ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

  

குறள் 579
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை
[பொருட்பால், அரசியல், கண்ணோட்டம்]

பொருள்
ஒறுத்து - ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல்.

ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

பண்பினார் - பண்பு, தன்மை, இயல்பு கொண்டவர்

கண்ணும் -  கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

கண்ணும் -  கண்ணு-தல் - kaṇṇu-   5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல் கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல் புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).  
கண்ணு-தல்  v. tr. கண்.To see; பார்த்தல். (நாமதீப.)


கண்ணோடிப் - கண்ணோடுதல் - இரங்குதல்; விரும்பியபொருள்மேல்பார்வைசெல்லுதல்; மேற்பார்வைபார்த்தல்.

பொறுத்து - பொறுத்தல் - தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்.

ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

பண்பே பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

தலை -  சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
நம்மை வருத்தும் துன்புறுத்தும் இகழும் வெறுக்கும் அழிக்க நினைக்கும் தண்டிக்கும் இயல்புடைய ஒருவரிடம் சினத்திலும் பகையிலும் இருப்பதே பொதுவான பதிலாக இருக்கும். ஆனால் பிறரை வருத்துகிற இயல்புடைய அத்தகையவரிடத்திலும் கண்ணோட்டத்துடன் தாட்சிணியத்துடன் பொறுத்து மன்னித்து சகித்து வாழும் பண்பே சிறந்தது. 

ஏன் நம்மை வெறுக்கும் தண்டிக்கும் ஒருவரிடத்தில் கண்ணோட்டத்துடன் இருத்தல் வேண்டும்? ஏனெனில் கண்ணுக்கு கண் என்று இறங்கினால் இவ்வுலகமே குருடாக மாறிவிடும். (An eye for an eye turns the world blind - Mahatma Gandhi) என்று மஹாத்மா காந்தி கூறியதையும் நாம் இங்கு நினைவுகூறலாம். மேலும் அவரை நாம் மன்னித்து கண்ணோட்டத்துடன் இருக்கவில்லையென்றால் நாம் தான் ஒரு காழ்ப்பு என்னும் சிறையில் அகப்பட்டு கொள்வோம். அச்சிறையில் இருப்பதால் நமது ஆற்றல் சிதறும் அல்லது சிறுகும் அல்லது குறையும். அதை வேறு ஒரு ஆக்கபூர்வமான செயலில் பயன்படுத்ததலாம். 

குறள் 314 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” என்பதன் நீட்சியாகவே (அல்லது தொடர்புடையதாக) இக்குறளை நாம் காணலாம். 

நெல்சன் மண்டேலா வின் சில வரிகளை கீழே காணலாம்.
Forgiveness, depending on individual tolerance and level of wrong-doing, comes easier for some than it does for others. However, it is difficult to find a more selfless, modern-day message of forgiveness than that of Nelson Mandela’s life story. After being imprisoned in South Africa for 27 years, simply for his protest of Apartheid, one might expect that he would hold at least a small grudge. But, as he so eloquently said himself, “As I walked out the door toward the gate that would lead to my freedom, I knew if I didn’t leave my bitterness and hatred behind, I’d still be in prison.” Nelson Mandela’s quotes on forgiveness inspire many people to follow in his footsteps of compassion.

“தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் தாமறிந் துணர்க என்ப மாதோ” என்று நற்றிணைப் (116:1-2) பாடல் கூறுவது இதையே. எங்கு தண்டிக்கவேண்டுமோ அங்கு தண்டிப்பதே அரசின் கடமை. தம்மை அழிப்பவர்க்கும் கருணைக் கண்ணராக இருப்பது பண்பின் உச்சத்தைக் குறிக்கலாம், ஆனால் ஆளுவோர்க்கு சிறப்பாகாது. 

“பகைவர் தேஎத் தாயினும்
சினவா யாகுதல் இறும்பூதாற் பெரிதே” (பதிற்.32:16-7)
“பகைவர் ஆரப் பழங்கண் அருளி” (பதிற், 37:3)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒறுத் தாற்றும் பண்பினார் கண்ணும் - தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை - கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.
('பண்பினார்' என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம் 'ஒறுத்தாற்றும்', 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டு ஒரு சொல் நீர.).

மணக்குடவர் உரை
தம்மை யொறுத்துச் செய்யும் இயல்புடையார்மாட்டும் கண்ணோடிப் பொறுத்துச் செய்யும் குணமே தலையான குணம்.

மு.வரதராசனார் உரை
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை
தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.

No comments:

Post a Comment