பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

குறள் 1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு
[பொருட்பால், குடியியல், நாணுடைமை] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பிறர் -  piṟar   n. id. Outsiders, strangers;அன்னியர். பிறர்க் கின்னா முற்பகற் செய்யின் (குறள்,319).

பழியும் - பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

பழியும்  - பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

நாணுவார் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்

நாணுக்கு - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்

உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.

பதி - நகரம்; பதிகை; நாற்று; உறைவிடம்; வீடு; கோயில்; குறிசொல்லும்இடம்; ஊர்; பூமி; குதிரை; தலைவன்; கணவன்; அரசன்; மூத்தோன்; குரு; கடவுள்.
உறைபதி - உறைவிடம், இருப்பிடம்.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
தனக்கு வந்த பழிக்கு நாணுவது இயல்பானது. ஆனால் பிறருக்கு வரும் பழியையும் தன் பழிப்போல் நினைத்து நாணுவார் என்றால் அவரிடத்திலே  இவ்வுலகத்தில் நாணம் உள்ளது என்று கூறுகிறார் திருவள்ளுவர்.  

ஏனெனில் தனக்கு பழி வந்தால் மட்டும் நாணுவது ஒருவித சுயநல மனப்பான்மை. அவன் பிரச்சனை அவனது என்று இருப்பது பொறுப்பை தட்டிக்கழிப்பது போன்று ஆகும். 

பிறர் தவறு செய்தால் அறிந்தோ அறியாமலோ தானும் அதற்கு ஏதோ ஒரு வகையில் ஒரு காரணம் என்று உணர்வதே அறிவு. உதாரணமாக ஒரு குடும்பத்திலோ அல்லது ஒரு நிர்வாகத்திலோ அல்லது குழுவிலோ ஒருவர் தவறு செய்தால் அதற்கு நாமும் ஒருவகையில் காரணமே. ஏனெனில் அந்தச் சுற்றத்தில் நாமும் இருந்தோம். நாம் தேவையான அளவு சரியான பாதையில் அவர்களை வழிநடத்தவில்லை. நாம் சரியாக வழிநடத்தி இருந்தால் அவ்வப்போது அவர்கள் செய்வதை அவர்களிடம் இருந்தோ பிறரிடம் இருந்தோ கேட்டு அறிந்து ஆராய்ந்து சரிபார்த்து இருந்தால் தவறின் வேர்களை அறிந்து அவை வளரும் முன்பே களையலாம். குறைந்த பட்சம் நடந்த தவறுக்கு பரிகாரமாக தவறின் வேர்களை ஆராய்ந்து அவற்றை அறுக்க வேண்டும். மீண்டும் நடக்காமல் இருக்க தவறுகளில் இருந்து மீள தேவையானவற்றை செய்ய வேண்டும். 

இதனை தார்மீக தலைமைப் பண்பு என்பர் நிர்வாக மேலாண்மையில். அதாவது Ethical Leadership. இன்னொரு வகையில் Ownership அல்லது பொறுப்பேற்பு எனலாம். 

ஒருவர் வெற்றிபெற்றால் அவர் நமது சொந்தம் என்றும் நண்பர் என்றும் உறவு கொண்டாடுகிறோம் அல்லவா? அப்படி என்றால் அவர் தவறு செய்தால் அதற்கும் நாம் பங்கெடுக்க வேண்டும் அல்லவா? 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

பரிமேலழகர் உரை
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர். (ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல். அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியைப்போல அஞ்சி நாணுமவர்களை நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார். இது தம்பழிக்கு அஞ்சி நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சி நாண வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.

சாலமன் பாப்பையா உரை
தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who feels ashamed for not just his mistakes but also for other mistakes (for e.g., siblings, family members, friends, etc. ) is the place where greatness lies in this world. Only because of them the thing call shame still exists. Only because of those people wrong doings are reduced not just self but also the people around them making the world a better places. hence, we say greatness lies in them in this world. For e.g., there are many leaders in the world (e.g., Gandhi, Martin Luther King etc.) who feel ashamed of the untouchability, racial discrimination etc that exited in the world and exists in the world. Only because of them it gained more attention and slowly those are reduced. Hence, we can say greatness lies in them.

Questions that I ask to the kid
Where does greatness lies in this world?
Why are people who are ashamed of their mistakes and the mistakes of others so important to this world?

No comments:

Post a Comment