பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

குறள் 88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]

பொருள்
பரிந்து - பரி-தல் - pari-   4 v. intr. 1. cf. spṛh. Tocovet; பற்றுவைத்தல் பண்டம் பகர்வான் பரியான்(பு. வெ 12, ஒழிபு 2). 2. To be affectionate;காதல்கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 3. To sympathise; இரங்குதல் பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ 3,8). 4. To plead, intercede; சார்பாகப் பேசுதல் நீ அவனுக்காகப் பரியவேண்டாம். 5. Tobe troubled, distressed; to suffer; வருந்துதல் பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50). 6. Topart, separate; பிரிதல் (W.) 7. To besundered; அறுதல் பரிந்த மாலை (சீவக. 1349).8. To break off; முறிதல் வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229). 9. To be destroyed; toperish; அழிதல் பழவினை பரியு மன்றே (சீவக.1429). 10. [K. pari.] To run; ஓடுதல் மாவே. . . பரிதலின் (புறநா. 97). 11. To go out; toescape; வெளிப்படுதல் பரிச்சின்ன ஞானம் பரிய(சிவப்பிர. சிவஞா. நெஞ்சு 81).--tr. 1. To fear;அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள், 502). 2.cf. pṛ. To guard with difficulty; வருந்திக் காத்தல்  

ஓம்பிஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

அற்று - அத்தன்மையது 
ஏம் - இன்பம், மகிழ்ச்சி, களிப்பு; மயக்கம்; பொன்.
அற்றுப்போதல் - முழுதும்ஒழிதல்
அற்றேம் -  ஒன்றும் இல்லாத ஒரு நிலை

என்பர் - என்பார்கள்

விருந்து - viruntu   n. [T. vindu, M.virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; அதிதி.விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா.266). 3. Newcomer; புதியவன். விருந்தா யடைகுறுவார் விண் (பு. வெ. 3, 12). 4. Newness, freshness; புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).5. (Pros.) Poetic composition in a new style;நூலுக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று.(தொல். பொ. 551.)

ஓம்பி - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

வேள்வி - யாகம்; ஓமகுண்டம்; பூசனை; கலியாணம்; ஈகை; புண்ணியம்; காண்க:களவேள்வி; மகநாள்.

தலைப்படு-தல் - talai-p-paṭu-   v. id. +.tr. 1. To unite, be in communion with; ஒன்றுகூடுதல் சிவனைத் தலைப்பட்டுச் சென்றொடுங்கும்ஊழியிறுதி (திருக்கோ. 25, உரை). 2. To meet,cross; எதிர்ப்படுதல் ஓர் வேட்டுவன் றலைப்பட்டானே (சீவக. 1230). 3. [T. talapaḍu.] To under-take, enter upon; மேற்கொள்ளுதல் ஏவல் தலைப்படவிரும்பும் (சேதுபு. துரா 2). 4. To obtain, attain;பெறுதல். சிலரதன் செவ்வி தலைப்படுவார் (குறள்,1289).--intr. 1. To advance; to improve incircumstances; முன்னேறுதல் 2. To be noble,exalted; தலைமையாதல். தலைப்படு சால்பினுக்குந்தளரேன் (திருக்கோ. 25). 3. To enter, asa character on the stage; புகுதல் கூரிய பல்லினையுடையாள் தலைப்பட்டாள் (பு. வெ 10, பொதுவி. 5,உரை). 4. To follow; வழிப்படுதல் தம்மிற்றலைப்பட்டார் பாலே தலைப்பட்டு (திருக்களிற்றுப்.2). 5. To commence; தொடங்குதல் அந்தக்காரியத்தைச் செய்யத் தலைப்பட்டான்.  

தலைப்படாதார் - மேற்கொள்ளாதார் 

முழுப்பொருள்
உலகத்தில் நிலையில்லாத இந்தப் பொருட்செல்வத்தை (பணம், நகை, வீடு, ஊர்தி/கார், செல்பேசி, மற்றும் பல) மட்டும் பற்றுடன் வளர்த்து பேணியவர் ஒரு நாள் அதனை இழப்பார் ஏனெனில் அது நிலையில்லாதது. நிலையில்லாத செல்வத்தை இழந்தால் சோர்வு வரும். ஆதலால் இழந்தவர் கூறுவார் இவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்த எல்லாவற்றையும் இழந்தேனே என்று (கஷ்டப்பட்டு சேத்தது எல்லாம் போச்சே) புலம்புவார். 

ஏனெனில அத்தகையவர் பொருட்களை சம்பாதித்தாரே தவிர மனிதர்களை சம்பாதிக்கவில்லை. நண்பர்கள், விருந்தினர்கள், உறவினர்கள் மற்றும் உணவு தேவை படுவோர்க்கு விருந்து அளித்து அவர்களை பேணவில்லை. அவ்வாறு விருந்து அளித்து பேணியிருந்தால் அவருக்கு இந்த மக்கள் வந்து உதவுவர். நான் இருக்கிறேன், எல்லாவற்றையும் மீட்டுவிடலாம் என்று ஆறுதல் சொல்வர். இப்படி மனிதர்களை சம்பாதிக்கவில்லை என்றால் தனிமைபடுத்த படுவோம். 

ஆதலால் விருந்து அளித்து உறவுகளை பேணுவதை ஒருவர் மேற்கொள்ளவில்லை என்றால் பொருள் பொருள் என்று சேர்த்து பின்பு ஒரு இழப்பு என்று வரும் பொழுது ஆறுதல் சொல்ல ஊக்கம் கொடுக்க ஒருவரும் இருக்க மாட்டார்கள். 

விருந்து என்பது மனதில் இருந்து வர வேண்டும். அதுவே நல்லியல்பு. விருந்து என்பது வேள்வி போன்றது. வேள்வியின் பயன் வேள்வி முடிந்த உடன் வருவதில்லை. அப்புண்ணியம் தக்க நேரத்தில் வரும். அதுப்போல விருந்தின் பயன் தக்க நேரத்தில் வந்து உதவும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் - நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார். ("ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.).

மணக்குடவர் உரை
விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார், வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர்.

மு.வரதராசனார் உரை
விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.

சாலமன் பாப்பையா உரை
விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
இருக்கும்போது உபசரிக்காதோருக்கு இழக்கும்போது வலிமிகும்.

No comments:

Post a Comment