ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

குறள் 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]

பொருள்

ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஒழுக்கி - ஒழுக்குதல் - ஒழுகச்செய்தல்; நடப்பித்தல், வார்த்தல்; நீளஇழுத்தல்; 
ஒழுக்கு - ஒழுகுகை; நீர்முதலியனஓடுகை, நீரோட்டம்; வரிசை; நடைமுறை; நன்னடை, ஆசாரம்.துளித்தல்.

அறன் - அறம்  - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

இழுக்கு - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு
இழுக்காறு - தீநெறி, தீயொழுக்கம்
இழுக்குதல் - தவறுதல்; வழுக்குதல் இழத்தல் தளர்தல் துன்புறுதல் தள்ளிவிடல்; மறத்தல் பின்வாங்கல்.

இழுக்கா - பிழையாத ; தவறாத 

இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை.

நோற்பாரின் - நோற்பார் - தவம்செய்பவர்

நோன்மை - பொறுமை; வலிமை; பெருந்தன்மை; தவம்.

உடைத்து - இருக்கும், உண்டு 

முழுப்பொருள்
இல்லறத்தில் இருப்போர் தனது அறங்களை பிழையாது செய்யவேண்டும். அப்படி தவறாது அறங்களை செய்வது மட்டுமின்றி பிறரையும் (மற்ற இல்லறத்தில் இருப்போரையும், துறவறத்தில் இருப்போரையும்) அவரவர் வழியில் அவரவர் அறங்களை ஒழுகி வாழ அனுமதித்து அவர்களுக்கு இடையூறாக இல்லாமல் இருப்பானாயின் அவன் துறவறத்தில் தவம்செய்கிறவர்கள் பெறக்கூடிய பொறுமையும் வலிமையும் பயனையும் இல்லறத்திலேயே பெறுவான். 

துறவறத்தில் இருப்போர் இல்லறத்தில் இருப்போரை பற்றி கவலை பட மாட்டார்கள். ஆனால் இல்லறத்தில் இருப்போர் துறவறத்தில் இருப்போரையும் போற்றி பாதுக்காக்க வேண்டும். ஆதலால் தான் இல்லறத்தில் இருப்பவர்கள் துறவறத்தில் இருப்பவர்களை அவரவர் அறங்களை பேண அனுமதிக்கவேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். துறவறத்திக்கு சென்றவர்களை மறுபடியும் இல்லறத்திற்கு பிடித்து இழுக்கக்கூடாது.

ஒப்புமை
”அறநெறி பிழையா தாற்றின் ஒழுகி” (மதுரைக் 500)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (பசி முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.).

மணக்குடவர் உரை
பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து. ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத்தினும் வலியுடைத்தென்றது.

மு.வரதராசனார் உரை
மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

சாலமன் பாப்பையா உரை
மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நல்லவற்றுக்குத் துணையிரு. வேறு நோன்பே தேவையில்லை.

Thirukkural - Management - Married Life
In addition to possessing love and virtuous practices, a husband has to lead a righteous life. For a successful married life, it is not enough if a husband leads a virtuous life, but he also has to help others lead a virtuous life. When a husband leads a righteous life himself and he helps others lead righteous life that, both leading and helping others, is better or greater than doing penance, according to Valluvar in Kural 48.

His is the greater penance who helps penance
Not erring in his worldly life.

Not going astray or committing any wrong act in his own life and not allowing the people under his care to go astray or commit wrong acts are truly too challenging for a human being. But that sort of challenge has its own rewards for a married person. 

No comments:

Post a Comment