உண்டு

எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும்

தானை - படை; ஆயுதப்பொது; ஆடை; மேடைத்திரைச்சீலை; முசுண்டிஎன்னும்ஆயுதம்.

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு

இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள் 
மன உறுதி தன்மை கொண்ட வலிமைக்கொண்ட வீரம் கொண்ட வீரர்கள் ஒரு படையில் மிகுதியாக இருந்தாலும் அப்படையை தலைமை தாங்கி போருக்கு செல்லக்கூடிய வலிமையான தலைவன் இல்லையெனில் அப்படை வெற்றிப் பெற எவ்வித வழியும் இல்லை.

முந்தைய ஒரு குறளில், ”குறள் 768 அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும்", ஒரு படைக்கு வலிமையும் ஆற்றலும் இல்லை என்றாலும் படை என இருந்தாலே அது பயன் தரும் பெருமை தரும் என்றார் திருவள்ளுவர். இக்குறளில் ஒரு தலைவன் சரியாக இல்லை என்றால் படை இருந்தும் பயன் இல்லை என்று கூறியுள்ளார். இவ்விரு குறளையும் ஒன்றினைத்து ஒரு உதாரணத்தை கூறலாம். 

பாகுபலி (முதலாம் பாகம்) திரைபடத்தில், பாகுபலியின் படைப்பிரிவுக்கு போதுமான ஆயுதங்கள் இருக்காது. ஆனால் பாகுபலி தனது தலைமையால் தனது திறத்தால் ஆயுதங்களை உருவாக்கி வியூகங்களை உருவாக்கி வெற்றிப் பெறுவதுப்போல் திரைப்படம் முடியும். அப்பொழுது ஒரு தலைமை எவ்வளவு செய்ய முடியும் என்பதை நாம் உணரலாம். 








மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
நிலை மக்கள் சால உடைத்து எனினும் - போரின்கண் நிலையுடைய வீரரை மிக உடைத்தே யாயினும்; தலைமக்கள் இல்வழித் தானை இல் - தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாதவழித் தானை நில்லாது. (படைத்தலைவர் நிலையுடையரன்றிப் போவாராயின், காண்போர் இல்லெனப் பொராது தானும் போம் என்பார், 'தலைமக்கள் இல் வழி இல்' என்றார். இவை மூன்று பாட்டானும் முறையே படைத்தகையின்மையானும் அரசன் கொடைத் தாழ்வுகளானும், தலைவர் இன்மையானும் தாழ்வு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
படையானது நிலையுடைய வீரரைப் பெரிது உடைத்தாயினும் தனக்குத் தலைவரை இல்லாத விடத்துத் தனக்கு வெற்றியில்லையாம். இது படையமைத்தாலும் படைத்தலைவரையும் அமைக்க வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை
சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.

No comments:

Post a Comment