செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

குறள் 420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்
[பொருட்பால், அரசியல், கேள்வி]

பொருள்
செவியின் - செவி - காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை.

சுவை - ஐம்புலன்களுள்நாவின்உணர்வு, உருசி; இன்பம்; இரசம்; இனிமை; கவிதையின்இரசம்; சித்திரைநாள்.

உணர்தல் - uṇar-   4 v. [K. oṇar, M.uṇar.] tr. 1. To be conscious of; to know,make out, understand; அறிதல் முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 2. To think, reflect,consider, contemplate; கருதுதல் (திவா.) 3. Toexamine, test, observe, scrutinize; ஆராய்தல் உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). 4. Toexperience, as a sensation; அனுபவித்தல் ஐந்தினையு மொன்றொன்றாப் பார்த்துணர்வது (சி. போ 11,1, 1). 5. To realize, conceive, imagine; பாவித்தல் அண்டனை யான்மாவி லாய்ந்துணர (சி. போ 9, 2, 3).  

உணரா - உணராமல், அறியாமல், ஆராயாமல், கருதாமல்

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

உணர்வின் உணர்தல் - uṇar-   4 v. [K. oṇar, M.uṇar.] tr. 1. To be conscious of; to know,make out, understand; அறிதல் முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 2. To think, reflect,consider, contemplate; கருதுதல் (திவா.) 3. Toexamine, test, observe, scrutinize; ஆராய்தல் உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). 4. Toexperience, as a sensation; அனுபவித்தல் ஐந்தினையு மொன்றொன்றாப் பார்த்துணர்வது (சி. போ 11,1, 1). 5. To realize, conceive, imagine; பாவித்தல் அண்டனை யான்மாவி லாய்ந்துணர (சி. போ 9, 2, 3).  

மாக்கள் - மனிதர்கள்; பகுத்தறிவிலார்; குழந்தைகள்; விலங்குகள்.

அவியினும் - அவிதல் - பாகமாதல்; இறுக்கத்தால்புழுங்குதல்; ஒடுங்குதல் ஓய்தல் அணைந்துபோதல்; குறைதல் பணிதல் அழிதல் காய்கனிமுதலியனசூட்டால்வெதும்புதல்; சாதல்

வாழினும் - வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

முழுப்பொருள்
செவியிற்கு சுவை ஒசைகளை கேட்பது அல்ல ஏனெனில் அவை அவற்றை செய்யவில்லை என்றாலும் மனிதரால் உயிர்வாழமுடியும். செவியிற்கு உண்மையான சுவை கற்றறிந்தோரிடம் வாய்மொழியாக கேட்கும் அறிவுச்செல்வமே. அத்தகைய கேள்வியின் சுவையை அறியாத செவிகளை கொண்ட மாக்கள் வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையே சுவை என்றும் வாயினால் வீணாக வெட்டி பேச்சுகள் பேசிப்பேசி அவற்றை சுவை என்றும் கருதினால் அவர்கள் சாகாமல் வாழ்வது ஏனோ?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர், அவியினும் வாழினும் என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?
(செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருட்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து: பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' 'என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு. கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும்' இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். வாயுணவின் என்று பாடம் ஓதுவாரும் உளர். இவை மூன்று பாட்டானும்கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு. இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.

மு.வரதராசனார் உரை
செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

சாலமன் பாப்பையா உரை
செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?.

No comments:

Post a Comment