குறள் 68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
தம்மின் - தன்னை விட
தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.
மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.
அறிவுடைமை - உண்மை அறிவுடையவனாதல்.
மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்சொல்.
நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.
உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
எல்லாம் - முழுதும்
இனிது - iṉitu இனி-மை. n. 1. That which is sweet, pleasing, agreeable; இன்பந்தருவது. இனிதுறுகிளவியும் (தொல். பொ 303). 2. That which is good; நன்மையானது.--adv. Sweetly, favourably; நன்றாக புலியூர்ப் புக்கினி தருளினன்(திருவாச. 2, 145).
முழுப்பொருள்
தன்னுடைய பிள்ளைகள் தன்னைவிட அறிவுமிக்கவர்களாக இருந்தால் அது இந்த உலகத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆதலால் அதனை கண்டு மன்னில் உள்ள எல்லா உயிர்களும் மகிழ்ச்சி அடையும் பயன்பெறும்.
தன்னை விட ஒருவன் அறிவு பெறுவதை ஒருவன் விரும்பவில்லை என்றால் என்ன நன்மை? ஏனெனில் தந்தை 5 என்றால் மகன் 4. அவனுடைய மகன் 3. அவனுடைய மகன் 2. அவனுடைய மகன் 1. அவனுடைய மகன் 0. கடைசியில் பூஜ்யத்துக்கு சென்று முடியும். இன்னும் தேய்ந்து -1,-2 என்று போய்க்கொண்டே இருக்கும். உலகம் கெடும். அவன் மேலும் இரண்டுபேரை கெடுப்பான். அது உலகத்திற்கு நல்லது அல்ல.
அதுவே தந்தை 5, மகன் 6, அவனுடைய மகன் 7 என்று போய்க்கொண்டு இருந்தால் அது நன்மையே பயக்கும். ஏனெனில் அவனால் இந்த சமுதாயத்திற்கு கேடு வராது. இப்படியே எல்லோரும் செய்தால் உலகம் மேம்படும். அதுமட்டும் அல்லாது அவன் மேலும் ஓர் இருவரை மேம்படுத்தக்கூடும். அவனை பார்த்து அவன் பின்பற்றிய வழி (குணங்களை) பார்த்து சில பேர் தன்னை மேம்படுத்துக்கொள்வர். ஆதலால் உலகம் இன்னும் மேம்படும்.
எனவே, ‘மாநிலத்து மக்களுக்கெல்லாம் தம்மை விட இனிமையைத் தரும்’ என்று ஒரு பொதுநல நோக்கிலே கூறப்பட்டிருப்பதாகக் கொள்ளவேண்டும். இதில் ஒரு பெற்றோர்க்கு தம்முடைய நலத்தைவிடவும், சமுதாயநலத்தில் அக்கரை இருக்கவேண்டும் என்பதை உள்ளுரையாகச் சொல்லியிருப்பதை கவனிக்கவேண்டும்.
அதனால் தான் "சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" என்று புறநானூறு-இல் கூறினார்கள் போலும்.
ஏன் கல்வியை விட அறிவை சொன்னார் திருவள்ளுவர்? ஏனெனில் கல்வி என்பது பாடசாலைகளிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளும் கற்பவை. ஆனால் அறிவென்பது நாளும் கற்று அனுபவத்தால் பெற்று வளர்த்துக்கொள்ளாது. "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்" என்பது வள்ளுவன் வாக்கு.
பிள்ளைகளுக்கு பெற்றோர்களை விட சிறந்துவிளங்குவது அழுத்தமா? இல்லை. ஏனெனில் நல்ல சூழ்நிலைகளில் பிறந்தபிள்ளைகளுக்கு அவர்களுக்கு தேவையான பெரும்பாலானவை /எல்லாம் கிடைக்கிறது. அவர்கள் செய்யவேண்டியது செயல் மட்டுமே. சோம்பி திரிவது அல்ல. மேலும் Fixed Mindset இருக்கக்கூடாது. ஊதியத்திற்கு ஒரு நிம்மதியான வேலை, இருப்பதற்கு ஒரு வீடு என்று சுயநலமாக இருக்கக் கூடாது. Growth Mindset கொண்டிருக்கவேண்டும். பெருங்கனவு கண்டு நல்ல பெருஞ்செயல் வாய்ப்புகளை நோக்கி செல்ல வேண்டும். ”குறள் 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்” என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் Bar-Raiser ஆக இருக்க வேண்டும். பிள்ளைகளும் வருங்காலத்தில் அப்படித் திகழ வேண்டும். இவ்வாறு எல்லோரும் இருந்தால் இவ்வுலகம் நன்மை பெறும்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பொதிகை தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு நேர்க்காணலில் @14:15 இவ்வாறு கூறிகிறார் (சுட்டியைத் தட்டுக)
கேள்வி: தலைமுறை இடைவெளி அதிகரித்து வருகிறது?
ஜெயகாந்தன்: இப்போது மட்டுமா? எல்லா தலைமுறைகளிலும் உண்டு. அது இயல்பானது. என் பிள்ளை என்ன மாதிரி இருக்கணும்னு எதிர்ப்பார்க்கக் கூடாது. அதனால அவன்கிட்ட நான் சண்டை போட்டுக்கொண்டு இருக்க கூடாது. எங்கெங்கெல்லாம் என்ன விட மாறுபட்டு இருக்கிறான் என்று பார்த்து நான் மகிழ்ச்சி அடைய வேண்டும். என்னிடம் இல்லாதவை எது அவனிடம் இருக்கு? தம்மின் தம்மக்கள் அறிவுடையர் என்று உணர்தல் வேண்டும். அது இல்லாத பொழுது இரண்டு தலைமுறைக்கு நடுவே இடைவெளி ஏற்ப்படதான் செய்யும். நல்லப் பெற்றோர்கள் அதை செய்வதில்லை.
விசுவாமித்திரர் ராமருக்கு அம்புகளை கொடுக்கிறார். அஸ்திர ப்ரியோகங்கள் கற்றுக்கொடுக்கிறார். பிறகு தாடகை வதம் நிகழ்கிறது. மற்ற வதங்கள் நடைபெறுகிறது. பிறகு மிதிலைக்கு கூட்டிக்கொண்டு போகிறார் விசுவாமித்திரர். ராமரை அறிமுகம் செய்கிறார். அப்பொழுது விசுவாமித்திரர் கூறுகிறார் "ராமனுக்கு நான் தான் அஸ்திர ப்ரியோகங்கள் எல்லாம் கற்றுக்கொடுத்தேன். ஆனால் அந்த அஸ்திரங்கள் எல்லாம் நான் கொடுத்தது. இவன் அந்த அஸ்திரங்களை எல்லாம் ப்ரியோகம் செய்யும் பொழுது எனக்கு பொறாமையாக இருக்கிறது. ஏனெனில் இவை நான் கொடுத்த அஸ்திரம்தானா என்று எனக்கே சந்தேகம் வருகிறது. "ஈந்தேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குனவால்" என்று விசுவாமித்திரர் கூறுவதாக கம்பர் இராமாயணத்தில் கூறுகிறார்.
கம்பராமாயணத்தின் முழுப்பாடல்
ஆய்ந்து ஏற உணர் - ஐய!-
அயற்கேயும் அறிவு அரிய;
காய்ந்து ஏவினன். உலகு அனைத்தும்
கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏறச் சுடுகிற்கும்
படைக் கலங்கள். செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க.
இவற்கு ஏவல் செய்குனவால்.
கம்பராமாயண பாடலின் பொருள்
ஆசிரியர் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால், அந்த ஒன்றில் இருந்து பத்தாக, நூறாக படித்துக் கொள்ள வேண்டும். எல்லாமா ஆசிரியர் சொல்லித் தருவார். மாணவன்தான் தேடி பிடித்து படிக்க வேண்டும்.
படித்தால் மட்டும் போதாது, செய்து பார்க்க வேண்டும்.
இராமனுக்கு வில் வித்தை எல்லாம் சொல்லித் தந்தவர் விஸ்வாமித்ரர். ஜனகனிடம் , இராமனை அறிமுகப்படுத்தும் போது, அவர் சொல்கிறார்
"நான் தான் இந்த அஸ்திர பிரயோகங்களைச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால், அந்த படைக் கலன்களை இராமன் கையாளும் போது, எனக்கே பயமாக இருக்கிறது..அப்படி ஒரு வேகம், இலாகவம் " என்று கூறுகிறார்.
அம்புகளை கொடுத்தது நான் தான். மந்திரங்களை சொல்லிக் கொடுத்தது நான்தான். ஆனால், இராமன் அவற்றை விடும்போது, எனக்கு மனம் நடுங்குகிறது என்கிறார்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
தம் மக்கள் அறிவுடைமை - தம் மக்களது அறிவுடைமை; மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது - பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம். (ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது ஈண்டு அறிவுடையார் மேல் நின்றது. அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
தம்மக்க ளறிவுடையாரானால் அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம்
மு.வரதராசனார் உரை
தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
சாலமன் பாப்பையா உரை
தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பிள்ளைகள் நம்மினும் கல்வியில் உயர்ந்தால் நாட்டுக்கு நல்லது.
English Meaning - As I taught a kid - Rajesh
The generation after our generation should have more knowledge as it will be good for the world and the organisms because knowledge put into action leads to progress and betterment of the world.
Questions that I ask to the kid
How should our next generation be (Than us) ?
Why should our next generation be better than us?
What is the benefit of next generation be better than us? Who all benefits from that?
No comments:
Post a Comment