குறள் 748
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
[பொருட்பால், அரணியல், அரண்]
முற்று - முற்றுதல் - முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல்.
ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்
முற்றுதல் - முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல்.
முற்றியார் - முற்றுகைசெய்தவர், முற்று-. [T.muttadīnstuvāru.] Besiegers; முற்றுமை செய்தவர். முற்றியார் முற்றுவிட (பு. வெ. 6, 25).
முற்றுகை - கோட்டைமுதலியவற்றைவளைக்கை; சூழுகை; நிறைவேற்றுகை; நெருக்கடி
முற்றியவரையும் - - முற்றுகையிட்டு வெல்ல நினைக்கும் பகைவரையும்
பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை
ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்
பற்றியெரி-தல் - paṟṟi-y-eri- v. intr. id.+. 1. To catch fire; தீமூண்டெரிதல். 2. To getenraged; to become angry; சினம் மூளுதல்.
பற்றியார் - அரணுக்குள் வசிக்கும் வீரர்கள்
வெல்வது - வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.
அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்
முழுப்பொருள்
ஒரு நாட்டை பகைவர்களிடம் இருந்து முதலில் காப்பாற்றுவது அந்நாட்டின் அரண் ஆகும். ஏனெனில் அதுவே நாட்டின் எல்லைகளில் இருக்கிறது. அரண் வலிமையாக இருப்பது இன்றியமையாததாகும். ஆனால் புறச்சுவரோ நீர் நிலைகள் மட்டும் அரணாகிவிடுமா? ஆகாது. ஏனெனில் அவற்றையும் பகைவர்களால் தகர்த்தெரிந்து வெல்ல முடியும்.
ஆதலால், நாட்டை காப்பாற்ற வேண்டும், அரசனை காப்பாற்ற வேண்டும், மக்களை காப்பற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் (மன உறுதியுடன்) அரணில் இருந்து பாதுக்காக்க கூடியுள்ள வீரர்கள், படைமிகுதியால் அரனை சூழ்ந்து கொண்ட பகைவரையும், இடத்தை/அரணை விட்டுவிடாமல் காக்கும் கடமையாற்றி அங்கு நின்று பகைவரை வெல்வதே அரண். அவ்வீரர்களும் அந்நாட்டிற்கு அரண். மேலும் கடமையாற்றும் வீரர்கள் வெல்லுதற்கு ஏற்ப உள்ளதே நல்ல அரணாகும். வீரர்களுக்கு தேவையான ஆயுதங்களையும் கொண்டுள்ளதும் அரணிற்கு அவசியமாகும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
முற்று ஆற்றி முற்றியவரையும் - தானைப் பெருமையால் சூழ்தல் வல்லராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும்; பற்றி யார் பற்று ஆற்றி வெல்வது அரண் - தன்னைப்பற்றிய அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாதே நின்று பொருது வெல்வதே அரணாவது. (உம்மை, சிறப்பும்மை. பற்றின் கண்ணே ஆற்றி என விரியும். பற்று - ஆகுபெயர். 'வெல்வது' என, உடையார் தொழில் அரண்மேல் நின்றது. பெரும்படையானைச் சிறுபடையான் பொறுத்து நிற்கும் துணையேயன்றி, வெல்லும் இயல்பினது என்பதாம். இதற்குப் பிறிது உரைப்பாரும் உளர். இவை ஏழு பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
சூழவல்லாரைச் சூழ்ந்து நலிந்தவரையும் தன்னகத்து நின்று காக்கவல்லவராய்க் காப்பவர் வெல்வது அரணாவது. பற்றாற்றுதல் -தாம் பற்றின இடம் விடாது வெல்லுதல்.
மு.வரதராசனார் உரை
முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை
கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண்.
Comments
Post a Comment